News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இணையத்தில் டிரெண்டிங்கான நயன்தாரா! என்ன விஷயம் தெரியுமா?

இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ்சிவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். நட்சத்திர தம்பதியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத் தாய்மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள். திருமணத்திற்கு பிறகும் கோலிவுட், பாலிவுட் என நடித்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காஸ்மெட்டிக்ஸ் பிசினசிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு பிசினஸ்களை செய்து வரும் நயன்தாரா, தொடர்ந்து நடிப்பிலும் செலுத்தி வருகிறார். நடிகர் ஜெயம்ரவியுடன் […]

நாளையுடன் கடைசி! வங்கிகளுக்கு விரைந்து செல்லும் பொதுமக்கள்!

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர். செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ்  வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் […]

வாச்சாத்தி பாலியல் வழக்கு! குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வாச்சாத்தி மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி வனத்துறையினர் மற்றும் காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைகிராம பழங்குடி […]

ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 வாங்கப்படாது! அமலுக்கு வந்த அறிவிப்பு!

இன்று முதல் (செப்.29) ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாய்  வாங்கப்படாது என்ற அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அரசு பேருந்துகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் பயணத்தின் போது பயணிகளிடம் இருந்து வாங்கப்பட்டு மாற்றி கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு பேருந்துகளில் தற்போது பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் தங்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்ததால் எந்த பாதிப்பும் அறியப்படவில்லை. இந்நிலையில் […]

அவசரமாக கூட்டப்படும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! முக்கிய பின்னணி!

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று அவசர அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.  தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி கடந்த 26ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. […]

டி.எம்.பி. நிர்வாக இயக்குனர் திடீர் ராஜினாமா! முக்கிய பின்னணி!

டி.எம்.பி. எனப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும் சி.இ.ஓ.வுமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிர்வாக இயக்குனராகவும் சி.இ.ஓ.வாகவும் நியமிக்கப்பட்ட எஸ்.கிருஷ்ணன், கடந்த ஜனவரி மாதம் சிறிய வங்கிகளில் சிறந் வங்கியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதையும் பெற்றிருந்தார். எஸ்.கிருஷ்ணா அளித்த ராஜினாமா கடிதத்தை அவ்வங்கியின் நிர்வாகக்குழு ஏற்றுக் கொண்டதாகவும், இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் […]

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 600 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

தமிழகத்தில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று (செப்.28) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினார். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள […]

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்! உச்சகட்ட பதற்றம்!

கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீரை திறந்துவிட அம்மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 26ம் தேதி (செப்.) பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  அதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பெங்களூரில் அன்று 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. […]

முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள்! மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூர் முதலமைச்சரின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் திடீரென்று முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி (செப்) […]

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்- மத்திய சட்ட ஆணையம் ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாடாளுமன்ற மக்களவையுடன் சேர்த்து […]