News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிரேமலதாவுக்கு பேரம் பேசும் அதிகாரம்…. கடலூர் மாநாட்டில் சீட்டிங்

ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், இதுவரை பேரம் படியாத காரணத்தால் கூட்டணி அறிவிப்பு இல்லாமல் நழுவிவிட்டார். இந்த முறை விஜய் கட்சியிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதால் பேரம் பலமாக இருக்கும் என்கிறார்கள். கடலூர் மாவட்டம், வேப்பூர் மாநாட்டில் பிரேமலதாவுக்கு கிரீடம், வாள் பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டு ஆவேசமாகப் பேசினார் பிரேமலதா. அதாவது, ‘’இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். […]

எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி..? நேற்று அமித்ஷா இன்று நயினார்

அமித்ஷாவை சந்தித்துப் பேசி சென்னை திரும்பியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை இன்றைய தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசுவது பரபரப்பாகிவருகிறது. இன்று அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கும் இபிஎஸ்க்கு நெருக்கடி தரும் வகையில் பாஜக அவசரம் காட்டுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். நேற்றைய தினம் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் இபிஎஸ். இதையடுத்து பாஜக 60 சீட் கேட்பதாகவும் மூன்று அமைச்சர் பதவி கேட்பதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து பேசிய நயினார், ‘’பாஜக 56 தொகுதிகள், […]

பொங்கல் நோட்டு திமுகவுக்கு ஓட்டு..? திமுக குஷி நிலைக்குமா?

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கொரனா உதவித் தொகை நாலாயிரம் ரூபாய், மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம், பொங்கல் பரிசாக மூன்றாயிரம் என்று ஸ்டாலின் கொடுத்திருப்பதால், இந்த தேர்தலில் மக்கள் திமுகவை கைவிட மாட்டார்கள் என்று நிர்வாகிகள் செம குஷியாக இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த ஸ்டாலின், அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் நெருங்குவதால் கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். இந்த வகையில், […]

தினகரனுக்கு எடப்பாடி பச்சைக் கொடி. சசி, பன்னீர் அவுட்

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக டெல்லி செய்தி தெரிவிக்கிறது. அமித்சாவை சந்தித்தபிறகு இன்று காலை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ’’அரசு ஊழியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் திமுக அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்றைக்கு மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த […]

நேருவை காப்பாற்றுவாரா ஸ்டாலின்..? தேர்தலுக்கு ஜெயில்

அமைச்சர் நேரு பணி நியமன ஆணைகளில் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், அதிமுக வழக்குப் பதிவு செய்ததும் அலறிப்போய் உத்தரவு கொடுத்திருக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களுக்காக அமைச்சர் கே.என். நேரு தனது உறவினர்கள் மூலம் 1,020 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. […]

தேர்தலுக்கு ஜனநாயகன்… அமித் ஷாவுக்கு விஜய் எச்சரிக்கை…?

அரசியல் மீட்டிங்கை தடுத்து நிறுத்த முயற்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேடையிலே ஸ்டாலின் அங்கிள் என்று மிரட்டல் விடுத்தார் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தை திட்டமிட்டு தள்ளி வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு மேடையில் எப்படி எச்சரிக்கை செய்வாரோ என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ‘’எங்கள் அன்பிற்குரிய ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக […]

விஜய் ஜனநாயகன் சிக்கலுக்கு சதி…. பாஜக நாடகமா..?

தைப்பொங்கல் வெளியீடு என்று 9ம் தேதிக்கு ஜனநாயகன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையிலும் சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்கவில்லை. ஏ சர்டிஃபிகேட் மட்டுமே பஞ்சாயத்து என ஒரு குரூப் கூறிவரும் நிலையில், பாஜகவும் விஜய்யும் சேர்ந்தே பரபரப்பு கிளப்புவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இது குறித்து பேசுபவர்கள், ‘’ஜனநாயகன் படத்தில் வன்முறையும் ரத்தம் சிந்தும் காட்சிகளும் ஓவரோ ஓவர் என்பதால் ஏ சர்டிஃபிகேட் கொடுக்க சென்சார் முடிவெடுத்திருக்கிறார்கள். இதை தயாரிப்பு தரப்பு ஏற்காமல் கோர்ட்டுக்கு போவோம் என்று அதிரடி காட்டியதால் […]

அன்புமணிக்கு எத்தனை சீட்..? எடப்பாடி கூட்டணியில் ராமதாஸ்..?

இன்று காலை அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைந்திருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணிக்கு 17 சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராமதாஸ்க்கு 5 சீட் கொடுக்கவும் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. கிரீன்வேஸ் சாலை  எடப்பாடி பழனிசாமிஇல்லத்தில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக, பாஜக இடையிலான […]

மூன்று பக்கமும் கூட்டணி ஆசை. அலைபாயும் பிரேமலதா

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்து விரட்டப்பட்ட பிரேமலதா, இப்போது முன்கூட்டியே உஷாராகி ஒரே நேரத்தில் மூன்று பக்கமும் பேசிவருகிறார். அதாவது திமுக, அதிமுக, விஜய் கட்சியினரிடம் எத்தனை சீட் என்று கேட்பது அரசியல் வில்லங்கமாகிவருகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, […]

திமுக கூட்டணி டமால்…? ஓங்கியடிக்கும் மாணிக்கம் தாகூர்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காத திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியில் ஒரு கும்பல் முயற்சி செய்துவருகிறது. அவர்களுக்கு வழிகாட்டும் மாணிக்கம் தாகூருக்கு திமுகவினர் அடி மேல் அடி கொடுக்க, அவரும் செமையாக பதிலடி கொடுத்துவருகிறார். லயோலா கல்லூரி வெளியிட்ட ஐபிடிஎஸ் தகவலை பரப்பும் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 3.10% வாக்குகளே உள்ளன என்று கூறுகிறார்கள். அதோடு, ஆட்சியில் பங்கு என்றாலே அது ஆர்.எஸ்.எஸ். குரல் என்றும் […]