பட்ஜெட்டில் இரண்டு பேராபத்து… எச்சரிக்கும் சமூகநல ஆர்வலர்கள்

நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது ஆண்டாக தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் இரண்டு பேராபத்து இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அவற்றில் ஒன்று தனியாருக்குச் செல்லும் கனிமவளம் இரண்டாவது ஆர்.டி.ஐ. சட்டத்துக்கு மூடு விழா. இதுகுறித்துப் பேசும் சமூகநல ஆர்வலர்கள், ‘’மத்திய அரசு ஏற்கெனவே அணுக்கனிமம் முதல் அரியவகை முக்கியக் கனிமங்கள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கனிமங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஏலமிடும் உரிமையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது. தமிழ்நாடு அரசு […]
முதல்வராக விஜய் சபதம்… ஸ்டாலின் ஸ்டைலில் மூன்றாம் ஆண்டு கடிதம்

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இன்று விஜய் கொடி ஏற்றிவைப்பார், சிறப்புரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டாலின் ஸ்டைலில் தவெக தொண்டர்களுக்கு விஜய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ’’நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை […]
மாம்பழம் வழக்கு… வேட்பாளர் நேர்காணல்… திமுகவில் ராமதாஸ்..?

அன்புமணியை அழைத்து ஒப்பந்தம் போட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ராமதாஸ். அதேநேரம் அதிமுக கூட்டணியில் அன்புமணிக்குப் பதில் தனக்கு முக்கியத்துவம் கிடைத்தால் மட்டும் சேர்வதாக தகவல் கூறியிருந்தார். ஆனால், இதற்கு எடப்பாடி எந்த ஒப்புதலும் கொடுக்கவில்லை. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது. மாம்பழம் சின்னத்துடன் வந்தால் மட்டுமே கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசலாம். அப்படியில்லை என்றால் தனித்து நிற்பதற்கு உதவி செய்யப்படும் என்று கூறப்பட்டது. […]
திமுக பிரசாரம் ஆரம்பம்… கூட்டணியைப் புறக்கணிக்கும் ஸ்டாலின்

திமுகவில் இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. ஆனால், அதற்குள்ளாக, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கிவிட்டது. மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்பதற்காக திமுக இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு என அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்திவருகிறது. அதோடு ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நூறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை […]
ஸ்டாலின் ஒரு டம்மி முதல்வரா..? எம்.எல்.ஏ. அட்ராசிட்டிக்கு நோ ஆக்ஷன்

திமுகவினர் ஒவ்வொரு நாளும் என்ன செய்வார்களோ என்ற பயத்தில் எனக்கு தூக்கமே வருவதில்லை. இனி தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் வீரவசனம் பேசினார். ஆனால், ஒரு எம்.எல்.ஏ.வே அடியாளாக மாறி ஊடகத்தினரை அடித்துத் துவைத்த பிறகும் ஸ்டாலின் அமைதி காக்கிறார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட குவாரிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 23.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குவாரி முறைகேடாக செயல்பட்டு வந்தது. […]
விஜய் சீக்ரட் இண்டர்வியூ…. தமிழ் ஊடகம் என்றால் கேவலமா.?

விஜய் ஒரே ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று அவரது பனையூர் அலுவலகம், பாலவாக்கம் வீடு முன்பு 24 மணிநேரமும் தமிழ் மீடியாக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். விஜய் செல்லும் இடத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே காத்துகொண்டு இருக்கிறார்கள். இதுவரை தமிழ் மீடியாக்களை திரும்பிக்கூட பார்க்காத விஜய், ஆங்கில ஊடகம் என்றதும் வீட்டுக்கு அழைத்துவைத்து பேட்டி கொடுத்திருக்கிறார். விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் தமிழ் ஊடகங்களுக்கு இப்படியொரு அவமானம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் என்.டி.டி.வி.க்கு […]
டெல்லிக்கு மோடி… தமிழ்நாட்டில் ராகுல். திசை மாற்றும் திமுக

மத்திய பாஜகவுக்கு ஆதரவு ஏடான இந்தியா டுடே நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பு, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ராகுல் காந்திக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் சர்வே வெளியிட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டெல்லி மற்றும் பீகார் மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ), 2026-ம் ஆண்டையும் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களில் மாபெரும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் என்.டி.ஏ. […]
விஜய் டீம் எடப்பாடிக்கு நோ ரெஸ்பான்ஸ்… என்னாச்சு?

முதன்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்தில் விஜய் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதுவரை அதிமுகவை அடித்துவந்த தவெகவினர் இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காக்கிறார்கள். இபிஎஸ் கேள்விகளை திசை திருப்புவதற்காகவே, தேர்தல் அறிக்கை தயார் செய்வது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகளை கேட்க தவெக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’விஜய்யை டிஆர்பி ரேட்டுக்காக காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். […]
படுத்தே விட்டாரய்யா பன்னீர்செல்வம்… கை கொடுப்பாரா எடப்பாடி?

தேர்தல் கூட்டணி குறித்து இன்று தன்னுடைய முடிவு அறிவிப்பதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதே லட்சியம். இதற்கு டிடிவி தினகரன் உதவவேண்டும் என்று காலில் விழாத குறையாக கோரிக்கை வைத்திருக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘’அதிமுக தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாகி சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ராமநாதபுரத்தில் நான் போட்டியிட முக்கிய காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காண்பிப்பதற்காகத்தான். பலாப்பழம் […]
அஜித் பவார் கொல்லப்பட்டாரா…? மம்தா பானர்ஜி அதிர்ச்சி குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிர் இழந்திருபது குறித்து, உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார். அஜித்பவார் மீது பாஜக 70,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுத்ததும் அந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை நிறுத்தப்பட்டது. துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருக்கவேண்டுமா […]

