News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்! 4 நாட்களில் 4,000 பேர் பலி!

  ஆப்கானிஸ்தானில் 4 நாட்களில் 4 ஆயிரம் பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக வெளியான தகவல் சோகத்தையும் அதிர்ச்சி¬யும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   ஆப்கானிஸ்தானில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 6 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறும்போது, ரிக்டர் அளவுகோலில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 ஆக பதிவான நிலையில் இன்று மீண்டும் 6.1 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]

தி.மு.க.வை எதிர்த்து அண்ணாமலை உண்ணாவிரதம்! என்ன விஷயம் தெரியுமா?

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க.வை எதிர்த்து வருகிற 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   அ.தி.மு.க. உடனா கூட்டணி முறிந்த பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார். பா.ஜ.க. தலைமையை சமாதானப்படுத்துவதற்காகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க.வை தூக்கி நிறுத்துவதற்காகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.   அந்த வகையில் அண்ணாமலை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

ஆஸ்கர் விருதை அசிங்கப்படுத்திய நடிகை! என்ன செய்தார் தெரியுமா?

தான் வாங்கிய ஆஸ்கர் விருதை டோர் ஸ்டாப்பராக பயன்படுத்திய ஹாலிவுட் நடிகையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   ஆஸ்கர் விருதை வாங்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்கள் ஏராளம்பேர். அப்படி தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகையான க்வினெத் பேல்ட்ரோ கதவை நிறுத்த பயன்படுத்தியுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.   கடந்த 1999ம் ஆண்டு ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் […]

3,௦௦௦-த்தை கடந்த பலி! காசாவில் இருந்து வெளியேறிய 2.6 லட்சம் மக்கள்!

தீவிரமடைந்து வரும் போர் தாக்குதலை சமாளிக்க காசாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.   இஸ்ரேல்& பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 3 ஆயிரம் வரை கொல்லப்பட்டதாகவும் அதில் அதிமானோர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து வருகின்ற நிலையில் காசா மீது தாக்குதல் […]

தீபாவளி பண்டிகை: இன்று தொடங்கிய அரசு விரைவு பேருந்து டிக்கெட் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது பயணிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதமான நவம்பர் 12ம் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல நினைக்கும் பயணிகள் முன்கூட்டியே அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுவார்கள். அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (அக்.11) தொடங்கியுள்ளது. 30 நாட்களுக்கு முன்பாக தொடங்கும் இந்த முன்பதிவு வசதியை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி நவம்பர் 10ம் தேதி […]

விஷ ஊசி போட்டு மாணவி தற்கொலை! அதிர்ச்சி தகவல்கள்!

சாதிப் பெயரை வைத்து காதலன் திட்டியதால் வேதனையடைந்த கல்லூரி மாணவி விஷ போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கள்ளக்குறச்சி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தவர் நந்திதா. 19 வயதான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நந்திதா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.   இந்நிலையில் நந்திதா […]

40 குழந்தைகளின் தலைதுண்டிப்பு! அராஜகம் செய்யும் ஹமாஸ் பயங்கரவாதிகள்!

இஸ்ரேலில் 40 குழந்தைகளின் தலைகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் துண்டித்தும் சிலரை உயிரை எரித்தும் கொலை செய்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் பாய்வதும், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஹமாஸ் தீவிரவாதிகள் கொலை செய்து வருவதும் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த மோதலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]

பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம்! சிக்கலில் ஜெகத்ரட்சகன்!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூடையாக பணம் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி என 70க்கும் மேற்ப்டட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கணக்கில் வராத ரூ.4 […]

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்.17ம் தேதி நடைதிறப்பு!

ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதங்களில் முதல் 5 நாட்களுக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலின் நடை வருகிற 17ம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30மணியளவில் தந்திரி கண்டாரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன நம்பூதரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து குத்துவிளக்கேற்றி தீபராதனையும் […]

காவிரி விவகாரம்! டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் இவ்விவகாரத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கடையடைப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 1 லட்சத்திற்கும் […]