News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து! முக்கிய பின்னணி!

நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு இவ்விழா செப்.30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் […]

ஆவின் பால் விலை உயர்வு? அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்னது என்ன?

ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்படுவது வெறும் வதந்திதான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை  அமோகமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ஆவின் பொருட்களின் நுகர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சில ஆவின் பொருட்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.  அந்த வகையில் தற்போது சமூகவலைதளங்களில் ஆவின் பால் விலை உயர்கிறது என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி பொது மக்கள் […]

ஆசிய போட்டி! குதிரையேற்றத்தில் 41 வருடங்களுக்கு பிறகு இந்தியா சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப்போட்டியில் இந்தியா இன்றைய குதிரையேற்றப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் […]

ரசிகர்களை கட்டிப் போட்ட பிக்பாஸ் மேக்கிங் வீடியோ! கலகல கமல்ஹாசன்!

பிக்பாஸ் சீசன் 7 மேக்கிங் வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஏற்கனவே 6 சீசன்களை கடந்த நிலையில் தற்போது சீசன்7 அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் சீசன் முதல் தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்து விஜய் டிவியின் டி.ஆர்.பி.ரேட்டிங்கை உச்சத்தில் தக்க வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த முறை சீசன்7ல் இரண்டு வீடு என்ற சமிக்ஞையையும் […]

இணையத்தை கலக்கும் லியோ போஸ்டர்! உங்களுக்கான ட்விஸ்ட்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், கவுதம்வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இதன் ஆடியோ லாஞ்ச் வருகிற செப்டம்பர் 30ம் தேதி 8 ஆயிரம் பேர் அமரக் கூடிய […]

எழும்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! களை கட்டிய ரோஜ்கர் மேளா!

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற வேலை வாய்ப்பு வழங்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு பணிகளில் தேர்வு பெற்றவர்களிடம் கலந்துரையாடினார். நாடு முழுவதும் அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் மொத்தம் 51 ஆயிரம் பேர் 9வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி வாயிலாக அரசுப் பணியை பெற்றுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று (செப்.26) வழங்க உள்ளார். அதன் ஒரு பகுதியாக […]

ரஜினிகாந்த் -ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

சந்திரமுகி-2 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆஸ்தான குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நாளை மறுநாள் (செப்.28) சந்திரமுகி-2 வெளியாக உள்ளது. பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது பி.வாசுவின் 65வது படமாகும். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் […]

திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் தொல்.திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.   மேலும் வருகிற 30ம் தேதிவரை தொல்.திருமாவளவனை தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகள் […]

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! முக்கிய அறிவிப்பு என்னவென்று தெரியுமா?

5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்ட காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடக்கிறது. அதோடு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 27ம் தேதிக்கு முடிகிறது. அதைத்தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த 5 நாட்களில் செப்.28ம் தேதி மிலாடி நபி, […]

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பின்னணி தகவல்கள்!!

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் […]