News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எண்ணெய் கசிவை நீக்கக் கோரி போராட்டம்! திருவொற்றியூரில் பரபரப்பு!

எண்ணூரில் படிந்துள்ள எண்ணெய் கசிவை உடனடியாக நீக்கக் கோரி சென்னை திருவொற்றியூரில் சின்னக்குப்பம் மீனவ மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மிக்ஜாம் புயலின் போது கசிந்த எண்ணெய் படலம் எண்ணூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்புள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், மீன்பிடி படகுகள், வலைகள் என அனைத்தும் நாசமானதால் அப்பகுதி மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீனவ குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கவும் நிவாரண தொகையை அறிவித்துள்ளது. மேலும் எண்ணெய் கசிவை […]

9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிதான் மிகப்பெரிய பேரிடர்! அமைச்சர் உதயநிதி தடாலடி!

9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிதான் மிகப்பெரிய பேரிடர் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தில் இளம்வயதிலேயே அமைச்சர் உதயநிதி, இந்திய அளவில் மிகப்பெரிய பிரபலமாக மாறியதற்கு அவரது துணிச்சலான பேச்சு ஒரு காரணமாகும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் சனாதனம் குறித்த பேச்சு. இந்த விவகாரத்தில் சட்டசிக்கல்களை நான் சந்திக்கத் தயார் என்று மிகவும் தைரியமாக அமைச்சர் தயாநிதி பேசியது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த […]

நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அமைச்சர் ரூ.125.50 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கினார்!

நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பை அமைச்சர் உதயநிதி வழங்கி அவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்   சென்னை வாலாஜாரோட்டில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் இன்று (டிச.23) சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,827 நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,472 சகோதரிகளுக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பை வழங்கினார். […]

கர்நாடக ஹிஜாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! முதலமைச்சர் சித்தராமையா உறுதி!

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் ஹிஜாப் பிரச்சினைக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் மத அடையாள உடையான ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் போது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப் அணிவது எங்கள் […]

சென்னையில் கிறிஸ்துமஸ் விழா: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்பு!

சென்னை சாந்தோம் கதீட்ரல் ஆரம்பப் பள்ளியில் த.மா.கா. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (டிச.22) நடைபெற்றது. வடசென்னை த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ. சாக்கோ இவ்விழாவுக்கு  தலைமை தாங்கிய நிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகளை வழங்கினார்.    அதன் பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மகிழ்ச்சியாக நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, மாநில […]

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த உதயநிதி… ’உள்ளே” தள்ளும் ஆக்ஷனுக்கு தயாராகும் பா.ஜ.க.

‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்’ என்று உதயநிதியின் கேள்வி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அமைச்சருக்கு பாஷை தெரியவில்லை’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்திருக்கிறார். அவர், ‘யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் […]

எண்ணெய் கசிவு பாதிப்பு! குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6 ஆகிய 7 பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.   மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 9,001 குடும்பங்களின் துயரை […]

வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பாலம்: தற்காலிக சாலை அமைப்பு!

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய பெருமழை வெள்ளத்தால் பாலம் உடைந்த நிலையில், குருங்காட்டூர் வழியாக ஏரல் பகுதிக்கு செல்ல தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெருமழை வெள்ளத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த […]

சாக்‌ஷிக்கு ஆதரவு தரும் தங்க மகன் விஜயேந்தர் சிங்… அடுத்தது யாரோ..?

மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷிக்கு ஆதரவாக பல பிரபல்லங்கள் தொடர்ந்து களத்தில் குதித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அவர் பெற்ற பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து  இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் சாக்‌ஷிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். , சாக்‌ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு வீரராக சாக்‌ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் […]

குறைகளை நிவர்த்தி செய்ய உறுதி! தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.

பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி உறுதியளித்துள்ளார்.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் […]