News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எடப்பாடியின் மாதிரி மந்திரி சபை. பூமராங்க் ஆகும் திமுகவின் டிரோல்

வரும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தால், அவரது மந்திரி சபை எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு டிரோல் செய்து திமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ளது. இதை பார்த்து அதிமுகவினர், ‘’எப்படியோ அடுத்தது அதிமுக ஆட்சி என்பதையாவது திமுக ஒப்புக்கொண்டதே, அது போதும்’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள். அதிமுகவை கிண்டல் செய்து திமுகவினர் வெளியிட்டிருக்கும் பட்டியல் இது. அதன் படி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு துணை முதல்வராக நயினார் நாகேந்திரனும், அன்புமணி […]

மோடிக்கு அண்ணாமலை ரகசிய கடிதம்…?. நயினாருக்கு மதுரையில் பலப்பரிட்சை

தமிழகத் தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் அண்ணாமலை அடங்குவதாக இல்லை. மதுரையில் அமித்ஷா முன்னிலையில் மாஸ் காட்டியதன் தொடர்ச்சியாக மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு மதுரையில் கலவர அரசியலுக்குத் தயாராகிறார். இந்த விவகாரத்தில் அண்ணாமலையை அடக்கி நயினார் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பது தான் பாஜக டாக். மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், ‘’மதுரையில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசியிருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால் தொகுதிப் பங்கீடு அந்த வகையில் […]

ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் அதிரடி மாற்றம்…? பதவி உயர்வு யாருக்கு..?

தமிழ்நாடு காவல் துறையில் நிர்வாக சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது. அதன்படி 6 டி.ஐ.ஜி.க்கள் மற்றும் 12 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை […]

சீமானுக்கு புதிய எதிரி டாக்டர் கிருஷ்ணசாமி. போதை மோதல்

தமிழக அரசுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்துவரும் நாம் தமிழர் சீமான் வரும் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டம் அறிவிப்பு செய்திருக்கிறார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இன்று டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’கள்’ உணவு அல்ல கொடிய விஷம். கள், சாராயம், அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் […]

மீண்டும் முருங்கை மரத்தில் ராமதாஸ்… அன்புமணியின் பாலு நீக்கம்

பாட்டாளி மக்கள் கட்சியில் இனி எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிட்டது என்பது போன்று டாக்டர் ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக அடக்கி வாசித்தார். இந்த நிலையில், திடீரென அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலுவை கட்டம் கட்டி அன்புமணி டீமை கதற விட்டுள்ளார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. சமரசத்துக்கு ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை […]

பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..? கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுறாங்க

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியிருப்பது அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷா தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்று சப்பைக்கட்டு கட்டினாலும் தேர்தல் நெருக்கத்தில் சிக்கல் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று ஆசைப்படும் வகையில் பேசி […]

ராமதாஸுடன் அன்புமணியைச் சேர்ப்பதற்கு யாகம்… ஜால்ரா சத்தம் காது கிழியுது.

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சொத்துக்களை கைப்பற்றுவதற்கு டாக்டர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் வெட்டுக்குத்து அளவுக்கு ரகளை நடந்துவருகிறது. அம்மாவை கொல்லப் பார்த்தான் அன்புமணி என்று ராமதாஸ் வெளிப்படையாகவே புகார் வைத்தார். இந்த நிலையில் இந்த பாச மலர்களை சேர்த்து வைப்பதற்கு யாகம் நடத்தியிருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர். ராமதாஸையும் அன்புமணியையும் சேர்த்து வைப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸைச் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து ராமதாஸும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில், இந்தச் சூழலில் […]

சகாயத்துக்குப் பதில் அருண்ராஜ்..? விஜய் கட்சியில் பா.ஜ.க. நுழைஞ்சிடுச்சு.

நடிகர் விஜய் கட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இணைய இருப்பதாகவும், அவருக்கு முக்கியமான பதவி கொடுப்பதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு பெற்ற முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ளார். அப்படியென்றால் சகாயத்துக்கு என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அருண்ராஜ் பா.ஜ.க.வின் கையாள் என்ற பேச்சும் பரபரப்பாகியிருக்கிறது. நேற்ரைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலரும் விஜய் முன்னிலையில் இணைந்தார்கள். இவர்களில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் […]

இளையராஜா பாணியில் வைரமுத்து வசூல் வேட்டை..? வைரமுத்து மட்டும் காப்பி அடிக்கலாமா..?

இசைஞானி இளையராஜா காப்பிரைட் விவகாரத்தில் கறாராக இருந்து, யார் அவரது பாடலை பயன்படுத்தினாலும் பணத்தை வாங்கிவிடுகிறார். அதே பாணியில், தன்னுடைய வரிகளுக்கும் பணம் வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதுகுறித்து பேசியிருக்கும் வைரமுத்து, ‘’என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா… பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, […]

பிரேமலதாவுக்கு திடீர் எச்சரிக்கை.. மாசெ கூட்டம் அறிவிப்பு

அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே இப்போது கூட்டணிக்கு எந்த அவசரமும் இல்லை. ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த மாதத்திற்குள் கூட்டணி முடிவு அறிவிக்க வேண்டும் இல்லையெனில் அணியில் இடமில்லை என்று டெல்லி திட்டவட்டமாக அறிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒன்றுபட்ட வலிமையான கூட்டணியாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. அதனாலே இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் […]