News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

9 தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு! முதலமைச்சர் பெருமிதம்!

9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.   இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி, அண்ணாதுரை, வீரமுத்து உள்ளிட்ட 9 பேர் தமிழகத்தின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளனர்.   அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய முதலமைச்சர் […]

காந்தி ஜெயந்தி: முதலமைச்சர், ஆளுநர் மரியாதை மலர் தூவி மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் மலர்களால் சூழவைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வசூல்!

நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் அரசின் மொத்த ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் ரூ.1,62,712 கோடியாக இருந்தது. 2023 செப்டம்பர் வருவாயுடன் கடந்த ஆண்டு இதே மாதமான செப்டம்பர் 2022 வருவாயான ரூ.1.47 லட்சம் கோடியை விட அதிகரித்துள்ளது. அதாவது 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த […]

குன்னூர் விபத்து! இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம்!

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ஊட்டிக்கு நேற்று முன்தினம் பயணிகளுடன் வந்த சுற்றுலா பேருந்து மரப்பாலம் அருகே 9வது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் […]

தற்காலிக நிறுத்தம்! சென்னை& தாம்பரம் பயணிகள் கவனத்திற்கு!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையில் செல்லும் புறநகர் மின்சார ரெயில் சேவை இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக திகழ்வது மின்சார ரெயில்கள்தான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்கும் பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது மின்சார ரெயில்கள்தான். அதன்படி இயக்கப்படும் ரெயில்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பயணிகள் பயணம் […]

அண்ணாமலை நாளை டெல்லி பயணம்! முக்கிய பின்னணி தகவல்கள்!

அ.தி.மு.க. கூட்டணி முடிவுக்கு பின்னர் நாளை அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கட்சியில் இருந்தும் பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் அண்ணாமலையை அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அண்ணாமலை நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். […]

தமிழக ஆளுநர்- பிரேமலதா விஜயகாந்த் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென்று சந்தித்து பேசினார்.   சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘‘காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது தெரிவித்ததாக கூறினார்.   மேலும் தேசிய நதிகளை இணைக்க […]

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்! குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றம் […]

சென்னை அம்பத்தூரில் பரபரப்பு! ஒரே நேரத்தில் தாய், மகள் பலி!

சென்னை அம்பத்தூர் அருகே ஏ.சி.யில் இருந்து வந்த கரும்புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அம்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஏகாம்பரம் நகர். இங்கு வசித்து வந்த அகிலா மற்றும் அவரது மகள் நஸ்ரிபேகம் இருவரும் வீட்டில் வழக்கம் போல் ஏசி அறையில் இரவு நேரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு அதில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.   இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அகிலாவும் […]

நாம் தமிழர் மேடை மீது கல் வீச்சு! சீமான் கொடுத்த மாஸ் பதில்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார்.    அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் சிலர் மேடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கற்கள் மேடைக்கு […]