News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! ராமநாதபுரத்தில் பரபரப்பு!

10ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தில் 15 வயதான தீபக் என்ற மாணவன் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளியில் தூக்கில் தொங்கியபடி மாணவன் தீபக் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சகமாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.   ஆசிரியர்கள் கொடுத்த தகவலையடுத்து விரைந்து சென்ற கடலாடி […]

உலகக்கோப்பை மீது கால்களை வைத்து அவமதித்த மிட்செல் மார்ஷ்!

உலகக்கோப்பையின் மீது கால்களை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கண்டனங்களை பெற்றதுடன் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 13வது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 241ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முன்னரே  கூறியது போல், கிரிக்கெட் […]

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை புகழ்ந்த பேட் கம்மின்ஸ்!

இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அபாரமாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.   13&வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.   இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்த நிலையில் 241 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய […]

விஜயகாந்திற்கு செற்கை சுவாசம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பில் இருந்தும் கட்சிப்பணியில் இருந்தும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வெளிநாட்டிற்கும் சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.   இதனால் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தலைமையில் கட்சியின் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. […]

மருத்துவமனைக்கு கீழ் ரகசிய சுரங்கப்பாதை சிக்கியது! இஸ்ரேல் அதிரடி!

காசா மருத்துவமனைக்கு கீழ் ரகசிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.   கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தரைவழி, வான்வழி தாக்குதல்களால் காசா நகரமே முற்றிலும் மயானபூமியாக காட்சியளிக்கிறது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பலியாவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி […]

ரூ.2 லட்சம் பரிசு பெற்ற ‘நீர்க்கொல்லி’ புத்தகம்! ப.சிதம்பரம் வழங்கினார்!

‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ வழங்கும் விழாவில் ‘நீர்க்கொல்லி’ புத்தகத்துக்கு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசாக வழங்கப்பட்டது.   சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று (நவ.19) கடந்த 2022ம் ஆண்டுக்கான ‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ விழா எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் நடைபெற்றது.   இவ்விழாவில் எழுத்தாளர் ஷாராஜ் எழுதிய ‘நீர்க்கொல்லி’ நாவல் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசை ப.சிதம்பரம் மற்றும் கவிஞர் வைரமுத்து […]

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி! விராட் கோலிக்கு அனுஷ்கா ஆறுதல்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோல்வியடைந்த நிலையில் துவண்டு போன கணவர் விராட் கோலியை மனைவி அனுஷ்கா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சுப்மன் கில், கேப்டன் […]

அதிகாலையில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிர மக்கள்!

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மகாராஷ்டிர மக்கள் தூக்கத்தை தொலைத்து தெருக்களில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   சமீப காலமாகவே பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக […]

பிரபல நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

பிரபல நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயப்பிரதா என்றால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலி திரைப்படம்தான் பலரது நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஜெயப்பிரதா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலும் தசாவதாரம் திரைப்படத்தில் கேமியோ […]

1.3 லட்சம் ரசிகர்களுக்காக இதை செய்வோம்! பேட் கம்மின்ஸ்!

நாளை மைதானத்தில் கூடும் 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று ஆஸ்திலேரிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.   நாளை மதியம் 2 மணியளவில்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில்  உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் […]