15 ஆண்டுகள் பழைய வாகனங்கள்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

15 ஆண்டுகளுக்கு மேலான அரசு பேருந்துகள் மற்றும் அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழைய வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் இயங்கி வரும் 15 ஆண்டுகளுக்கு அரசுத்துறையில் இயங்கி வரும் வாகனங்களின் மொத்த விவரங்களை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று […]
விவாகரத்து கோரிய முன்னாள் அமைச்சர்! கணவர் மீது போலீசில் புகார்!

புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து ராஜினாமா செய்தவர் சந்திரபிரியங்கா. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதோடு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா, தனது கணவர் சண்முகம் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவரான சண்முகத்திடம் இருந்து […]
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 13ம் தேதியை விடுமுறை நாளென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதற்கு மறுநாளான திங்கட்கிழமையை (நவ.13) விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். வெளியூர் செல்லும் […]
விராட் கோலி சுயநலவாதிதான்…. ஆனால்! வெங்கடேஷ் பிரசாத் சொல்வது என்ன?

தனது அணியின் வெற்றியை உறுதி செய்வதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சுயநலவாதியாக இருக்கிறார் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறி அவரை பெறுமைப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று நடைபெற்ற இந்தியா& தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 326 ரன்களை எடுத்தது. இதில் விராட் கோலி 101 ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை […]
தலைமை செயலாளரை திடீரென்று அழைத்து பேசிய ஆளுநர்! தமிழகத்தில் பரபரப்பு!

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கு அழைத்து திடீர் சந்திப்பு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சினையை பூதாகரமாக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் […]
சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது- அமைச்சர் உதயநிதி உறுதி!

சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி அதனை சந்திப்போம் என்று அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி அவரிடம் கையெழுத்து பெற்றார். […]
நீட் தேர்வை முதல்முதலாக எதிர்த்தவர் கலைஞர்! உதயநிதி பெருமிதம்

நீட் தேர்வு சட்டமாக்கப்படுவதற்கு முன்பாகவே அதை முதல்முதலாக எதிர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று அமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பூர்வீமாக திருவாரூரில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘நீட் விலக்கிற்காக கையெழுத்திட்ட மாணவ – […]
திருமணத்தில் முடிந்த அமலாபால் காதல்! யார் இந்த ஜெகத் தேசாய்?

நடிகை அமலாபால் தனது காதலனான ஜெகத்தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அமலாபாத் ‘சிந்துசமவெளி’ திரைப்படத்தில் வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை யார் இவர் என்று கேட்கவைத்துவிட்டார். அதைத்தொடர்ந்த மைனா, நிமிர்ந்துநில், தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இருப்பினும் சினிமாவில் கவனம் செலுத்திய நடிகை அமலாபால், வேலையில்லா […]
தொழில்நுட்ப கோளாறு! 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை!

மின்சார உபகரணங்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் 20 நிமிட இடைவெளியில் நீல வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று காலை 11.20 மணியளவில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென்று மின்சார உபகரணங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் […]
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி! புது தகவல்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்து சாதனை படைத்துள்ளார். 2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தரப்பட்டியலில் இருக்கும் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். விராட் தனது […]

