கொடநாடு வழக்கு! முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மகனுக் சி.பி.சி.ஐ.டி சம்மன்!

கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தரிகியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் சொந்த பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. இதில் […]
‘‘ஸ்டார்ட் அப் தமிழா’’ ரியாலிட்டி ஷோ! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்!

ஸ்டார்ட் அப் தமிழா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ‘ஸ்டார்ட் அப் தமிழா’’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்து உரை நிகழ்த்தினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் புதிய தொழில் […]
பிரமோத்குமார் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்-! நீதிமன்றம் உத்தரவு!

பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் உள்பட 5 பேரும் வருகிற 28ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் முதலீடு […]
மன்சூரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட திரிஷா! எக்ஸ் பக்கத்தில் பதிவு!

சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்டதாக நடிகை திரிஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருந்தது திரைத்துறை மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக நடிகர் மன்சூர் அலிகான் மீது […]
மனமுடைந்து போன விசித்ராவின் மகன்! கணவர் வேதனை!

விசித்ரா தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதை அறிந்த அவரது மூத்த மகன் கல்லூரிக்கு கூட செல்லாமல் மனமுடைந்து போயுள்ளதாக அவர் கணவர் தெரிவித்துள்ளார். பிக்பாஸ்7ல் பூகம்பம் என்ற டாஸ்கில் பேசிய விசித்ரா, தான் சந்தித்த பாலியல் அத்துமீறல் பிரச்சினைகள் குறித்து பேசியது சமூகவலைதளங்களில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. யார் அந்த நடிகர் என்றும், இவர்தான் அந்த நடிகர் என்றும் பல்வேறு யூகங்கள் இணையத்தில் வெளியாகி கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக […]
ஹீரோவான நடிகர் விஜய்சேதுபதியின் மகன்! ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாசேதுபதி ‘பீனிக்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் விஜய்சேதுபதி ஆரம்ப காலங்களில் சிறு சிறுவேடங்களில் திரைப்படங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயல்பான நடிகர் என்ற பெயர் பெற்ற விஜய்சேதுபதி தனது மகனான சூர்யா சேதுபதியை […]
பெட்ரூமில் விஷப்பாம்பை விட்ட கணவர்! மனைவி, குழந்தைக்கு நடந்த விபரீதம்!

மனைவி மற்றும் குழந்தை பெட்ரூமில் உறங்கிக் கொண்டிருந்த போது அங்கு விஷப்பாம்பை விட்டு அவர்களை கொலை செய்த கணவரை ஒரு மாதம் கழித்து ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கபிசூர்யா என்ற பகுதியில் 25 வயதான கணேஷ் பத்ரா தனது மனைவி பசந்தி பத்ரா மற்றும் 2 வயது பெண் குழந்தையான டெபாஸ்மிதாவுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று […]
தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கோரி தொடர் முழக்கக் கூட்டம்! பா.ம.க. தலைவர் அன்புமணி உரை!

உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி நடைபெற்ற தொடர் முழக்க கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.ம.க.வினர் திரண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் கேட் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் நிலையில் இக்கூட்டத்தில் திரளான வழக்கறிஞர் மற்றும் பா.ம.க.வினர் ஒன்றாக அமர்ந்து […]
28 பேரை கடித்து குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று! அச்சத்தில் ராயபுரம் மக்கள்!

சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்துக் குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. அமைதியாக இருக்கும் தெருநாய்கள் திடீரென்று தெருக்களில் சென்று கொண்டிருக்கும் பொது மக்களை கடித்து குதறும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரத்தில் தெருநாய் […]
மூடப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரகம்! இந்தியா உதவவில்லை என குற்றச்சாட்டு!

Lorem nulla mollit laborum dolor exercitation ut. Et ut consectetur elit ullamco non. Id fugiat enim dolore sint ex enim non voluptate eu. Exercitation excepteur voluptate fugiat laboris quis adipisicing. Incididunt Lorem cupidatat laboris labore. Aliquip aliquip nostrud excepteur aliqua mollit ex amet non. Quis consequat velit deserunt in eiusmod magna amet ea est. Mollit […]

