News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

திமுக கூடாரத்திலிருந்து விஜய் கூடாரத்திற்கு காங்கிரஸ் கட்சி வந்துவிட்டது. தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் ஆதரவளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மதவாத சக்திகளை என்றும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பதே நிபந்தனை. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தவெக உடன் கூட்டணி என காங்கிரஸ் அறிவிப்பு.

விஜயுடன் கூட்டணி போவது காங்கிரஸின் கட்சியின் முடிவு தான். ஆனால் அவர்கள் திமுகவிற்கு செய்யும் நன்றிக்கேட்ட துரோகம் என்று திமுகவினர் கொதிக்கிறார்கள்.

ஏனென்றால், 2019, 2024 ஆகிய தேர்தல்களில் திமுக, காங்கிரஸுடன் நின்றது. அவர்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்தது. அரசியல் அழுத்தங்கள், சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள், மத்திய நிதி குறைப்புகள் இருந்தபோதும் கூட அந்த கூட்டணியை விட்டு விலகவில்லை.

யாருமே காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் மதிக்காத சூழலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். இத்தனை செய்த பிறகும் காங்கிரஸ் தன்னுடைய புத்தியைக் காட்டிவிட்டது என்று திமுகவினர் கொதிக்கிறார்கள்.

திமுக ஆதரவுடன் ஜெயித்துவிட்டு தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது பச்சைத் துரோகம். காங்கிரஸ் தோற்று நின்ற பத்து வருஷம் வேறெங்கும் சாயாமல் பாஜக பக்கம் போகாம திமுக நின்றது. ஆனால், திமுக தோற்ற அடுத்த நொடியே காங்கிரஸ் பச்சோந்திகள் சென்று விட்டது ஆபத்தில் நிற்பவன் தான் உண்மையான நண்பன் ஓடுபவன் துரோகி.  காங்கிரஸ் துரோகி, ராகுல் துரோகி என்று கொதிக்கிறார்கள்.

நியாயமான கொதிப்பு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link