News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

பாஜக ஆட்டம் தமிழகத்தில் எடுபடுமா..? ஸ்டாலின் ஆல் பார்ட்டி மீட்டிங்

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை இன்றுமுதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் அதிமுக ஆதரவு தெரிவிப்பது நிலவரத்தை சூடாக்கியுள்ளது பீகாரில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றபோது, லட்சக்கணக்கிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கடும் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 12 மாநில, […]

ஒவ்வொரு குடும்பத்துக்கும் விஜய் 5 நிமிடம் கால்ஷீட்… ஆள் மாறாட்டம் சர்ச்சை

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை நேரில் மகாபலிபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 நிமிடம் கால்ஷீட் கொடுத்து தனித்தனியாகப் பேசியிருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.   ஏற்கெனவே உயிரிழந்த 39 குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் நேற்று ஒவ்வொரு குடும்பத்தலைவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகை கொடுத்து, […]

விஜய் டெல்லி சர்வே ரிசல்ட்..? புல்லரிக்கும் தவெக

கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆடம்பர ஹோட்டலுக்கு அழைத்து ஆறுதல் சொல்கிறார் நடிகர் விஜய். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இதனை திசை திருப்பும் வகையில் ஒரு சர்வே வெளியாகியுள்ளது. அதாவது கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய்க்கு செல்வாக்கு மளமளவென குறைந்துவிட்டது என்றும் அவருக்கு டெபாசிட் தேறாது என்றும் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், டெல்லியில் எடுக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கும் ரகசிய சர்வே ரிசல்ட், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. விஜய் தனியாக போட்டியிட்டால் 120 சீட் […]

கண்ணகிநகர் கார்த்திகாவுக்கு ஸ்டாலின் அவமானம்..? நிதி புறக்கணிப்பு

பஹ்ரைனில் நடைபெற்ற இளையோருக்கான ஆண் மற்றும் பெண் கபடி விளையாட்டுப் பிரிவில் இந்திய அணி சார்பில் கார்த்திகா, அபினேஷ் ஆகியோர் பங்கேற்ற அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தது. இவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விவகாரத்தில் திருமாவளவன், ‘’தமிழ்நாடு அரசு இவ்விரு சாதனையாளர்களுக்கும் ரூ. 25 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், அவ்விருவருக்கும் தலா ஒரு கோடியாக உயர்த்தி வழங்கவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். […]

அன்புமணி இடத்தில் காந்திமதி. சின்னாபின்னமாகும் ராமதாஸ் மூவ்

தர்மபுரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் காந்திமதியை, கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்த விவகாரம் பாமக நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தன் குடும்பத்துக்குள் கை மாற்றுவதற்கு பாமக என்ன தனிக்குடும்பத்து சொத்தா என்ற கேள்வியை பாட்டாளிகள் கேட்கிறார்கள். பாமகவில் வெளிப்படையான பிரச்னை விழுப்புரம் மாநாட்டில் வெளிப்பட்டது. அப்போது பாமக இளைஞர் சங்க தலைவராக தனது மூத்த மகள் காந்தியின் மகன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி […]

மகாபலிபுரத்தில் 50 ரூம்கள். விஜய்க்கு ஆறுதல் கூற வரும் குடும்பங்கள்

கரூர் நெரிசலில் மரணமடைந்த குடும்பங்களை நேரில் பார்வையிடச் செல்கிறார் விஜய் என்பதே ஒரு மாதமாக பேசுபொருளாக இருந்துவந்தது. இந்த நிலையில், 20 லட்ச ரூபாய் 39 குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது. கரூர் அல்லது நாமக்கல் பகுதியில் நிகழ்ச்சி நடத்தி ஆறுதல் கூறுவதற்கு விஜய் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரவில்லை. ஆகவே, அவர்களை எல்லாம் சென்னைக்கு வரவழைத்து, மகாபலிபுரம் தனியார் விடுதியில் வைத்து நாளை ஆறுதல் கூறுவது உறுதியாகியுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் பெரும்பாலோர் விஜய்யை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். […]

உதயநிதி அபாண்டமாக பொய் சொல்லலாமா..? வைரலாகும் பூங்கொடி வீடியோ

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி விசிட் செய்த நேரத்தில் பூங்கொடி என்ற பெண் விவசாயி, முளைத்த நெல்லை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டியிருந்தார். இதற்கு உதயநிதி, அந்த பெண்ணின் வயலில் நெல் அறுவடையே இன்னமும் நடைபெறவில்லை, அதற்குள் எப்படி நெல்லைக் கொண்டுவந்து காட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வரவுக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி, ‘’நான் 5 ஏக்கரில் குத்தகை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ள குறுவை நெற்கதிர்கள், அண்மையில் பெய்த மழையில் நனைந்து […]

மகாபலிபுரத்தில் விஜய் சந்திப்பு… தவெகவுக்குள் உட்கட்சி மோதல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் திங்கட்கிழமை  மகாபலிபுரத்தில் சந்திக்க இருக்கும் நிலையில், உட்கட்சியில் மோதல் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரில் சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டார். ஆனால் சாலை மார்க்கமாகச் செல்லும்போது அது சாத்தியம் இல்லை. கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறியதால், அனைத்து குடும்பத்தினரையும் கரூரில் உள்ள ஏதேனும் ஒரு மண்டபத்தில் சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் கரூரில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது எனக் […]

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி..? நச்சுன்னு பதில் வந்தாச்சு

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியான பீட்டர் அல்போன்ஸ் வரும் தேர்தலில் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கும் விவகாரம் வைரலாகிவருகிறது. அவர் இது குறித்து, ‘’இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக எப்படி உடனடியாக மாற்ற முடியாதோ, அதுபோல இது அரசியல் சக்தியாக மாறுமா, அதற்கு அவர்கள் தகுதியானவர்களா, அத்தகைய கட்டமைப்பு அவர்களிடம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. கரூர் போன்ற ஒரு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில், நாட்டின் […]

இரண்டே நாளில் 2000 கோடிக்கு அனுமதி..? என்ன ரகசியம் ஸ்டாலின்..?

பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்டுவதற்கு பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி கொடுத்திருப்பதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அறப்போர் ஜெயராமன், ‘’சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக […]