பிரதமரை நேரில் சந்திக்கும் உதயநிதி… நிதி கேட்டு நெருக்கடி கொடுப்பாரா..?

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று டெல்லி செல்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து நேரில் வருவதற்கு வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், இதுகுறித்து […]
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]
தமிழகத்திலும் லாரி ஸ்ட்ரைக் வருகிறதா… பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய அரசு கொண்டுவதந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராடி வருகின்றனர் மத்திய பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. விபத்து ஏற்படும்போது கடுமையான இழப்பீடு 10 ஆண்டு சிறைத் தண்டனை போன்றவை அமலாக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். லாரிகள் இயக்கப்படாத காரணத்தால் பெட்ரோல் பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் […]
புத்தாண்டில் பிரதமர் யோகம் யாருக்கு..? ஜோதிடர் ஷெல்வி என்ன சொல்கிறார்..?

கொரோனா அலை இல்லையென்றாலும் ஏகப்பட்ட சிக்கல்கள், நன்மைகள் கொடுத்த 2023 விடைபெற்று போய்விட்டது. இந்த புத்தாண்டு அனைத்து நலனும் மக்களுக்கு வழங்கட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி கொடுத்திருக்கிறார். அதுசரி, அடுத்த ஆண்டு இதேபோன்று நரேந்திர மோடி பிரதமராக இருந்து வாழ்த்துச்செய்தி கொடுக்க முடியுமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்தவர் மூன்றாவது முறையும் பிரதமராவா..? இதுகுறித்து வட இந்திய பிரபல ஜோதிடர் ஷிராக் தாருவல்லா என்ன கூறியிருக்கிறார் என்பதைப் […]
திருச்சிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரடியாக மோதுவாரா ஸ்டாலின்..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோடி தமிழகம் வருவதால் அரசியல் சூழ்நிலை சூடு பிடித்திருக்கிறது. சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பதால், நேரடியாக கேட்டு ஸ்டாலின் நெருக்கடி கொடுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. திருச்சியில் புதிய ஏர்போர்ட் முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மோடி தமிழகம் வருவதால், திருச்சி ஏர்போர்ட், பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் […]
அமலாக்கத்துறை அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்கிறதா தமிழக அரசு..? சூடு பிடிக்கும் ஜாதி சம்மன் விவகாரம்

எழுதப்படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டு குறித்து, தமிழக காவல் துறை விசாரணை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவாரியைப் போன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படும் சூழ்நிலை நிலவுவதாக சொல்லப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் உதவி பெறும் விவசாயிகளுக்கு ‘ஜாதி’ பெயரை குறிப்பிட்டு சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அளித்த […]
திறந்தாச்சு பிரமாண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இனி, தென் தமிழகம் நோக்கி செல்லும் பேருந்துகள், கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு […]
ரஜினிக்கு மனசாட்சியே இல்லையா…? தூத்துக்குடி வெள்ளத்தில் பாதித்த மக்களை பார்க்க மனசு வரலையே.. டென்ஷனாகும் ரஜினி ரசிகர்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நேரத்தில் இதற்கென நேரில் வந்து, ‘கூட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியது எனக்குத் தெரியும்’ என்று தேவையே இல்லாமல் கருத்து சொல்லி சலசலப்பு ஏற்படுத்தினார். பின்னர் அவரே விசாரணை ஆணையத்தில் பல்டி அடித்தது வேறு விவகாரம். இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி கன்னியாகுமரி ஏரியாவில் தான் டேரா போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்துக்கொண்டுதான் காரில் […]
விஜயகாந்த் சமாதியில் இப்படி பேசலாமா பிரேமலதா..? கடுப்பாகும் கேப்டன் ரசிகர்கள்

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் கடலலை போன்று கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நிகழ்வு என்றால், அது கேட்பன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தான். யாரும் கேட்காமலே கேப்டன் விஜயகாந்திற்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு 72 குண்டுகள் முழங்க உடல் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் புதைக்கப்பட்டதும் அவரது மனைவியும் தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளருமான பிரேமலதா பேசிய விவகாரம் பொதுமக்களிடமும் கேப்டன் ரசிகர்களிடமும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. கேப்டன் அணிந்திருந்த கண்ணாடி, செயினையும் பிரேமலதாவே கழட்டியதை அத்தனை பேரும் […]

