இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா& நியூசிலாந்து நாளை மோதல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நாளை நடைபெற உள்ள இந்தியா& நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தன. […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! லண்டனில் சோகம்!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை கடந்த 12ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டினரும் கோலாகமாக கொண்டாடினர். அதேபோல் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடினார்கள். தீபாவளி பண்டிகையன்று இரவு 10.30 மணியளவில் இவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு 2 […]
பெட்ரோல் குண்டுவீச்சு! ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகையான ராஜ்பவன் மீது கடந்த 25ம் தேதி ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கருக்கா வினோத்தை பிடித்து அவரிடம் இருந்த மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய […]
அரசு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 2நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் […]
தமிழகத்தில் முழுமையாக நிரம்பிய 64 ஏரிகள்! கனமழை எதிரொலி!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 16ம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி இன்று அதிகாலை முதல் தமிழகம், […]
அம்பலமான ரகசிய சுரங்கப்பாதை! இஸ்ரேல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

காசா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் ரகசிய சுரங்கப்பாதை அமைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் போர் மூண்டது. போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசா பகுதியே முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது. வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக 40 சதவீத குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் […]
இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையில் உணரப்பட்டது!

இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்திய பெருங்கடலில் இன்று (நவ.14) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு குடும்பத்துடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்திய […]
ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஈரோட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதே போல் திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் கட்டப்பட்ட நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன. அதேபோல் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் […]
பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை! கேரளாவில் பரபரப்பு!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் புலம் பெயர் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் இவரது 5 வயது மகளை அசஃபக் அலாம் என்ற இளைஞர் சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தான். சிறுமியின் பிரேத […]
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மிதமான மற்றும் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் […]

