விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொ.ப.செ. த்ரிஷா இல்லைன்னா கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், அரசாங்கத்தை எதிர்த்து வீர வசனம் பேசினால் போதும், சிலருக்கு திருமண மண்டபத்தில் வைத்து நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் போதும் தமிழகத்துக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கணக்கு போட்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லிவருகிறார்கள். 2026 தேர்தலில் நான் முதல்வர் ஆகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன், இப்போது விஜய் குறுக்கே வந்து இடைஞ்சல் செய்கிறார் என்று சரத்குமார் கோபம் […]
பா.ஜ.க.வுக்கு விஜய் 1 வருட கால்ஷீட்… 1000 கோடி ரூபாய் பட்ஜெட் அரசியல்

குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் அறிவித்திருக்கும் கட்சிக்குப் பின்னே அமித் ஷாவின் தேர்தல் கணக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய எந்த ஒரு விஷயம் குறித்தும் இதுவரை நடிகர் விஜய் கருத்து கூறியது இல்லை, ஒரே ஒரு மக்கள் போராட்டத்தில் கூடகலந்துகொண்டது இல்லை. ஒரே ஒரு பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்களை சந்தித்தது இல்லை. இந்த நிலையில், ஒரு புதிய படத்தின் அறிவிப்பு போன்று தமிழக வெற்றிக் […]
விஜய் சினிமாவுக்கு முழுக்கு, முழுநேர அரசியல் தலைவர்… தமிழக வெற்றி கழகத்துக்கு 2026 இலக்கு…

விஜய் சினிமாவுக்கு முழுக்கு, முழுநேர அரசியல் தலைவர்… தமிழக வெற்றி கழகத்துக்கு 2026 இலக்கு… அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற குழப்பத்துக்கு விடை கொடுப்பது போன்று இன்று கட்சிப் பெயரை அறிவித்து அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தன்னால் இயன்ற வரை சேவைகளை செய்துவருறோம் என்றாலும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர தன்னார்வ அமைப்பினால் முடியாது என்பதாலே கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழக […]
சாட்டை துரைமுருகனை என்.ஐ.ஏ.வில் மாட்ட வைத்தது சீமானா..? குழப்பத்தில் தடுமாறும் தம்பிகள்

நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தி.மு.க.வினர் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள். அதாவது பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்கு நாடகம் போடுவதாக தி.மு.க.வினர் கூறிவருகிறார்கள். இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினர், தி.மு.க.வை பா.ஜ.க.வின் பி.டீம் என்று பொதுக்கூட்டங்களில் சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்கள். இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசை சாட்டை துரைமுருகன் ஏறுக்குமாறாக பேசி வம்பிழுக்கிறார் என்பது தொடங்கி பல்வேறு விவகாரங்களில் நாம் தமிழர் சீமானுக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் கருத்துவேறுபாடு நிகழ்வதாக சொல்லப்பட்டு […]
கண்டா வரச்சொல்லுங்க என்று எடப்பாடியை கிண்டலடிக்கும் பன்னீர் டீம். பட்ஜெட் பரிதாபங்கள்

திருமண விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘’நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் பா.ஜ.க கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான ஒன்றிய பட்ஜெட்டை உறுதியாக நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்கு வெளியிடும். சி.ஏ.ஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பா.ஜ.க-வும், நாங்களும் ஒரே கூட்டணியில்தான் இருக்கின்றோம். 16-ம் […]
சாட்டை வீட்டில் என்.ஐ.ஏ. ரெய்டு, இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன்… அண்ணாமலையுடன் சீமான் மோதியது காரணமா..?

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பான தீவிரவாத இயக்கங்களிடமிருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன் […]
சாவர்க்கர் ஹீரோ.. இந்திராகாந்தி வில்லி – பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார சினிமாக்கள் ரெடி.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வெல்வதற்கு ஆளும் பா.ஜ.க. பல்வேறு கணக்குகளை போட்டுவருகிறது. ராமர் கோயிலை அடுத்து ஞானவாபி மசூதி விவகாரத்தையும் மதுரா கிருஷ்ணர் கோயிலையும் குறிவைத்து இயங்கிவருகிறது. அதோடு, சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டமும் அமலாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முழுக்க பா.ஜ.க.வின் கருத்துக்களை கொண்டுசேர்க்கும் வகையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, ரந்தீப் ஹூடா நடித்துள்ள “ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்” படம். இதில் சாவர்க்கர் ஒரு […]
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஸ்டாலின், அரவிந்த் கெஜராலுக்கு விடப்படும் எச்சரிக்கையா?

அமலாக்கத் துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் கெத்து காட்டி வருகிறார் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல், பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து இறக்கியே தீரவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிவருகிறார். இந்த இருவருக்கும் இடப்பட்டிருக்கும் எச்சரிக்கையே முதல்வர் ஹேமந்த் சோரன் கைது என்று அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28ம் […]
அடேங்கப்பா இத்தனை கோடியா..? எடப்பாடி பழனிசாமியை மிரளவைத்த ராமதாஸ் தேர்தல் பேரம்

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதேநேரம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வில் இன்னமும் அதற்கான எந்த அசைவும் தென்படவில்லை. எப்படியாவது பா.ம.க.வை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாக்குகளை அள்ளிக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால், பா.ம.க. போடும் பிளானே வேறு. இந்த தேர்தலில் அவர்களுக்கு தி.மு.க.வில் அழைப்பு இல்லை என்றாலும் அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் அழைப்பு இருக்கிறது. அடுத்த தேர்தலிலும் மோடியே வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நிலக்கோட்டையில் தேவேந்திரகுல வேளாளர்கள் திடீர் போராட்டம்… அடுத்து கருப்புக்கொடி, தேர்தல் புறக்கணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீமகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி மண்டகப்படி அமைத்துத் தரும்படி நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இந்து அறநிலையத் துறை சார்பில் இதற்கு அனுமதி வழங்குவது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி மண்டகப்படி கட்டித்தர மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து நேரடியாக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

