தேர்தல் பத்திரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை… பா.ஜ.க.வின் விஞ்ஞான ஊழல் வெளிவருமா..?

பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதியும் கொடுக்க முடியும். அப்படி வழங்கப்படும் நிதி எவ்வளவு என்றும் எந்த நிறுவனம் வழங்கியது […]
எல்.முருகனைத் தொடர்ந்து தமிழிசை, குஷ்பு தப்பியோட்டம்.. அண்ணாமலையின் வேட்பாளர் வேட்டை தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க. வேட்பாளராக நிற்பதற்கு பெரிய போட்டியே நிலவியது. ஆனால், வரும் 2024 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் கூட்டணி வைக்கப்போவது உறுதியில்லை என்று தெரியவந்ததும், அத்தனை முக்கியப் புள்ளிகளும் வேட்பாளராக விரும்பாமல் தப்பியோடுவதாகத் தெரிகிறது. நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு எதிராக எல்.முருகன் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது. எனவே, எல்.முருகனுக்கு தேர்தல் வேலைகளும் தொடங்கி நடந்துவந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி இல்லை என்றதும் தோல்வி நிச்சயம் என்பதால் தேர்தலில் நிற்பதற்கு எல்.முருகன் […]
கமலஹாசனுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்படுகிறாரா கெளதமி..? அ.தி.மு.க.வில் இணைந்த மர்மம்

தேர்தல் நேரம் நெருங்கும்போது கட்சி தாவல் நடப்பது சகஜமே. ஆனால், பா.ஜ.க.வில் இருந்து நடிகை கெளதமி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கெளதமி ஆர்வமாக இருந்தார். பூர்வாங்க வேலைகளும் தொடங்கியிருந்தார். ஆனால், ராஜேந்திரபாலாஜி காரணமாக கெளதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்தே, பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தனது நிலத்தை விற்று பண மோசடி செய்துவிட்டதாக அவர் வெளிப்படையாகப் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி […]
ஏழு நாட்களில் 21 போதைக் குற்றவாளிகள் கைது..! காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருந்தார். இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7.2.20224 முதல் 13.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 52 கிலோ […]
தன் சோகத்தை மறைத்துக்கொண்டு, மயானத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறிய சைதை துரைசாமி..!

பெற்ற பிள்ளையின் மரணத்தை பார்ப்பதே, பெற்றோருக்கு மிகக்கொடிய துன்பம் தரக்கூடியது என்பார்கள். அத்தகைய பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார் மனிதநேய அறக்கட்டளை தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி. இந்த நிலையிலும் தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களுக்கு நன்றி கூறி நெகிழ வைத்திருக்கிறார். இமாசல பிரதேசத்தில் அவரது மகன் வெற்றி விபத்தில் சிக்கி எட்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உடல் கண்டு பிடிக்கப்பட்டது. வெற்றியின் உடலுக்கு தமிழகத்திலுள்ள அத்தனை முக்கியப் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். […]
1,448 சிறுமிகளுக்கு பிரசவம் பார்த்தது தான் திராவிட மாடலா..? போட்டுத் தாக்கும் பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவரான நாராயணன் திருப்பதி, நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அதிர்ச்சிகர சம்பவங்களை வெளிப்படுத்தி, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2021 முதல், அக்டோபர் 2023 வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் 1448 குழந்தைகளை பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி குலை நடுங்க செய்கிறது. இதில் 1101 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றதாக சொல்லப்படுவது கொடூரமான உண்மை. 347 குழந்தைகள் பிறந்தது […]
போதை விழிப்புணர்வுக்கு காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நடத்தும் குதிரையேற்றப் போட்டி..! கை கொடுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை குதிரைப்படை கடந்த 1780ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இந்த படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்கானிப்பாளர் வால்டர் கிராண்ட் மூலம் சென்னை காவல் துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜண்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு […]
ரஜினி படத்துக்கு இந்த பரிதாப நிலையா..? மணிகண்டன் ஓவர்டேக் பண்ணிட்டாரே…

ரஜினிகாந்த் கேமியோ ரோல் என்றாலும் கிட்டத்தட்ட ரஜினி படம் போலவே லால் சலாம் படத்துக்கு புரமோஷன் செய்யப்பட்டன. எக்கச்சக்க பில்டப் கொடுக்கப்பட்டன. சங்கி இல்லை, என் அப்பாவுக்கு எல்லா மதமும் ஒன்று தான் என்று இயக்குனரும் ரஜினியும் மகளுமான ஐஸ்வர்யா முன்கூட்டியே சமாதானக் கொடி வீசியிருந்தார். ஆனால், எதுவுமே தியேட்டரில் செல்லுபடியாகவில்லை. ரஜினியின் கேரக்டர் அதிரடியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, கதையோட்டத்தில் செட் ஆகவில்லை, யாருடைய நெஞ்சையும் தொடவில்லை. அதனால் படத்துக்கு கலெக்ஷன் சுத்தமாக குறைந்துவிட்டது என்கிறார்கள். முதல் […]
இளம் பெண்ணுக்கு காஸ்ட்லி பரிசு காட்டி மேட்ரிமோனியல் மெகா மோசடி… நைஜீரிய கிரிமினல்களை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீஸ்

திருமண ஆசை காட்டி நூதன முறையில் கே.கே.நகர் இளம் பெண்ணிடம் 2.87 கோடி ரூபாய் சீட்டிங் செய்த நைஜீரியர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீர் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து சாதனை படைத்திருக்கிறது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்காகப் பதிவு செய்திருக்கிறார். அவரை வெளிநாட்டில் இருந்து தொடர்புகொண்ட அலெக்சாண்டர் சான்சீவ் என்பவர், திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப் […]
சட்டமன்றத்தில் சம்பவம் செய்த சபாநாயகர் அப்பாவு… தெறித்து ஓடிய கவர்னர் ஆர்.என்.ரவி

கடந்த சட்டமன்றத் தொடரில் ஆரம்பத்திலேயே எழுந்து ஓடிய ரவி, இந்த முறை சபாநாயகர் அப்பாவு பேசியதைக் கேட்டு அதிர்ந்து எழுந்து வெளியே பதறி ஓடியிருக்கிறார். இன்று சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நேரத்தில், தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறி அரசின் உரையை புறக்கணித்தார். இதையடுத்து ஆளுநரின் உரையை அப்பாவு பேசினார். அப்போது, ஆளுநரை பக்கத்தில் வைத்துக்கொண்டே பல்வேறு விஷயங்களைப் பேசி அதிர வைத்தார். தமிழகத்தில் இவ்வளவு பெரிய […]

