அவசரமாக கூட்டப்படும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! முக்கிய பின்னணி!

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று அவசர அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி கடந்த 26ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. […]
டி.எம்.பி. நிர்வாக இயக்குனர் திடீர் ராஜினாமா! முக்கிய பின்னணி!

டி.எம்.பி. எனப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும் சி.இ.ஓ.வுமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிர்வாக இயக்குனராகவும் சி.இ.ஓ.வாகவும் நியமிக்கப்பட்ட எஸ்.கிருஷ்ணன், கடந்த ஜனவரி மாதம் சிறிய வங்கிகளில் சிறந் வங்கியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதையும் பெற்றிருந்தார். எஸ்.கிருஷ்ணா அளித்த ராஜினாமா கடிதத்தை அவ்வங்கியின் நிர்வாகக்குழு ஏற்றுக் கொண்டதாகவும், இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் […]
தமிழகத்தில் ஒரே மாதத்தில் 600 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

தமிழகத்தில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று (செப்.28) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினார். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள […]
கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்! உச்சகட்ட பதற்றம்!

கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீரை திறந்துவிட அம்மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 26ம் தேதி (செப்.) பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பெங்களூரில் அன்று 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. […]
முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள்! மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூர் முதலமைச்சரின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் திடீரென்று முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி (செப்) […]
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்- மத்திய சட்ட ஆணையம் ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாடாளுமன்ற மக்களவையுடன் சேர்த்து […]
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். பசுமைப்புரட்சியின் தந்தை என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தனது 98 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11.20 மணியளவில் சென்னையில் காலமானார். கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவில் பசுமைப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில், பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனையே சேரும். விவசாயத்தை உயர்த்தி அரிசி தட்டுப்பாட்டை நீக்க, அதிநவீன அறிவியல் முறைகளை […]
இப்படியும் ஒரு புகைப்பட கலைஞரா? விருதுநகரில் வினோதம்!

விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்கள் மற்றும் இதுவரை யாரும் அறிந்திடாத சுற்றுலாத் தலங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப மாபெரும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு புகைப்படக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து தங்கள் படைப்புகளை போட்டிக்காக சமர்ப்பித்தனர். அந்த வகையில் போட்டியின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், புகைப்பட கலைஞர் முத்துராஜ் என்பவர் மூன்றாம் பரிசு பெற்றார். அவருக்கு பரிசுத்தொகையாக […]
டெங்கு பரவல் எதிரொலி! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டும், இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு […]
சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்! திகைத்துப் போன வாகன ஓட்டிகள்!

சென்னை தியாகராயநகரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதைக் கண்ட பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திகைத்துப்போய் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர்களில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே சிறிய அளவிலான பள்ளம் ஏற்படுகிறது. மேலும் பருவமழையை எதிர்கொள்ள சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் தியாகராயநகரில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தியாகராயநகரில் உள்ள முக்கிய […]

