News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விபத்தில் உயிரிழந்த ரசிகர்! குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!

விபத்தில் சிக்கி உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் சூர்யாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24ம் தேதி எண்ணூரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக […]

2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை, புதுச்சேரி!

செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தொடர்பாக இடங்களில் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (செப்.27) சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்த சோதனை […]

‘லியோ’ பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு திடீர் கடிதம்!

‘லியோ’ திரைப்படத்தின் பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு எழுதியுள்ள திடீர் கடிதம் தமிழ் திரையுலகில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையிட தயாராக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வருகிற செப்.30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! எப்போது தெரியுமா?

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏ.ஐ.பி.இ.ஏ. அறிவித்துள்ளது. வங்கிகளில் அதிக ஊழியர்களை நியமிக்கக் கோரி நேற்று (செப்.27) அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏ.ஐ.பி.இ.ஏ.) நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில், வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொது […]

பதற்றம் நிறைந்த மாநிலமாக ‘மணிப்பூர்’ அறிவிப்பு! ஆளுநர் என்ன செய்யப் போகிறார்?

மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. […]

அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்! எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம், திருச்சியில் சீனிவாசன், பெரம்பலூரில் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் சரவணன் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கட்சியின் நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திண்டுக்கல் ஆகியவை பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புதிய வழக்கு! ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் […]

தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த தருமை ஆதீனம்! முக்கிய பின்னணி!

தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தமிழக அரசுக்கு ஓதுவார்கள் நியமனம் குறித்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தமிழகத்தில் யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்து ஓதுவார் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஓதுவார்கள் நியமனம் குறித்து தருமை ஆதீனம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! முக்கிய தகவல்கள்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் […]

திருப்பதிக்கு செல்கிறீர்களா? உடனே இதை கவனியுங்கள்!

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (செப்.28) அக்டோபர் 12ம் தேதிவரை ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தினந்தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ‘‘சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாள பராமரிப்பு  பணிகள் […]