மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கோவையில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவுக்கு பின்னர் இரு கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் நோக்கர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களை அண்ணாமலை அவமரியாதையாக பேசிவிட்டார் என்பதை முன்னிறுத்தி பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார். எனவே அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்பட்டால் முறிந்த கூட்டணி மீண்டும் […]
இந்திய கோடீஸ்வரர் மகனுடன் பலி! ஜிம்பாப்வேயில் என்ன நடந்தது?

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவா தனது 22 வயது மகனுடன் ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச்சுரங்கம் அருகில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவாவுக்கு சொந்தமான தனிவிமானம் என்று அடையாளம் காணப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் […]
நியூ லுக்கில் எம்.எஸ்.தோனி! லைக்குகளை குவிக்கும் அசத்தல் ஹேர் ஸ்டைல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் நியூ ஹேர் ஸ்டைல் புகைப்படம் தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு பெற்றாலும் கூட தற்போது களத்தில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கிறார். இளைஞர்கள், ரசிகைகள் என எம்.எஸ்.தோனியை குறித்த ஏதேனும் ஒரு டாப்பிக் இணையத்தில் தினந்தோறும் டிரெண்டிங்கில்தான் உள்ளது. கிரிக்கெட்டுடன் சேர்த்து சினிமா தயாரிப்புகளிலும் இறங்கியுள்ள எம்.எஸ்.தோனி ஒரு ஹீரோவைப் போல காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் […]
எடப்பாடி பழனிசாமி- தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திடீரென்று சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிமுன் அன்சாரி கூறும்போது, […]
எம்.எல்.ஏ. காலில் விழுந்து கதறிய பெண்! ஏன் தெரியுமா?

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வெங்கடேசனின் காலில் திடீரென்று விழுந்து கதறிய கிராமத்து பெண் ஒருவர், மதுபானக் கடையை மூடிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்.2) தமிழகம் முழுவதும் நேற்று கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராமசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூடியது. […]
முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு! இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வாபஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் […]
சென்னை மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள்! தெற்கு ரெயில்வே திட்டம்!

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு பெரும்பாலும் நம்புவது மின்சார ரெயில் சேவையைதான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்காக மின்சார ரெயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பல லட்சத்தையும் தாண்டி அதிகரித்து வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வேயின் ரெயில் கோட்டம் சார்பில், […]
5ஜி இணைய சேவை! தரவரிசையில் 47வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

5ஜி இணைய சேவை சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா 47வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் அதிவேக இணையசேவையான 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இதன் மூலம் இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் தேர்வை அதிகப்படுத்திள்ளது. அதன்படி கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதத்தில் வினாடிக்கு 13.87 எம்.பி.யாக கணக்கிடப்பட்டிருந்த சராசரி […]
ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ள பா.ஜ.க. தலைமை! டி.டி.வி. அடுத்த மூவ் என்ன?

ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டிவி. தினகரனையும் பா.ஜ.க. தலைமை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுடன் […]
ஒரே நாளில் 12 பச்சிளங்குழந்தைகள் பலி! மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து பற்றாக்குறை நிலவுவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் உள்பட 24 பேர் மருந்து பற்றாக்குறை காரணமாக […]

