News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

பிரபல ரவுடி படுகொலை! மதுரையில் பதற்றம்!

மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டியன்பட்ட அருகில் உள்ளது கருவேலம்பட்டி ரெயில்வேகேட். இப்பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   அவரது உடல் மதுரை அரசு  மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது நெல்லை மாவட்டம் […]

தினந்தோறும் 300- 400 நபர்கள் டெங்குவால் பாதிப்பு! ககன்தீப்சிங் பேடி தகவல்!

தினந்தோறும் 300 முதல் 400 பேர் டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்நிலையில் சென்னை பூவிருந்தல்லி அருகே 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை (அக்.17) உயிரிழந்த சம்பவம் […]

நடிகர் அஜித்குமார் மகனுக்கு குவியும் பாராட்டுகள்! என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்தாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   நடிகர் அஜித்குமாரின் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் எந்த அளவுக்கு சமூகவலைதளங்களில் வைரலாகிறதோ அதே அளவுக்கு அவரது குடும்ப புகைப்படங்களும் இணையத்தை தெறிக்கவிடும். அஜித் குடும்பத்தார் சினிமாவுக்கு சென்றால் கூட அதை இணையவாசிகள் லைக் செய்துவிடுவார்கள்.   நட்சத்திர தம்பதியான அஜித்& ஷாலினியின் மகனான ஆத்விக் கால்பந்து போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடும் ஆத்விக் தன்னுடைய […]

தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையும் காங்கிரஸ்? இந்தியா கூட்டணியில் இணைகிறதா?

தெலுங்கு தேசம் கட்சியை காங்கிரஸ் தன் வசம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அக்கட்சியை இந்தியா கூட்டணியில் இணைப்பதற்கான பணிகளும் நடந்து வருவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   பா.ஜ.க. ஆட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை இந்தியா கூட்டணி நிர்வாகிகள் தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கா அனைத்துக் கட்ட நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்கும் திட்டத்தின்படி தெலுங்குதேசம் கட்சியை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   […]

ராமேஸ்வரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்! வைரல் புகைப்படங்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிக்காகவும் சிறப்புக்காட்சி அனுமதி குறித்தும் வழிபாடு நடத்த ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை மறுநாள் (அக்.19) லியோ திரைப்படம் உலகளவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான 4 மணி சிறப்புக் காட்சிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.   இருப்பினும் காலை 9 மணிக்காட்சிக்கு பதில் 7 மணி சிறப்புக்காட்சி […]

ஹமாஸ் முக்கிய தலைவர்களை நெருங்கிவிட்டோம்! இஸ்ரேல் தகவல்!

ஹமாஸ் அமைப்பை இந்த பூமிப்பந்தில் இருந்தே முற்றிலுமாக துடைத்தெறிவோம் என்று இஸ்ரேல் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது உலக  நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இஸ்ரேல்& ஹமாஸ் இடையிலான போர் ஒரு வாரத்தையும் தாண்டி உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினர் 199 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.   ஒரு பக்கம் இஸ்ரேல் நடத்தும் வான்வழி உள்ளிட்ட தாக்குதல்கள் மூலம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் […]

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டுவிழா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டம்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை அலுவலகத்திற்கு நுழைந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு, சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். […]

‘லியோ’ சிறப்புக்காட்சி வழக்கு! உங்களுக்கான சுடச்சுட அப்டேட் இதோ!

லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட […]

33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! முழுவிவரம் உள்ளே!

தமிழகத்தில் மொத்தம் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   தமிழகம் முழுவதும் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது.   காவல்துறை சார்பில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இவ்வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. […]

கட்டணத்தை உயர்த்திய OLA, UBER எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கார் ஓட்டுநர்கள் போராட்டத்தின் எதிரொலியாக ஓலா, உபர் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் ஓலா, ஊபர் மூலம் கார், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பயணத்துக்காகவும் ஓலா, ஊபர் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு வாசலுக்கே வந்து பயணிகளை அழைத்துச் செல்லும் இத்தகைய ஆட்டோ, கார்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு […]