News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சீமானுக்குத் தெரியாமல் கட்சி விழாக்களில் கலந்துகொள்கிறாரா கயல்விழி..? நாம் தமிழர் இயக்கத்துக்குள் சலசலப்பு

தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வளர்ச்சி அடைந்துள்ள நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் சீமானின் மனைவி கயல்விழி வம்படியாக திணிக்கப்படுவதாக வரும் செய்திகளால், தம்பிகள் கடும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தி.மு.க.வுக்கு இளைஞர் அணி மூலம் கட்சிக்குள் நுழைந்த ஸ்டாலின் தலைவராக மாறினார். அதேபோல் இளைஞர் அணி மூலம் நுழைந்த உதயநிதியும் அடுத்த தலைவராக மாறிவிட்டார். அதே வழியில் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த சீமானின் கயல்விழி பொதுக்குழு மீட்டிங்கில் கலந்துகொண்டதை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள். […]

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரெடி… அமைச்சர்கள் மீட்டிங்கில் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு சமீபத்தில் நடைபெற்று சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28ம் தேதி ஸ்டாலின் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணமாகும் ஸ்டாலின் அங்கு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடவும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 10 நாட்கள் பயணம் முடிந்து பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு திரும்புகிறார். இந்த நிலையில் இன்று காலை […]

அய்யா கோயிலில் எடப்பாடி பழனிசாமி… நாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க. குழு ரெடி

கால் மூட்டுவலி காரணமாக அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகவில்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் சுவாமி திருக்கோயில் அன்னதர்மத்தை தொடங்கிவைத்து அய்யா வழி அன்புக்கொடி மக்களிடம் கலந்துரையாடினார். அய்யா வழி கோயிலுக்குச் செல்பவர்கள் மேல் சட்டையைக் கழட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி மேல் சட்டை இல்லாமல் தலையில் தலைப்பா கட்டி சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை […]

ஸ்டாலின் பிரதமர் … உதயநிதி தமிழக முதல்வர்… மாநாட்டில் முழங்கிய  அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக இளைஞரணி மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டில் கழக அரசு செய்துவரும் கல்விப் புரட்சியையும் சாதனையையும் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அடுத்து பேசிய விவகாரம் பெரும் கைதட்டலைப் பெற்றது. அதாவது, ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது; இது சாதாரண விஷயம் அல்ல. அப்படி பிரதமர் வாய்ப்பு வந்தால் அதனை முதல்வர் தட்டிக்கழிக்க கூடாது; ஒரு கை பார்த்துவிட வேண்டும்” என்று அமைச்சர் அன்பில் […]

ராமர் கோயில் பூசாரிகள் முகத்தில் பயம், அச்சம்… தி.மு.க.வின் அடக்குமுறைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கண்டனம்

நாடு முழுவதும் பால ராமர் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.கள் அனைவரும் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள அறிக்கையில், ‘அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் கோயில் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இங்குள்ள பூசாரிகள் […]

சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு அதகளம்… அடுத்த வாரிசு இன்பநிதி அறிமுகம்..?

சேலத்தை கலகலக்கச் செய்யும் வகையில் தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டை மாணவரணிச் செயலாளர் எழிலரசன் இன்று திறந்துவைத்தார். இதையடுத்து தி.மு.கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கலைஞர் உதவித்தொகை, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஸ்டாலினுக்குப் பாராட்டு தெரிவித்திருக்கும் இளைஞர் அணி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் என்று உதயநிதிக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேறியுள்ளது. நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான […]

உதயநிதியின் இளைஞர் அணிக்கு கப்பம் கட்டுங்க… தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு அன்புக் கட்டளை

உதயநிதிக்கு கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு திடீரென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்பார்க்காத மா.செ.க்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிறு நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பெரும் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்கு இளைஞர் அணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களும் இளைஞர் அணியினருக்கு ஆதரவாக செலவுக்குப் பணம் கொடுப்பதுடன் ஆட்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து […]

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை… காலையில் பார்த்தால் அதிர்ஷ்டமாம்..!

உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், குழந்தை ராமர் சிலை ஒன்று நிறுவப்பட்டு, திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலையை காலையில் பார்ப்பது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற தகவல் காரணமாக சிலையின் உருவம் விறுவிறுப்பாக பரவி வருகிறது.   இரண்டு நாட்களுக்கு முன்பு, குழந்தை ராமர் சிலையின் கண்கள் மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து அந்த விக்ரகத்தின் கண்களைத் திறந்துள்ள படம் வெளியாகி […]

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் பிரதமரின் ஆன்மிக யாத்திரை…? ராமர் கோயில் திறப்புக்கு தமிழகத்தில் லீவு இல்லையா..?

தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். அதோடு பொதிகை என்ற பெயரில் இயங்கிவந்த சென்னை தூர்தர்சனுக்கு, ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி என்ற புதுப்பொலிவு பெற்ற சேவையை தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அப்படியொரு அறிவிப்பு பிரதமர் முன்பு ஸ்டாலின் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் தமிழகத்திலும் ஆன்மிக […]

அண்ணாமலையின் நாத்தம் பிடிச்ச விளக்கம் உவ்வேக்… கொங்கு மக்களுக்கு ‘பல்லு படாம’ அவமானம்

பத்திரிகையாளர்களின் உதயநிதி சந்திப்பு குறித்து பேசிய அண்ணாமலை பல்லுபடாம என்ற எசகுபிசகான வார்த்தையை பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போன்று ஒரு வார்த்தையை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியிருந்தால் எந்த அளவுக்கு எதிர்க்கட்சியினர் பிரச்னை செய்திருப்பார்கள், ஆனால் அண்ணாமலை அப்படியொரு வார்த்தையைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை அவமானப்படுத்திய பிறகும், யாருமே கண்டுகொள்ளவில்லை என்று தி.மு.க.வினர் பொங்கினார்கள். தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் பத்திரிகையாளர்களை பா.ஜ.க. இப்படித்தான் நேரடியாக தாக்குதல் நடத்துவார்கள், அவமானப்படுத்துவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்கள் […]