கர்நாடகத்திற்கு நாளை லாரிகளை இயக்காதீர்கள்! சம்மேளன தலைவர் எச்சரிக்கை!

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் திடீரென்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான எதிர் கருத்துகள் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்குள்ளாக 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசும், கர்நாடக […]
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வீண் போகவில்லை! சிக்கினார் பிரிஜ் பூஷன்!

மல்யுத்த வீராங்கனைளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மைதான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்து வந்தவர் பிரிஜ்பூஷன். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்ட பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது போலீசார் […]
ஆசியப் போட்டி! இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 […]
260 ஆண்டுகள் ஆகிவிட்டது! எக்ஸ் பக்கத்தை தெறிக்கவிடும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில்!

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில். இக்கோவிலுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கடந்த செப்.23ம் தேதி சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படத்தில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வசந்த கால தொடக்க நாளில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த நாளில் பகல் மற்றும் இரவு வேளைகள் சமகால அளவில் இருக்கும். ஆண்டில் […]
புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் திடீர் மாற்றம்! முக்கிய பின்னணி!

புதுச்சேரியின் புதிய பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சாமிநாதன் பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.பி.செல்வகணபதி புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வெளியிட்டுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக […]
காலாண்டு தேர்வு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

காலாண்டு தேர்வு விடுமுறையில் நடத்தப்பட உள்ள என்.எஸ்.எஸ். முகாம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்ட காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடக்கிறது. அதோடு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 27ம் தேதிக்கு முடிகிறது. அதைத்தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களில் செப்.28ம் தேதி மிலாடி நபி, செப். […]
நான் உண்மையாகவே ஜெயலலிதாவின் மகள்! யார் இந்த ஜெயலட்சுமி!

மறைந்த ஜெயலலிதா எனது அம்மா என்று ஜெயலட்சுமி என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்று பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மறைந்த அ.தி.மு.க.முதல்வர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் தன்னை செல்வி.ஜெயலலிதா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இருப்பினும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். திரைத்துறையைத் தாண்டி தனி ஒரு பெண்ணாக அ.தி.மு.க.வை கட்டுக்கோப்புடன் கண் அசைவில் கட்டிவைத்திருந்த பெருமை என்றென்றுமே ஜெயலலிதாவையே சாரும். […]
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

இந்து அறநிலையத்துறை சார்பில் நேரடி நியமனம் செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட மொத்தம் 15 பேருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பணி ஆணைகளை வழங்கினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கோவில்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட பெண் ஓதுவார்களான தாரணி, சாருமதி, சிவரஞ்சனி, கோமதி, பார்கவி ஆகிய 5 பெண் ஓதுவார்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார். 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்கான பணி நியமன ஆணை […]
ஸ்தம்பித்து போன வள்ளுவர் கோட்டம்! பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம்!

கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 3,290 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், தங்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவ அவசர தேவைக்காகவும், உடனடி மருத்துவ வசதிக்காகவும் தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரம் செவிலியர்களும், 300 மருத்துவர்களும் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதில் 3ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக பணியில் இருந்து நிரந்தர செவிலியர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டதோடு 300 தற்காலிக மருத்துவர்களும் […]
நாடும் நமதே! நாற்பதும் நமதே!- மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!

திருப்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். திருப்பூரில் காங்கேயம் படியூர் அருகே நேற்று (செப்.24) மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி எதற்காக தனியாக சென்று உள்துறை அமைச்சரை […]

