News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பா.ஜ.க.வின் பால் கனகராஜை தோற்கடிச்சுட்டாங்க… களம் இறங்கிய தி.மு.க.. மூத்த புள்ளிகள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை […]

மிக்ஜாம் புயல் பேரிடர்: 5,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய கனிமொழி எம்.பி.!

மிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. நிவாரணப் பொருட்களை வழங்கினார்.   வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், புத்தகங்கள் […]

மிக்ஜாம் புயல் பேரிடர்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காசோலையாக வழங்கினர்.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் […]

கருணாநிதி சிலைக்கு அனுமதி இல்லையா..? மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்புக்கு ஆபத்து

கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான சிலைகளை நிறுவும் முயற்சியில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதுவும் முக்கியமாக ஒவ்வொரு ஊரின் முக்கிய பகுதிகளிலும் சிலை வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்த வகையில் கருணாநிதியின் சினிமா பங்களிப்பை காட்டும் வகையில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் கருணாநிதி சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியது. தனியாரின் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவக்கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. எதிர்ப்பு வலுப்பதைக் கண்டதும், அந்த இடத்தில் கருணாநிதி சிலையை […]

ஓடி ஒளியும் போதைப்பொருள் குற்றவாளிகள்… அதிரடி வேட்டையில் 148 பேர் கைது…

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுஜ் பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுக்க அதிரடி வேட்டை நடத்திவருகிறார்கள். அதன்படி நவம்பர் 29 தேதி முதல் டிசம்பர் 23 வரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, 886 கஞ்சா, 1 கிலோ மெத்தகுலோன், 100 டைடோல் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரன், […]

தமிழகத்திற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.   கிழக்கு திசைக் காற்றில் மாறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி: அமைச்சர் உதயநிதி ஆய்வு!

எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை அமைச்சர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டார்.   சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் கச்சா எண்ணெய் படலம் பரவியது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவுகள் படிந்து நாசமானது. மேலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தநிலையில் அதனுடன் சேர்த்து எண்ணெய் […]

மிக்ஜாம் புயல் நிவாரணத்தொகை: புதுப்பேட்டை ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்!

சென்னை புதுப்பேட்டையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நிவாரணத் தொகைக்கான டோக்கன்களை வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்து அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியது. வீட்டு உபயோகப் பொருட்கள், பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியது. […]

மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.1.01 கோடி வழங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பணியாளர்கள்!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் பேரிடர் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு உதவித் தொகை வழங்கி வருகின்றனர்.   அந்த வகையில் இன்று (டிச.15) தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான ரூ.1.01 கோடிக்கான காசோலையை […]

காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி யாத்திரை! கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

வாரணாசியில் நடைபெற உள்ள காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வாரணாசி செல்லும் பயணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழியனுப்பு, ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார்.   காசி தமிழ் சங்கமத்தை மத்திய அரசு முதன்முறையாக கடந்த ஆண்டு நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இசைஞானியின் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. […]