விஜய்க்கு கடைசி வாய்ப்பும் அவுட்… சீமானுடன் சமரசம் ஆவாரா..?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டிவிடப்பட்டது. இந்த முறையும் அப்படித்தான் நடக்கும், அதனால் நம்முடன் கூட்டணிக்கு கண்டிப்பாக வருவார்கள் என்று எதிர்பார்த்தார் விஜய். ஆனால், இன்று கதை மாறிவிட்டது. ஆளும் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியும் திமுகவை விட்டு வெளியே வராது. ஆகவே, விஜய்க்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சீமான். விஜய் கட்சி தொடங்கிய நாள் முதலாக விஜய்யை கூட்டணிக்கு சீமான் அழைப்பு விடுத்துவருகிறார். அதாவது நான் சினிமாவிலும் […]
ஸ்டாலின் வலையில் பிரேமலதா… அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்

கடந்த 2021 தேர்தலில் கடைசி நேரத்தில் பிரேமலதாவை எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்டதற்கு பழி வாங்குவதற்காகவே திமுக கூட்டணியில் பிரேமலதா இன்று ஐக்கியமாகியிருக்கிறார். தமிழக அரசியலில் புதிய நிகழ்வாக, திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இன்று இணைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய இன்று அறிவாலயம் வந்துள்ளார் பிரேமலதா இந்த விஷயம் அமித்ஷா – எடப்பாடியின் மெகா கூட்டணி கனவில் பேரிடி என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், […]
விஜய்யை மிரட்டிய சர்வே… வேலூர் கூட்டத்தில் கூட்டணி முடிவு

விஜய் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. கூட்டணி கைகூடவில்லை, ஜனநாயகன் வெளியாகவில்லை. வேட்புமனுவை ஆர்வமாக வாங்கிச் சென்றவர்களும், டவுன்லோடு செய்தவர்களும் திருப்பித் தரவில்லை. அதனால் வேலூர் கூட்டத்தில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு அறிவிக்க இருக்கிறார். அதாவது, காங்கிரசும் வேண்டாம்.. ராமதாஸ் பாமக, ஓபிஎஸ், தேமுதிகவும் வேண்டாம்.. தனித்தே போட்டியிடுவோம்.. மக்கள் நம்மை நம்பி வாய்ப்பு கொடுத்தால் நாட்டை திருத்துவோம்.. இல்லையேல் மீண்டும் சினிமாவுக்குப் போய்விட்டு அடுத்த தேர்தலுக்கு வருவோம் என்று முடிவு எடுத்திருக்கிறாராம். இதற்கு காரணம் சமீபத்தில் […]
6 எம்.பி.க்களுக்கு தேர்தல்… திமுக, அதிமுகவில் விஐபிகள் மோதல்

சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் […]
பிரேமலதா கூட்டணியை முடிவு செய்த ஜக்கி… செம குத்தாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டது நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், பிரேமலதாவின் அரசியல் கூட்டணியை ஜக்கியே முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சிவராத்திரி விழாவில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அதோடு, முப்படை ராணுவ அதிகாரிகளுக்கு பாரத் பூஷன் […]
இடைக்கால பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்..? திமுக தேர்தலுக்கு கை கொடுக்குமா?

பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. ஆனால், இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் எக்கச்சச்க்க அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. · கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. · அரசுப் […]
ஸ்டாலின் காது குத்து விழா… சட்டமன்றத்தில் அதிமுக அதிரடி

நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்து விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்று அதிமுகவினர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் விழிப்புணர்வு போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள் தமிழக சட்டமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே […]
இப்படி சொதப்பிட்டீங்களே ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி குளறுபடி

ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீணாகியிருக்கிறது. இன்னொரு முறை தேர்வுக்குத் தயாராக பொருளாதார ரீதியாக, உடலளவில், மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்படும். பல்லாயிரம் பேரின் நேரம் வீணாகும். எல்லோருடைய ஒரு நாளின் விலையும் ஒன்றல்ல. ஸ்டாலின் அரசின் தவறுக்கு தேர்வர்கள் பாதிக்கப்படுவது அநியாயம் என்று இளைஞர்கள் கொதிக்கிறார்கள். […]
சிறுத்தைகளிடம் கெஞ்சும் திருமா… ராமதாஸ்க்கு பச்சைக் கொடி?

ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்துவருவதைக் கண்டு எரிச்சலான திருமாவளவன் இன்று அவரது தொண்டர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். வன்னியர் சமூக மக்களுக்கு விசிக எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யாதீங்க என்று கெஞ்சுகிறார். அவரது கடிதத்தில், ‘’தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய […]
பிளாக்கில் தவெக விருப்ப மனு விற்பனை..? விஜய் கட்சியில் காமெடி

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரியவேண்டும், மிகப்பெரும் கூட்டம் பனையூரில் கூட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அழைப்பு காரணமாகவே, எக்கச்சக்க ரசிகர்கள் பனையூரில் திரண்டு நின்று அடிதடி சண்டை போட்டு விருப்பமனு வாங்கினார்கள். பனையூரில் தாங்கள் வாங்கிய விருப்பமனுவை பிளாக்கில் சிலர் விற்பனை செய்த விவகாரம் பெரும் பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’புஸ்ஸி ஆனந்த் இதிலும் கெத்துக்காட்ட மா.செக்களுக்கு ஆர்டர் போட்டு ஆட்களை வரச்சொல்லி இருக்கார். […]

