பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு! சென்னையில் பரபரப்பு!

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் இருந்து தப்பிக்க கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஒதுங்கி நிற்கிறார்கள். இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மழைக்காக சிலர் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து அங்கு […]
கர்நாடகாவுக்கு புதிய உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு என கர்நாடக மாநிலம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் […]
அக்.1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும் ஒன்றாக சேர்த்து காணொலி காட்சி வாயிலாக அக்டோபர் மாதம் 1ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து […]
வலிகளுடன் வாழ பழகுகிறேன்! நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்!

நடிகர் விஜய் ஆண்டனி ரத்தம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘வாழ்க்கையில் நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டேன். வலிகளுடன் வாழ பழகுகிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்ற பெயரையே திரையுலகில் பெற்றுள்ளார். விஜய் ஆண்டனி அவரது மனைவி பாத்திமா, 2 மகள்களுடன் சென்னையில் வசித்து வந்தார். இதற்கிடையில் 12ம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா கடந்த 19ம் தேதி (செப்.) […]
ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வாரி குவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய போட்டியில் ஆடவர் […]
காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி! காவல் 7வது முறையாக நீட்டிப்பு!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் […]
இணையத்தில் டிரெண்டிங்கான நயன்தாரா! என்ன விஷயம் தெரியுமா?

இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ்சிவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். நட்சத்திர தம்பதியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத் தாய்மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள். திருமணத்திற்கு பிறகும் கோலிவுட், பாலிவுட் என நடித்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காஸ்மெட்டிக்ஸ் பிசினசிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு பிசினஸ்களை செய்து வரும் நயன்தாரா, தொடர்ந்து நடிப்பிலும் செலுத்தி வருகிறார். நடிகர் ஜெயம்ரவியுடன் […]
நாளையுடன் கடைசி! வங்கிகளுக்கு விரைந்து செல்லும் பொதுமக்கள்!

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர். செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் […]
வாச்சாத்தி பாலியல் வழக்கு! குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வாச்சாத்தி மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி வனத்துறையினர் மற்றும் காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைகிராம பழங்குடி […]
ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 வாங்கப்படாது! அமலுக்கு வந்த அறிவிப்பு!

இன்று முதல் (செப்.29) ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாய் வாங்கப்படாது என்ற அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அரசு பேருந்துகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் பயணத்தின் போது பயணிகளிடம் இருந்து வாங்கப்பட்டு மாற்றி கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு பேருந்துகளில் தற்போது பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் தங்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்ததால் எந்த பாதிப்பும் அறியப்படவில்லை. இந்நிலையில் […]

