News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மீண்டும் செங்கோட்டையன் புகைச்சல்… 5ம் தேதி அதிமுகவில் பூகம்பம்..?

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சிப்பயணத்தில் மூத்த தலைவர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவரது தொகுதியை இபிஎஸ் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின. நீண்ட காலமாகவே முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி […]

தலைவர் பதவிக்கு சசிகாந்த் நாடகம்..? சமாளிப்பாரா செல்வப்பெருந்தகை..?

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. அதற்கு முத்தாய்ப்பாக ஒரு உண்ணாவிரத நாடகம் அரங்கேறிவருகிறது. டெல்லி காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைமை ஆகிய யாரிடமும் ஆலோசனை, ஒப்புதல் பெறாமல் திடீரென உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில். அதாவது, சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சாகும் […]

பிரேமலதா மீண்டும் பல்டி. இபிஎஸ் மீது பாய்ச்சல். காரணம் இவர்தானா..?

ஜிகே மூப்பனார் நிகழ்வில் நிர்மா சீதாராமன் வேண்டுகோளின் பேரில் எல்.கே.சுதிஷ் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தேமுதிக சார்பில் பங்கேற்ற சுதிஷை மரியாதை நிமித்தம் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் என்றும் பணம் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் பிடிக்கிறார் என்றும் பிரேமலதா எகிறியிருக்கிறார். சென்னையில் தேமுதிக தென்சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘’அதிமுக-வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தபோது 5 மக்களவை […]

தமிழ்நாட்டுக்கு பொறுப்பு டிஜிபி அறிவிப்பு. வெங்கட்ராமன் முழுமையான தகவல்கள்

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று ஓய்வு பெறுவதையொட்டி, தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநர் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ் ஓய்வு பெற்றதால் புதிய இயக்குநராக டிஜிபி வினித் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று டிஜிபியாக பதவியேற்கும் வெங்கட்ராமன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காவல் நிர்வாகப் […]

அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்… நயினாருக்கு நல்ல யோகமடா

தமிழகம் வருகை தந்திருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி, எல்.கே.சுதிஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் நேரடியாகவே அண்ணாமலைக்கு ரெய்டு விடுத்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு நட்சத்திர ஓட்டலில் பாஜ நிர்வாகிகளுக்கு விருந்தளித்தார். இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அண்ணாமலை […]

பிரேமலதாவை டென்ஷனாக்கிய விஜய்… என்னாச்சு..?

திமுகவில் வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் அதிமுகவில் ஐக்கியமாக வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் எண்ணம். தங்கள் பலத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது பேசிக்கொண்டு இருந்தார். இதையடுத்து பிரேமலதா எங்கே போனாலும் அவரிடம் விஜய் பற்றி கேள்வி எழுப்புவதும் அவர் பதில் சொல்வதுமாக இருந்தார். ஆனால், விஜய் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை என்பதுடன் டென்ஷாகிவிட்டார். நெல்லை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று, ‘’நாடு முழுவதும் வாக்கு […]

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுபவத்திற்கு சூப்பர் பதவி…. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில், இன்று அவரை தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் சங்கர் ஜிவால். சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்துக்கு நெருக்கமானவர்.  பொறியாளரான இவர் கடந்த 1990 ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தனது முதல் பணியை மன்னார்குடி உதவி எஸ்பியாக தொடங்கிய அவர், சேலம், மதுரை […]

ராமதாஸை அம்பலப்படுத்திய அன்புமணி. ராமதாஸ் – சுசிலா திருமண நாள் கொண்டாட்டம்

தைலாபுரத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராமதாஸ் – சுசிலா 50வது திருமண நாள் நிகழ்வு குறித்து ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் அன்புமணி இருப்பதாக கூறப்படுகிறது. . பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இருவரும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். […]

திருப்பூர், ஈரோடு ஜவுளி தொழிலுக்கு மூடு விழா..? மோடி கப்சிப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% வரிவிதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளித் தொழில் சர்வநாசமாகிவிடும் என்று உற்பத்தியாளர்கள் கதறுகிறார்கள். இதனால் என்ன நடக்கப்போகிறது என்பதே புரியவில்லை, இந்த தீபாவளி மேற்கு மாவட்டங்களில் ரண வேதனையை ஏற்படுத்த போகிறது என்று புரியாமல் விழிக்கிறார்கள். இந்நிலையில் ஜவுளி ஆலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகிவருகிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘’அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4 […]

கிறிஸ்தவர் விஜய்யை பிள்ளையாரா மாத்திட்டாங்கப்பா… எலியாக புஸ்ஸி ஆனந்த்

பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான ஒரு வாழ்த்து தெரிவித்தார். அதாவது, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். அதாவது விஜய் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலே இப்படி வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் எல்லை மீறிப் போய்விட்டார்கள். கிறிஸ்தவரான விஜய்யை பிள்ளையாராக சித்தரித்து சிலை வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பாஜகவினரை கொதிக்க வைத்திருக்கிறது. பிள்ளையாரை முதல்வர் சேரில் அமரவைத்து, கையெழுத்து போடுவது போன்று வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் […]