நிஜ சாட்டைக்குப் பதிலாக பஞ்சு சாட்டை… ரத்தம் வரலையேப்பா… அண்ணாமலையை கோமாளியாக்குறாங்கப்பா

லண்டனில் போய் அரசியல் படித்து வந்த பிறகு அண்ணாமலையிடம் மிகுந்த மெச்சூரிட்டி தென்படுகிறது என்று சீமானே பாராட்டியிருந்தார். அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டும் அளவுக்கு சவுக்கடி போராட்டம் நடத்திவிட்டார் அண்ணாமலை. இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அண்ணாமலையை அநியாயத்துக்கு லந்தடிக்கிறார்கள். பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலையால் வெளியேற்றப்பட்டு தற்போது அ.தி.மு.க.வில் தஞ்சம் அடைந்திருக்கும் காயத்ரி ரகுராம், ‘’Bro சாமி உங்களை மன்னிக்க மாட்டார். பெண்களின் வீடியோ ஆடியோ, தங்கக் கடத்தல், மணல் செங்கல் கல் கடத்தல், டிரான்ஸ்பார்மர் […]
பச்சை வேட்டி, சாட்டையடி அண்ணாமலைக்கு நேர்த்திக்கடனா..? திசை மாற்றும் நாடகங்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசை திருப்பது போன்று பச்சை வேட்டை சாட்டையால் அடி, காவடி எடுக்கப்போகிறேன், செருப்பு போட மாட்டேன் என்றெல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. அண்ணாமலை சாட்டை அடித்து கொள்வதும், ஒருமண்டலம் செருப்பில்லாமல் நடப்பதும் அவரது மனைவி அகிலாவும் அவரது அப்பாவும் நடத்திய யாகத்தில் பிராமண புரோகிதர்கள் சொன்னது பரிகாரம். அப்படி செய்தால் மட்டுமே அண்ணாமலை ஃபைல்ஸ், மச்சானுடைய […]
பத்திரிகையாளர்களை சந்தித்த மிஸ்டர் தைரியசாலி… குட் பை மன்மோகன் சிங்

ஆட்சி குறித்தும் புதிய சட்டங்கள் அறிமுகம் குறித்தும் நேரடியாக பிரதமரை சந்தித்துப் பேசவும், விளக்கம் பெறவும் முடிந்தது என்றால், அது கடைசியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டம் தான். அதன் பிறகு 11வது ஆண்டாக பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, இது வரை ஒரே ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்தது இல்லை என்பது தான் வரலாற்றுத் துரோகம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு மன்மோகன் சிங் மீது ஏகப்பட்ட அவதூறுகளை அள்ளித் தெளித்தார்கள். 2ஜி, நிலக்கரி […]
பல்கலை. மாணவி வன்கொடுமை! சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழியை தற்போது நினைவுகூர வேண்டியுள்ளது. ஆம் அண்ணா பல்கலைக்கழக மாணவி தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானா சென்னை கோட்டூர்புர காவல்நிலையத்தில் புகார் அளித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த 2ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வரும் மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி தனது காதலனுடன் […]
நூறு நாள் திட்டத்தில் சீமான் தாயார் வேலை செய்த ஆதாரம். என்ன சொல்கிறார் சீமான்..?

நூறு நாள் வேலை திட்டத்தில் சோம்பேறிகள் தான் இருக்கின்றனர். எல்லோரும் தண்டத்துக்கு சம்பளம் பல்லாங்குழி விளையாடுகிறார்கள். இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால்தான் விவசாயமே அழிந்து போனது என்று கடுமையாக விமர்சனம் செய்துவருபவர் சீமான். இந்த நிலையில் அவரது தாய் அன்னம்மாள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்கச் சென்றது சர்ச்சையானது. நூறு நாள் வேலை திட்டம் கேட்டு மனு கொடுக்க வந்த சீமான் அம்மா அன்னம்மாள் ஒரு பொலிரோ காரில் ஏறி செல்லும் காட்சிகளை வெளியிட்ட […]
தோழர் நல்லகண்ணுக்கு வயது 100… தமிழகத்தின் பெருமைமிகு அரசியல் அடையாளம்

அரசியல் என்றாலே சாக்கடை என்று எண்ணும் இன்றைய தலைமுறைக்கும் ஒற்றை நம்பிக்கை மனிதராக நிற்பவர் தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26ம் தேதி தான் தோழர் இரா.நல்லகண்ணுவின் பிறந்தநாள் என்பது அதிசய ஒற்றுமை. கொள்கைகளில் வித்தியாசம் வேறுபாடு இருந்தாலும் அனைத்து கட்சியினரும் மதிக்கும் ஒரே தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. இந்த வயதிலும் போராட்ட களத்தில் போய் நிற்கிறார். பணம், அதிகாரம், புகழ் போன்ற எதையும் தன் தலைக்குள் […]
மாவுக்கட்டு வேண்டாம், சுட்டுத்தள்ளுங்க… இன்னும் எத்தனை மாணவிகள்..? இன்னொரு குற்றவாளி எங்கே..?

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை படிக்கும் ஒவ்வொரு நபரையும் அதிரவைக்கிறது. மாணவி நண்பருடன் தனியே இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காட்டி டிசி தரவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். மாணவியின் செல்போனை பறித்து அதிலிருந்து மாணவி தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து, அவருக்கு அந்த வீடியோ அனுப்பிவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். பணம் தருகிறோம் என்று இருவரும் கெஞ்சியபோதும் அவன் விடவில்லை. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து […]
காலமானார் பொட்ட அஜித் ஹேஸ்டேக் பூகம்பம். விஜய்க்கு எதிராக தி.மு.க. வேலையா..?

பனையூர் வீட்டில் வைத்து தந்தை பெரியார் படத்துக்கு நடிகர் விஜய் மாலை போட்ட நேரத்தில் பி.வி.சிந்து திருமணத்தில் அஜித் குடும்பத்துடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த நேரத்தில் சங்கரன்கோவிலில் விஜய் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட செய்திகள் வெளியாகின. அதை கண்டுகொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் கொடூரத்துக்கு ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டி விஜய் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, விஜய்க்குக் குடும்பம் கிடையாது. அதனால் அவரும் அவரது ஆட்களும் பாலியல் குற்றவாளிகள் […]
சவுக்கு சங்கரை ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க. தைப் பொங்கலுக்கும் சிறையா..?

தி.மு.க. ஆட்சி மீது தொடர் விமர்சனம் வைத்துவரும் சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் அடுத்த வழக்கில் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு அவர்களுக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு போட்டார் இந்த வழக்கு வராகி சம்பந்தப்பட்டது. இதற்காகவே சென்னையிலிருந்து […]
எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுக்கும் டிடிவி தினகரன். டெல்லி புது அசைன்மென்ட்..?

சமீபத்தில் டெல்லிக்குப் போய் வந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு பா.ஜ.க. தலைமை புதிய அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்தலில் தான் நிற்காமல் ஒதுங்கிக்கொண்டு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி தினகரன் கொடுத்திருக்கும் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. வரும் 2026 தேர்தல் பற்றி பேசியிருக்கும் டிடிவி தினகரன், ‘’அதிமுக-வில் பெரும்பான்மையானவர்கள் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது என இபிஎஸ் எடுத்த முடிவு மிகப்பெரிய அரசியல் தவறு என நினைக்கின்றனர். […]

