ராகுல் காந்தியை சரிக்கட்டினாரா கனிமொழி..? மதுரையில் போஸ்டர் யுத்தம்

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று சந்தித்துப் பேசி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், மதுரையில் திமுகவின் தளபதி பற்ற வைத்த தீ போஸ்டர் யுத்தமாக மாறியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘‘கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு […]
ஸ்டாலினுக்கு கரன்ட் ஷாக்… எடப்பாடி பிரச்சாரம் ஆரம்பம்

மாதம்தோறும் கரன்ட் பில் கட்டுவதற்கு உத்தரவாதம் கொடுத்த ஸ்டாலின் அரசு, இதுவரை தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, இதையே முதல் அடியாக எடுத்துவைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா […]
ராமதாஸ், பிரேமலதாவுக்கு விஜய் வெயிட்டிங்… தவெக அரசியல் பரிதாபம்

அரசியலில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறோம், கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறோம் என்றெல்லாம் வீரம் பேசிய விஜய் இப்போது, மற்ற அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்ட ராமதாஸ், பிரேமலதாவுக்காக வெயிட் பண்ண வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறார். திமுகவும், அதிமுகவும் பலமான கூட்டணியாக மாறியிருக்கும் நிலையில், தனியே நிற்பது தவெகவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தடுமாறுகிறார் விஜய். காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கூட்டணிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று விஜய்யை நம்பவைத்த ஆதவ் அர்ஜூனாவும், ஜான் ஆரோக்கியசாமியும் இப்போது ராமதாஸ், […]
செங்கோட்டையன், பன்னீருக்கு தினகரன் தூண்டில். பாஜக திருவிளையாடல்

டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. திமுகவில் இணைந்துவிடாமல் பன்னீரைத் தடுத்த தினகரன் அடுத்ததாக செங்கோட்டையனை விஜய் கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சி எடுத்திருக்கிறார். செங்கோட்டையனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலே தினகரன், ‘’அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தவெகவில் எதற்காக அவர் சேர்ந்துகொண்டார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். செங்கோட்டையன் பற்றி டிடிவி தினகரன், “நானும் செங்கோட்யைனும் கடந்த […]
விஜய்யை விரட்டும் ராமதாஸ்…? மீண்டும் ஜனநாயகனுக்கு கெட் அவுட்

பிப்ரவரி முதல் வாரம் ஜனநாயகன் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று ஆசைப்பட்ட விஜய் ரசிகர்கள் நொறுங்கும் அளவுக்குத் தீர்ப்பு வந்துள்ளது. அதேநேரம், கூட்டணிக்கு யாருமே இல்லாமல் தடுமாறிய விஜய்க்கு, ஒரு நல்ல செய்தியாக டாக்டர் ராமதாஸ் தூது அனுப்பியிருக்கிறார். விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு […]
பாஜக ஸ்லீப்பர்செல் மாணிக்கம் தாகூர்..? டவுட் கிளப்பும் உடன்பிறப்புகள்

திருச்சி வேலுச்சாமி, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் தொடர்ந்து திமுகவுடன் மல்லுக்கட்டி வந்த நிலையில், மதுரையில் திமுக எம்.எல்.ஏ. தளபதி ஆவேசமாகப் பேசியது பெரும் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த செல்வப்பெருந்தகை, ‘’மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய […]
விஜயபிரபாகரன் 30க்கு ஆசை. தனித்து நின்று ஜெயிக்கப் போகிறாரோ..?

கூட்டணி என்பது விட்டுக்கொடுத்து நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் நிரந்தரக் கூட்டணி அமையும், மக்களிடமும் நம்பிக்கை பெற முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகம் தொகுதிக்கு ஆசைப்பட்டு வீணாகப் போன அனுபவம் இருந்தாலும் பிரேமலதா இன்னமும் திருந்தவில்லை. அதனாலே இன்னும் கூட்டணி அமையவில்லை. அவர்தான் அப்படி என்றால், அவரது மகனும் அதே பாதையில் பேசுவதைப் பார்த்து தேமுதிகவினர் அதிர்ந்து நிற்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக யாருடன் […]
ஜனநாயகன் விஜய்க்கு இத்தனை பயமா..? அம்பலப்படுத்தும் அதிமுக

செயற்குழுக் கூட்டம் என்றதும் தன்னுடைய ஜனநாயகன் படத்துக்கு செய்யப்படும் இடையூறு மற்றும் சிபிஐ பற்றி விஜய் ஆவேசமாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்,, வழக்கம்போல் திமுக எதிர்ப்பு பற்றி மட்டுமே பேசியது அவரது ஆதரவாளர்களை அதிரவிட்டுள்ளது. அதேபோல், கரூர் சம்பவத்தில் ஆதரவாக இருந்த அதிமுகவை ஊழல் கட்சி என்று பேசியதற்கு கடுமையான எதிர்விளைவுகள் உருவாகியுள்ளன. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’அதிமுகவை ஊழல் கட்சியெனத் திருவாய் மலர்ந்தருளிவிட்டார் விஜய். அதேநேரம் அதிமுகவில் ஊழல் செய்து, சிறைத்தண்டனை பெற்ற […]
பன்னீரிடமிருந்து தர்மர் எஸ்கேப். எடப்பாடி அடுத்த ஆபரேஷன் சசிகலா..?

எந்த காலகட்டத்திலும் தன்னைவிட்டு பிரியவே மாட்டார் என்று தர்மர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் ஓபிஎஸ். ஏனென்றால், யாரென்றே தெரியாத ஒருவரை எம்.பி.யாக்கி அடையாளம் கொடுத்தார். அப்படிப்பட்ட ஆதராளரே இன்று எடப்பாடி பக்கம் தாவி வந்துவிட்டார். அது சரி, யார் அந்த தர்மர்..? அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் என பலர் ராஜ்யசபா வேட்பாளராக தங்களை அறிவிக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் […]
ஓபிஎஸ், பிரேமலதா வேண்டவே வேண்டாம்…. திமுக புள்ளிகள் போர்க்கொடி

திமுக கூட்டணி ஏற்கெனவே ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆட்கள் புதிதாக யாரையும் கட்சிக்குள் இணைக்க வேண்டாம். பிரேமலதா திமுக கூட்டணிக்கு வருவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. அவர் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்துப் பேசும் திமுகவினர், ‘’இப்போது திமுக அமைச்சரவையில் 3-ல் 1 பங்கு பேர் அதிமுக-வில் இருந்து வந்தவர்கள் தான். அதோடு புதிதாக திமுகவில் வந்து சேர்ந்து கொண்டிருக்கும் அத்தனை பெருந்தலைகளுமே தங்களுக்கான தேர்தல் வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டே […]

