அ.தி.மு.க.& பா.ஜ.க. கூட்டணி முறிவு! அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இன்று நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பா.ஜ.க.& அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால் உச்சநீதிமன்றத்தில் தனி அதிகாரம் என்னவாகும் என்பதை கர்நாடக அரசு சிந்திக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் […]
சென்னை உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அமலாக்ககத்துறையினர் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் என பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று காலை 5.30 மணியளவில் சென்னை தியாகராய நகர் சரவணா தெரு, திலக் தெரு மற்றும் விஜய் அப்பார்ட்மெண்டுகளில் உள்ள சில முக்கியஸ்தர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஓ.எம்.ஆர். […]
அதிரடி சலுகை அறிவித்த ஐ.ஆர்.சி.டி.சி.! என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி சலுகை அறிவித்துள்ளது. நாளை (செப்.27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதுடன் சேர்த்து ஐ.ஆர்.சி.டி.சி. தோற்றுவிக்கப்பட்ட 24வது தினத்தையும் கொண்டாடுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ‘‘செப்டம்பர் 25 முதல் 27ம் தேதிவரையிலான 3 நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்பதிவு […]
4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக அரசு பிறப்பித்துள்ள திடீர் உத்தரவின்படி 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்த அரசாணைகளையும் தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டு வருகிறார். இந்த உத்தரவின்படி அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். பூஜா […]
ரூ.1,000 கோடியை கடந்த ‘ஜவான்’! அனல் பறக்கும் பாக்ஸ் ஆபிஸ்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இதுவரை 1,000 கோடி ரூபாய் வசூல் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பாலிவுட் திரைத்துறையினர் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கோலிவுட் இயக்குனரான அட்லீ, முதல் முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்து நடித்த ஜவான் திரைப்படம் உலகமெங்கும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் […]
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு நாள்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் சென்னையில் […]
பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்தார் எடப்பாடி பழனிசாமி! முக்கிய பின்னணி!

மறைந்த தலைவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த அண்ணாமலையை பா.ஜ.க. கண்டிக்கத் தவறியதை கண்டித்து பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியாக இணைந்து கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தர்தல்களை சந்தித்தன. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமரியாதையாக பொது வெளியில் பேசியுள்ளார். இது குறித்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு […]
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

உடல் உறுப்பு தானம் செய்த தேனியைச் சேர்ந்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது. சாலை விபத்து உள்ளிட்ட காரணங்களால் மூளைச்சாவு ஏற்படுபவர்களின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை சமீப காலமாக தானமாக அளித்து வருகின்றனர். அதன்படி உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது உடல்உறுப்பு தானம் செய்பவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் […]
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 16க்கு ஒன்று என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வெற்றி பெற்று பெற்றுள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, […]
பெங்களூருவில் 144 தடை உத்தரவு! விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் […]

