எம்.எஸ்.தோனியுடன் விக்னேஷ் சிவன், யோகி பாபு திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் புது கெட்டப்பில் யோகிபாபு சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து முதல் திரைப்படமாக ‘எல்.ஜி.எம்.’ திரைப்படத்தை தயாரித்தார். அதன் இசைவெளியீட்டு விழாவில் எம்.எஸ்.தோனியும் நடிகர் யோகிபாபுவும் அடித்த லூட்டி பல நாட்களுக்கு இணையத்தில் வைரலாகி ரசிக்க வைத்தது. யோகிபாபுவை சி.எஸ்.கே.வில் விளையாட பரிந்துரை செய்வேன் […]
கமல்ஹாசன் கட்சியில் இணையும் ஸ்ருதிஹாசன்? முக்கிய தகவல்கள்!

நடிகரும் தனது தந்தையுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். யூடியூப் உள்ளிட்ட இணையதள பக்கங்களில் அடிக்கடி சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வைரலாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளன. அதன்படி நடிகை ஸ்ருதிஹாசனுடைய நேர்க்காணலில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. எப்போதும் ஸ்டைலிஷ் ஐகானாக இருக்க விரும்பும் ஸ்ருதிஹாசனுக்கு அவரது தந்தை கமல்ஹாசன் பெரும்பாலும் சேலைகளையே பரிசாக அளிப்பாராம். அதிலும் மஞ்சள் மற்றும் வெள்றை நிற […]
மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது? உள்ளிட்ட உட்கட்சி நிர்வாக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. முறிவுக்கு பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எவ்வாறு களத்தில் […]
லியோ சிறப்புக்காட்சி விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட வேண்டும் […]
மகளிர் உரிமைத் தொகை வாங்கிய 8,833 பேர் தகுதிநீக்கம்! முக்கிய தகவல்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்கியவர்களில் 8,833 பேரை தமிழக அரசு திடீரென்று தகுதி நீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த 2 மாதங்களாக பெண்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபா¬யை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது பெரும் […]
7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சமீப நாட்களாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீதான உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜெகநாதன், வணிகவரித்துறை […]
முதலமைச்சர் உயர்நீதிமன்றத்தின் கீழ்வழக்கறிஞர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு.டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞர் திரு. தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் […]
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா, பொருளாளர் திரு. சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் திரு.வி.பி. மணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தை […]
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், திரு. ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு. கமல் கிஷோர், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள், மாநில […]
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படையினர் கைது செய்த 27 தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதில் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

