நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்குமா? செல்வப்பெருந்தகைக்குச் சிக்கல்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி சிபிஐ வழக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அதில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் பணம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாகக் […]
கதறிய பெண்களுக்கு நீதிமன்றம் ஆறுதல். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

’அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் […]
இதுக்குத்தான் நடந்ததா ஆபரேஷன் சிந்தூர். பாஜகவின் ஓட்டு ஊர்வலம்

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்றதும் தாக்குதலை நிறுத்தி விட்டார்கள் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாஜகவை பார்த்து பங்கமாக கலாய்த்திருக்கிறார். இந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட ஊர் ஊரால் ஊர்வலம் செல்வதற்கு பா.ஜ.க. தயாராவது பக்கா தேர்தல் நாடகம் என்றே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில், ’’இந்தியா மீது ஏவப்படும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் […]
அரசு பள்ளி மாணவர்கள் என்றால் மட்டமா..? பா.ஜ.க.வுக்கு வாய்க்கொழுப்பு

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 100/100 வாங்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்க்கொழுப்புடன் பேசியிருக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நாராயணன் திருப்பதி, ‘’சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை […]
விஜய் சர்வே உண்மையா..? சகாயத்துக்கு துணை முதல்வர் பதவி..?

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தது இல்லை. ஆனால், தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல சர்வேக்கள் வலம் வருகின்றன. விஜய்க்கு 100 சீட் கிடைக்கும் என்று வெளியாகியிருக்கும் சர்வே தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளிதளில் மும்பை தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 95 -105 சீட் கிடைக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் அடிப்படையில் […]
எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் வாழ்த்துகள்… விஜய் வாழ்த்து சொல்வாரா..?

2026-ல் அரியணை ஏறப்போகும் நமக்கான தலைவர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் 7.5% எனும் நாடுபோற்றும் உள்இடஒதுக்கீட்டால் சமநீதி காத்த “புரட்சித் தமிழர்” என்றெல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பாராட்டுகளைக் குவித்துக்கொணு இருக்கிறார்கள். நேற்றைய தினமே பா.ஜக.வை சேர்ந்த அண்ணாமலை தொடங்கி நயினார் நாகேந்திரன் வரையிலும் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்கல். அதேநேரம், இன்னமும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்து சொல்லவில்லை. விஜய் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இன்று சீமான், […]
ராமதாஸ் எச்சரிக்கை யாருக்கு..? அன்புமணி படித்து பாஸ் ஆனரா..? பா.ம.க. மாநாடு சர்ச்சை

பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டில் கட்சியினருக்கு எச்சரிக்கை என்ற பேரில் அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஐ.ஏ.எஸ். நியமனம் பற்றி அன்புமணி பேசியிருப்பது அவரது கட்சியினரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், ‘’10.5 சதவிவித இடஒதுக்கீடு குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோமே தவிர அவர்கள் கொடுப்பதாக இல்லை. 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக பாமக சார்பில் நிச்சயம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்காக […]
இதுக்குத்தானே நிர்மலா சீதாராமனை சந்தித்தார் சீமான்..? விவசாயி சின்னம் கிடைச்சாச்சு

யாருக்கும் தெரியாமல் தனியே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது விவசாயி சின்னம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று சொல்லப்பட்டது. அதற்கு தகுந்த பலன் கிடைத்தது போன்று இப்போது சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைத்துவிட்டது. இது குறித்து சீமான், ‘’மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது’’ என்று பெருமையுடன் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த […]
போர் நிறுத்திய டிரம்ப்.. வாலாட்டும் பாகிஸ்தான். வீணானதா மோடியின் ராஜதந்திரம்..?

“கடந்த 48 மணி நேரமாக அமெரிக்கா முன்னின்று நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக சண்டை நிறுத்தம் செய்யப்படுகிறது” என்று அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா அமைதி காக்கும் நிலையில் பாகிஸ்தான் அதிபர் தனது X தளப் பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அரசுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றி கூறியிருக்கிறார். போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் தொடர்ச்சியாக எல்லையில் பல பகுதிகளில் தாக்குதல் நடப்பதாக தகவல் […]
பாகிஸ்தான் அட்டாக்கில் இந்திய அதிகாரி கொல்லப்பட்டாரா..? அண்ணாமலை மீது கடுப்பில் நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த நேரத்தில் மற்ற தலைவர்கள் யாருமே பேட்டி கொடுப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தது இல்லை. அதனால் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை அகற்றப்பட்ட பிறகும் அவர் மீண்டும் மீண்டும் பா.ஜ.க.வின் முகமாக பேட்டி கொடுப்பது புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை செமையாக கடுப்பாக்கியுள்ளது. இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’இந்தியாவின் போர் நடவடிக்கை குறித்து […]

