மோடி தாக்குதலுக்கு இந்தியா முழுக்க ஆதரவு… பணியுமா பாகிஸ்தான்..?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து பிரதமர் மோடி ஏற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் வரவேற்றுள்ளனர். நடப்பது தீவிரவாதம் அல்ல இந்திய ராணுவத்தின் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த தாக்குதல் குறித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து கிராமவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை உறுதி […]
ஆபரேஷன் சிந்தூர்… மோடியின் செம ஷார்ப் தாக்குதல்

இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் எந்த சிரமமும் இன்றி செய்து முடித்திருக்கிறது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்என்று பிரதமர் மோடி அறிவிப்பு செய்திருந்தார். இந்தியா முழுக்க நேற்று போருக்கான ஒத்திகைபார்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மண்ணில், ‘ஆபரேஷன் சிந்தூர்’என்ற பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக்குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர்படுகாயம் அடைந்ததாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் […]
சீமான் காவலாளி பாணியில் விஜய் பவுன்சர் கைது..? துப்பாக்கி சர்ச்சை

மதுரையில் நடிகர் விஜய்யை சந்திக்க முயன்ற இன்பராஜ் என்பவரை தடுத்து நிறுத்திய விஜயின் பாதுகாப்பினர், அவரது தலையில் துப்பாக்கியை வைத்த சம்பவம் வைரலாக மாறியிருக்கிறது. பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவது குற்றம் என்பதால் விஜய் பவுன்சர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரத்தில் காவலாளி கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதே பாணியில் எந்த நேரமும் விஜய்யின் பவுன்சர் கைது செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் துப்பாக்கி […]
அமலாக்கத்துறை சீரியஸ் ரெய்டு… சிக்கலில் தி.மு.க. பிளாக்ஷிப்

டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டிருக்கிறது. அதனால், இந்த பிரச்னை முடிவுக்கு வரும் வரையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறாது என்றே கருதப்பட்டது. இதை பொய்யாக்கும் வகையில் இன்று காலைசென்னை, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவுக்காக பிளாக்ஷிப் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நேரத்தில், பணப்பரிமாற்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை குறிவைத்து இந்த சோதனை […]
ராஜ்யசபா சீட், விஜய் கூட்டணி..? விஜயகாந்த் கட்சியின் தேர்தல் தூண்டில்

வரும் 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கடசிகள் சிந்தாமல் சிதறாமல் இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் உறவு வைத்துள்ளன. இப்போது பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் அடுத்தகட்ட நகர்வு குறித்து குழப்பத்தில் உள்ளன. இந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா சீட் விவகாரத்தை எழுப்பி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தே.மு.தி.க.வின் பொருளாளர் சுதீஷ். அவர் கொடுதிருக்கும் ஒரு பேட்டியில், ‘’2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அவர்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக […]
செங்கோட்டையன் டோட்டல் சரண்டர்…. செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ் செம அறிவிப்பு

பா.ஜ.க. கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு இன்று அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களைத் தாண்டி பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று டோட்டல் சரண்டர் ஆகியிருக்கிறார். செங்கோட்டையன் இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஏதேனும் பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம், ஹாசனூரில் நடைபெற்றா மே தினக் கூட்டத்தில் […]
பக்கா அரசியல்வாதியாக மாறிய விஜய்… அடேங்கப்பா கூட்டம்

கடந்த நாலைந்து நாட்களாகவே விஜய்யின் மதுரை வருகை பற்றி செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் சூட்டிங் சென்றதும், விமானநிலையத்தில் கூடிய மிகப்பெரும் கூட்டமும், அவரது முதல் செய்தியாளர் சந்திப்பும் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளன. நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதன்முதலாக பேட்டியளித்த நடிகர் விஜய், ‘நான் மதுரைக்கு ஜனநாயகன் படம் வேலைக்காக செல்கிறேன். கொடைக்கானலில் ஒரு சூட் பார்க்கப் போகிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணுக்கு, வேறு […]
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி..? வைரலாகும் மோடி கார்ட்டூன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்’ என்று ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருந்த பா.ஜ.க. இப்போது, ’மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது. இது ராகுல் காந்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொண்டாடுகிறார்கள். அதேநேரம், இதில் பா.ஜ.க. நிறைய உள்ளடி வேலைகள் செய்யும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். இது குறித்து பேசும் காங்கிரஸ்கட்சியினர், ‘’ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எனும் அறிவிப்பு 100% பீகார் […]
சீரியஸாகும் அண்ணாமலையின் கோஷ்டி அரசியல்… விஜய்யை அழைக்கும் நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த வரை வேறு யாரும் அறிக்கை தர முடியாது. பேட்டி கொடுக்க முடியாது. அப்படி யாராவது செய்தால் அண்ணாமலை டீம் வம்பு செய்து சந்திக்கு இழுத்துவிடும். ஆனால், நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும்போது, எல்லா விஷயங்களிலும் அவரை முந்திக்கொண்டு அறிக்கை விடுவது நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. இன்று அண்ணாமலை, ‘’சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், […]
தம்பி நல்லா காமடி பண்றாப்ல… விஜயபிரபாகரன் அண்ணி யாரு தெரியுமா?

எல்லோரும் எதிர்பார்த்தபடியே தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகச் நியமிக்கப்பட்டுள்ளார். கழகத் துணைச் செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்குப் பிறகு விஜயபிரபாகரன் பேசிய விவகாரங்கள் எல்லாமே காமெடி வைரலாகிறது. ‘’ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த பதவியை எனக்கு தொண்டர்களே கொடுத்தார்கள். அண்ணியாரின் தியாகத்தை எல்லோரும் அறிவார்கள். அரசியலில் முதன் முதலாக பேண்ட் அணிந்தது நான். என்னை காப்பியடித்தே […]

