தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா, விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகனை தயாரித்தவர் வி.ஏ.துரை. 69 வயதான இவர் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த சில […]
பேருந்து நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவன் படுகொலை! அதிர்ச்சி தகவல்!

பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பிளஸ்-2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. 17 வயதான இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளி செல்வதற்காக மேலபுளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் மாணவன் ஜீவாவுக்கு பக்கத்தில் வந்து நின்றார். திடீரென்று […]
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு குவியும் பாராட்டு! என்ன செய்தார் தெரியுமா?

தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சாலையில் மயங்கிக் கிடந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை மீட்டு தனது சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் செயலாற்றி வருகிறார். இவர் சென்னை மதுரவாயல் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று (அக்.2) தனது காரில் சி.ஐ.டி. நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையில் திடீரென்று கும்பல் கூடியிருப்பதை பார்த்து அது […]
அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை! ஓடவிட்டு வெட்டி சாய்த்த மர்ம கும்பல்!

சென்னையை அடுத்த வீச்சூரில் அ.தி.மு.க. பிரமுகர் மர்ம கும்பால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வீச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாகவும், வீச்சூர் ஊராட்சி மேலவை பிரதிநிதியாகவும் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சுமன் (வயது 38) அ.தி.மு.க.வில் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். மேலும் சுமன் ரியல் எஸ்டேட், […]
தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்! குஷ்பு பெருமிதம்!

நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு […]
தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! முதலமைச்சர் எச்சரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் 2 நாள் ஆலோசனை மாநாட்டில், பொய் செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றும், நாளையும் (அக்.3 மற்றும் அக்.4) கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற […]
கிராம சபைக்கூட்டம்! விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தலைமறைவு!

விவசாயியை எட்டி உதைத்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் ஊராட்சி செயலர் தங்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.2) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் கூடின. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளத்திலும் கிராமசபை கூட்டம் கூடியது. சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையிலான கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊரட்சி […]
விக்ரம் லேண்டர் இனி செயல்படாது? விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

சந்திரயான்-3 மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் பனியில் உறைந்து போனதால் மீண்டும் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை […]
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! களத்தில் குதித்த அமைச்சர் அன்பில்!

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணராவிரத போராட்டத்தை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 125 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மற்ற இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தாங்கள் பட்டினி கிடப்பதாக […]
எஸ்கலேட்டரில் சிக்கி உயிர் தப்பிய மகள்! பிரபல ஷெஃப் அதிர்ச்சி தகவல்!

சென்னையில் இயங்கி வரும் பிரபல மாலின் எஸ்கலேட்டரில் தனது மகள் சிக்கி உயிர் பிழைத்ததாக ஷெப் வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரபல சமையல் கலை நிபுணரான ஷெப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். ஆரம்ப காலத்தில் இவர் மிகவும் ரூடானவர் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக மிகவும் நகைச்சுவையாக அந்நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். […]

