போக்குவரத்து போலீசாருக்கு பட்டன் கேமரா! கூடவே இன்னொரு வசதியும்!

சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பியுடன் சேர்த்து சட்டையில் பட்டன் கேமராவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆந்திர, குஜராத், மேற்குவங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் 900 கிராம் எடை கொண்ட குளிர்விக்கும் தொப்பி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொப்பியை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரம் என்ற தனியார் […]
இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50,000 பேருக்கு அரசுப் பணி! முதலமைச்சர் உறுதி!

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பணி ஆணைகளை வழங்கினார். பணி ஆணைகளை வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘அரசின் […]
கொரோனாவை விட 7 மடங்கு வீரியம்! 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும்! எச்சரிக்கை பதிவு!

கொரோனா வைரசை விட 7 மடங்கு வீரியமிக்க ‘எக்ஸ்’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 70 லட்சம் பேரை பலி வாங்கியது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் தங்களின் உயிரை இழந்தும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அவதிப்பட்டனர். கொரோனா தொற்று ஓய்ந்து […]
கர்நாடக- தமிழக எல்லைகளில் பதற்றம்! செப்.29 முழு அடைப்பு போராட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு 2 ஆயிரம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி நேற்று (செப்.26) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், […]
அக்.14 சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை! நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பின்னணி!

நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி அழைப்பை ஏற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழகம் வருகிறார். இது வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான வருகையா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]
தொல்.திருமாவளவனுக்கு போன் செய்த இ.பி.எஸ்.! கதை அப்படி போகுதா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன் செய்து நலம் விசாரித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற 30ம் தேதிவரை தொல்.திருமாவளவனை தொண்டர்கள் மற்றும் கட்சி […]
அடுத்த செக் சந்திரபாபு நாயுடு மகனுக்குதான்! ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷை அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு ஊழல் வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்த்துள்ளது ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்-வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு 118 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கடந்த […]
ஆசிய போட்டி! 4வது தங்கத்தை வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 4வது தங்கம் உள்ளிட்ட வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வாரிக் குவித்து வருகிறது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி (செப்.) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். (நேற்றைய பதக்கப்பட்டியல் பட்டியல் நிலவரம்) கிரிக்கெட்&1 தங்கம் குதிரையேற்றம்& 1 தங்கம் துடுப்பு படகு போட்டி&2 வெள்ளி, 3 வெண்கலம் பாய்மரப் படகு போட்டி&1 […]
கடலூர் சில்வர் பீச்சில் குளிக்க தடை! இதுதான் காரணம்!

கடலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடமான தேவானம்பட்டினம் சில்வர் பீச்சில் ‘நெய்தல் புத்தக திருவிழா’ நாளை மறுநாள் (செப்.29) நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவிற்காக சில்வீர் பீச்சில் திறந்த வெளியில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, ஆராய்ச்சி, குழந்தைகள் வாசிப்பதற்கென தனி புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பதிப்பதகத்தார் தங்களின் புத்தகங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றனர். […]
ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம்? கட்டுமான தலைவர் முக்கிய தகவல்!

வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்று தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தன்று கருவறையில் உள்ள தெய்வத்தின் நெற்றியின் மீது சூரியக்கதிர்கள் விழும் வகையில் கோவிலின் சிகரத்தில் நிறுவப்படும் ஒரு கருவியை வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் […]

