News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

அன்புமணி மாடு மேய்க்கவும் லாயக்கில்லை..? ராமதாஸ் காட்டம்

சமீபத்தில் உடல்நலம் குன்றி ஐ.சி.யு.வில் இருந்ததால் அய்யா ராமதாஸை பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்தார். அதோடு ராமதாசை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் விமர்சித்தார். இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திப்பேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக […]

திருமாவளவன் மீது என்ன நடவடிக்கை..? பார் கவுன்சில் அதிரடி

திருமாவளவன் காருக்கு முன் வேண்டுமென்றே வம்பு செய்தார் என்று ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாய்ந்த விவகாரம் வில்லங்கமாகிவருகிறது. பார் கவுன்சில் விசாரணைக் குழு அமைத்திருக்கும் நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலுக்கு வெளியில், திருமாவளவன் வருகை தந்த நேரத்தில் ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதாக அவர் பிரச்னை செய்தார். […]

நேற்று கரூர் கருப்புப் பட்டை இன்று கிட்னி திருட்டு… அதிமுக களேபரம்

நேற்றைய தினம் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு கருப்புப்பட்டை அணிந்துவந்ததுடன் கரூர் விவகாரம் குறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். சட்டப்பேரவையில் நடந்தது குறித்து இபிஎஸ், ‘’நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் […]

விஜய் கூட்டணிக்குப் போகிறார் வைகோ… அரசியல் திடீர் திருப்பம்..?

கடந்த 2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி உருவாக்கி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர் வைகோ. அப்போது முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். இப்போது அதேபாணியில் விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொண்டு திமுகவை தோற்கடிக்கப் போகிறார் என்று மல்லை சத்யா குற்றம் சாட்டியிருக்கிறார். வாரிசு அரசியலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி திமுகவை உடைத்தவர் வைகோ. அவருக்கு மிகப்பெரும் ஆதரவும் இருந்தது. ஆனால், தவறான முடிவுகளாக எடுத்து அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என பல்வேறு கூட்டணிகளுக்குத் […]

எடப்பாடியிடம் செங்கோட்டையன் சரண்டர்… ? சட்டமன்றத்தில் கருப்புப்பட்டை

அதிமுகவில் இருந்து அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து தூக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று மற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போலவே கருப்புப்பட்டை அணிந்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவகாரம் கட்சியில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கியது. முதல் நாள் கரூர் துயரத்தில் பலியான 41 பேர், மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி […]

விஜய்யுடன் மல்லுக்கட்டும் முரசொலி… த.வெ.க. கொல்லுமா..?

இன்று நடிகர் விஜய் பற்றி திமுகவின் அதிகாரபூர்வ இதழான முரசொலியில் காட்டமான ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 41உயிர்­க­ளைக் கொன்ற விஜய் பனை­யூ­ரில் பதுங்­கிக் கொண்டு, ‘நீதி வெல்­லும்’ என்று டுவிட்­டர் போடு­கி­றார். த.வெ.க. கொல்­லும்! ஆனால் நீதி வெல்­லும் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்த தலையங்கத்தில், ‘’மீட்­டிங் என்ற பெய­ரால் சூட்­டிங் நடத்தி விட்டு, சினி­மா­வில் ‘சும்மா’ கொல்­வ­தைப் போல, நிஜத்­தில் கொன்று விட்டு, லைட்­டைப் போட்டு ஆப் செய்து விளை­யா­டும் சேட்­டிஸ் மனி­த­னின் […]

சட்டமன்றத்தில் அன்புமணி பாமக தர்ணா போராட்டம். திமுக யார் பக்கம்..?

டாக்டர் ராமதாசுடன் மல்லுக்கட்டுவதையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதாவது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜிகே மணியை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் திடீர் போராட்டம் நடத்தினார்கள். இன்று சட்டப்பேரவை சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திருக்குறளை வாசித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான புரட்சிமணி, […]

பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியா..? வில்சன் இப்படி மாட்டிக்கிட்டாரே…

கரூர் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது திமுகவுக்கு மிகப்பெரும் தோல்வி என்று விஜய் கட்சியினர் கொண்டாடிவருகிறார்கள். அதேநேரம், விஜய் வசமாக பாஜகவிடம் சிக்கிவிட்டார். ஒரே ஒரு சிபிஐ வழக்கு வைத்து அன்புமணியை ஆட்டிவைப்பது போன்று விஜய்யைக் கூட்டணிக்கு இழுத்து வளைத்துவிடுவார்கள் என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், திமுகவில் வில்சனுக்கு செம டோஸ் விழுந்துவருகிறது. நீதிமன்றத்தில் மிகத்தெளிவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த தீர்ப்புகள் எல்லாம் மாறலாம் என்று தெரிவித்தார். விலசன் இப்படி பொய் பேசலாமா […]

விஜய்க்கு சிபிஐ ரிலாக்ஸ்… சவுக்குடன் மோதும் விஜய் தொண்டர்கள்

கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை ரிலாக்ஸ் ஆக்கியுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முழுக்க முழுக்க விஜய் பக்கமே தவறு என்று குற்றம் சாட்ட வாய்ப்பிருக்கும் நிலையில் சிபிஐ வசம் விசாரணை போயிருப்பது நல்லது என்றே கருதுகிறார்கள். சிபிஐ விசாரணை கிடைக்கும், இதன் மூலம் பாஜகவுக்கு அடிமையாக விஜய் மாறவேண்டியிருக்கும். வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தொடந்து சவுக்கு சங்கர் பேசிவருகிறார். அதோடு, வரும் […]

பாஜக மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா… மோடியை மதிக்காத அதிமுக..?

நயினார் நாகேந்திரன் தொடங்கியிருக்கும், தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ யாத்திரை நேற்று மதுரையில் தொடங்கியது. இந்த மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் வைக்கப்பட்டிருப்பது இரண்டு கட்சிக்குள்ளும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த யாத்திரை குறித்து நயினார் நாகேந்திரன், ‘’தமிழகத்தில் நடைபெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நமது “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” துவங்கி விட்டது. ஆட்சியை காக்க கட்டுக்கதைகள் பல கட்டவிழ்த்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விடியாத ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து […]