News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

இணையத்தில் சீனர்களின் கோல்டு லோன் மெகா மோசடி… கண்ணி வைத்துப் பிடித்த கரூர் சைபர் கிரைம் போலீஸ்

கரூர் மாவட்டம், கரூர் சைபர் கிரைம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் காணாமல் போன 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 311 மொபைல் போன்கள் மற்றும் இணையதள மோசடிகளில் பாதிக்கப்பட்ட தொகை 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகரால்  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதோடு இணையதளத்தைப் பயன்படுத்தி நடந்திருக்கும் சீட்டிங் குறித்து அதிர்ச்சி தகவல்களையும் கரூர் மாவட்ட காவல் துறையினர் பகிர்ந்துகொண்டனர். தன்னை தங்க […]

தமிழகத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

இன்று தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும்…. தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., – பகோர்லா செபாஸ் கல்யாண், சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., – சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் – […]

சென்னை இரண்டாவது தலைநகர்… ஆளுநர் பதவிக்கு ஆப்பு… திருமாவளவனின் தீர்மானங்கள் செல்லுபடி ஆகுமா..?

இந்தியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கும் நிலையில், திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எனக்கு திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை […]

ரஜினி மேடையில் விஜய்க்கு செம மாஸ்… சர்ச்சையான ரஜினியின் சங்கி முத்திரை

எனக்கு காவி கலர் பூசப்பார்க்கிறாங்க, நான் அதுல சிக்க மாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார். சமீபத்தில் ராமர் கோயில் விழாவில் அமர்ந்து பெருமிதப்பட்டு திரும்பியிருக்கிறார். ஆகவே, ரஜினியை சங்கி என்று அவரது ரசிகர்களே வேதனையுடன் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ரஜினிக்கு சங்கி முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், பொதுஜன ஆதரவை இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது, வசூல் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், லால் சலாம் ஆடியோ விழாவில், ‘ரஜினி சங்கி இல்லை’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் […]

குடியரசு தின விழாவில் கவர்னரை வைத்துக்கொண்டே பல சம்பவங்கள் செய்த ஸ்டாலின்..!

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதில் பல்வேறு நிகழ்வுகள் கவர்னரை திட்டமிட்டு சம்பவம் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் – தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திகளை இருவரும் பார்வையிட்டனர். இந்தியா முழுக்க பேசுபொருளாக இருந்த மணிப்பூர் கலவரத்தை பிரதமர் சென்று பார்வையிடவே இல்லை. இதனை வலியுறுத்தும் வகையில் மணிப்பூர் மாநில கலைக் குழுவினரின் […]

காற்றில் கீதமாக கரைந்துபோன பவதாரணிக்கு இத்தனை கொடூரமான நோயா..? நெஞ்சை உருக்கும் பவதாரணியின் சூப்பர்ஹிட் பாடல்கள்..!

தமிழர்களுக்கு இளையராஜாவின் இசை இல்லாமல் பகல் விடியாது, இரவு முடியாது. அந்த அளவுக்கு தமிழர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது இளையராஜாவின் இசை. அந்த இசைஞானியின் வாரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி. இந்த மூவரில் இளையவரான பவதாரணியின் மறைவு தமிழக இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இளையராஜாவின் மகளாக மட்டுமின்றி அற்புதமான பாடகராகவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த பவதாரணிக்கு இப்போது 47 வயது மட்டுமே ஆகிறது. கடந்த சில வருடங்களாக பவதாரணிக்கு உடல் நலத்தில் […]

நடிகர் விஜய் திடீர் தேர்தல் ஆலோசனை.. கட்சி மாறத் துடிக்கும் முக்கிய ஆளும் கட்சி வி.ஐ.பி.

தென் தமிழகத்தை மிரட்டிய மிக்ஜாம் புயல் மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அதிரடி காட்டிய நடிகர் விஜய், திடீரென இன்று மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் ஆலோசனை நடத்தியிருக்கிறார். விரைவில் அரசியல் இயக்கம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுவை மாநிலங்களிலிருந்ந்தும் நிர்வாகிகள் வந்திருந்தார்கள். அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நடிகர் விஜய் அவரவர் […]

பத்திரிகையாளர்கள் மீது அண்ணாமலை மீண்டும் அநாகரீகப் பாய்ச்சல்… மூத்த பத்திரிகையாளர்கள் அனைவரும் தி.மு.க.வின் வெங்காயங்களாம்

கார்த்திகை செல்வன் எடுத்த ஒரு பேட்டி குறித்து ’பல்லுபடாம…’ என்று சாதாரண நபர்கள் பேசுவதற்குக் கூசும் வார்த்தைகளை சகஜமாகப் பயன்படுத்தினார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பிய நேரத்தில், இதெல்லாம் கொங்கு பகுதியில் சாதாரணம் என்றும் இதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் பேசியிருந்தார் அண்ணாமலை. தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர் அருவருக்கத்தக்க பேச்சை வெளிப்படுத்தியதைக் கண்டித்து மூத்த பத்திரிகையாளர்கள் ராம், குணசேகரன், அரவிந்தாக்‌ஷன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், திருஞானம், கவிதா முரளீதரன் போன்ற […]

மோடி ஆசிர்வாதத்துடன் போயஸ் புது பங்களாவில் சசிகலா… தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்..?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வரும்போது போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் குடியேற ஆசைப்பட்டார் வி.கே.சசிகலா. ஆனால்,  எடப்பாடி பழனிசாமி அவரது ஆசையை கலைக்கும் வகையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றியது. அதோடு நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது. தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி ஆன்மீக பயணம் கிளம்பினார். எடப்பாடிக்கு சிக்கல் […]

வைகோவுக்கு எம்.பி. சீட் இல்லை..! தி.மு.க. உறுதி… துரை வைகோ கூட்டணியில் இருந்து விலகுவாரா..?

கடந்த முறை மக்களவை தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டது. அதோடு மாநிலங்களவையும் வைகோவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது. அந்த சீட் தற்போது முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் வைகோவை மாநிலங்களவைக்கு அனுப்பப்போவதில்லை என்பதை தி.மு.க. உறுதி செய்துவிட்டதாம். கடந்த முறை போன்று மக்களவைக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களவை சீட் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குரியாகியுள்ளது. இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் […]