போராட்டம் தற்காலிக வாபஸ்! இடை நிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!

தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று கடந்த 8 நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் கடந்த 8 நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மற்ற இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு […]
இன்று சம்பவம் உறுதி! ‘லியோ’ குறித்து அனிருத் கொடுத்த அப்டேட்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் உறுதியாக வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், […]
அமைச்சர் ரோஜாவை யாரும் பெண்ணாக பார்க்கவில்லை! தெலுங்குதேசம் பதிலடி!

அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகிளரணி தலைவி வாங்கலபடி அனிதா பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமூத்தில் பேசினார். இது சர்ச்சையான நிலையில் அமைச்சர் ரோஜா தனது திருப்பதி வீட்டில் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி கொடுத்து பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் […]
ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தையில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று தங்கப்பட்டியலில் 19வது தங்கத்தை பெற்று பதக்க மழையில் நனைந்து வருகிறது. சீனாவின் ஹாங்கோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்கத்தில் இருந்தே இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தங்களுடைய முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் […]
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்! அக்.15ம் தேதி தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் 15ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்து முடிந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தைத் தொடர்ந்து தற்போது நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்தின் கொடியேற்றம், […]
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா! இன்று கோலாகல தொடக்கம்!

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று (அக்.5) கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் இன்று (அக்.5) இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 […]
‘தலைவர் 170’ பட பூஜை! இணையத்தை தெறிக்கவிட்ட ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ திரைப்பட பூஜை மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முன்னரே இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத்பாசில், ராணா, மஞ்சுவாரியர், […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் அறிவிப்பு!

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு செய்து அறிவிக்கபப்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆவின் பால் கொள்முதல் விலயை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக தற்போது தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதிக […]
குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்! பரபரப்பான டி.பி.ஐ. வளாகம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் 8வது நாளாக ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து […]
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐ.டி. ரெய்டு!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (அக்.5) அதிகாலை முதல் […]

