News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விருதுநகரில் சரத்குமார் செய்த வெறித்தனம்

நெல்லையில் நிற்பதற்கு பா.ஜ.க. சீட் தரவில்லை என்றதும் தன்னுடைய மனைவி ராதிகாவை விருதுநகர் தொகுதியில் நிறுத்தினார் நடிகர் சரத்குமார். அதோடு, தன்னுடைய கட்சியையும் பா.ஜ.க.வில் இணைத்துவிட்டார். இந்த நிலையில், விருதுநகரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் திடீரென அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டார். மேல் சட்டையைக் கழட்டிவிட்டு கோயிலை உருண்டு வந்தார். அவர் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டது மட்டுமின்றி, ஆகோ… அய்யாகோ என்று கோஷம் போட்டார்கள். இது குறித்து பேசிய சரத்குமார் ஆதரவாளர்கள், ‘பிரதமர் மோடி […]

நாளைக்கு அமைச்சர் பதவி. கனவில் மிதக்கும் ஓ.பன்னீர்செல்வம்

இந்த தேர்தலில் பா.ஜ.க.வில் மட்டுமே பெருந்தலைகள் போட்டியில் இறங்கினார்கள். மற்ற கட்சியில் குறிப்பிடத்தக்க யாரும் களம் இறங்கவே இல்லை. அதிலும், அ.தி.மு.க.வில் பெயர் சொல்லக்கூடிய வகையில் யாரும் தேர்தலில் நிற்கவில்லை. அதேநேரம், பிரதமர் நிற்பதற்கு விரும்பிய தொகுதி என்று ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தேர்தலில் நின்றார். அவருக்கு எப்படி ஆசை காட்டப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் நிற்க விரும்புகையில், டிடிவி தினகரனும் ஆசைப்பட்டார். அதனால் அந்த தொகுதியை தினகரனுக்கு […]

கருணாநிதி பிறந்த நாளில் வைரலாகும் ஊழல்

கலைஞர் 100 என்ற பெயரில் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டம் இன்று தி.மு.க. முடிவுக்குக் கொண்டுவருகிறது. இந்த நிலையில் அவருக்கு தி.மு.க.வினர் பாராட்டி வாழ்த்து பதிவிடும் நேரத்தில், ’ஹேப்பி பர்த்டே ஃபாதர் ஆஃப் கரப்ஷன்’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகிறது. கட்டுமரம், தன் குடும்பத்தை மட்டும் வளர்த்தவர், திருட்டு ரயில் என்றும் பல்வேறு ஹேஸ்டேக் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சியினர் இணைந்து பரபரப்பாக்கி வருகிறார்கள். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கிஷோர் கே.சாமி வெளியிட்டுள்ள […]

சட்டா பஜார் பக்கா கணிப்புகள்…  இது தாங்க தேர்தல் ரிசல்ட்

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மீடியாக்கள் மீண்டும் மோடி ஆட்சியில் அமர்வார் என்பதையே எக்ஸிட் போல் முடிவுகளாகக் காட்டியிருக்கின்றன. இந்த நிலையில் சட்டா பஜார் முடிவுகளோ முற்றிலும் வேறு மாதிரி அமைந்திருக்கின்றன. சட்டா பஜார் கணிப்பு என்பது மீடியா எக்ஸ்ட் போல் கணிப்பை விட துல்லியமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இது பணம் போட்டி பெட்டிங் கட்டுகிறார்கள். ஆகவே, அவரவர் ஏரியாவைச் சேர்ந்த சின்னச்சின்ன மார்க்கெட் கணிப்பு படி தேர்தல் முடிவுகள் அமைகிறது. எக்ஸிட் போல் முடிவுகளை விட […]

திருச்சி சூர்யா மன்னிப்பு கேட்க ரெடி… சாட்டை துரைமுருகனுக்கு ஒரு வில்லங்க நிபந்தனை

நாம் தமிழர் சீமானுக்கும் தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான பஞ்சாயத்து இப்போது திருச்சி சூர்யா மற்றும் சாட்டை துரைமுருகனுக்கும் இடையிலான மோதலாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் சாட்டை துரைமுருகன் நேரடியாக காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்துவிட்டு, ‘பாஜகவின் தவறுகளையும் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்தும் தொடர்ந்து சாட்டையில் பேசியதற்காக அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் என்னைப் பற்றியும் அண்ணன் சீமான் அவர்கள் குறித்தும் மிக இழிவாக பேசி அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி […]

திவால் ஆகிறதா அண்ணா பல்கலைக்கழகம்..?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்று தனிப்பெருமை இருக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் கட்ட முடியாத அளவுக்கு நிதிச்சிக்கலில் மாட்டியிருப்பதால் திவால் ஆகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘தங்களுடைய நிதி நிலைமை சரியில்ல அதனால் ஆசிரியர்களுக்கு கட்ட வேண்டிய பிராவிடண்ட் ஃபண்ட் தொகையை கட்ட முடியவில்லை’ என்று அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. இது குறித்து அண்ணா பல்கலைகழகத்தில் பேசிய வகையில், ‘’முன்பு அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் நிறைய கல்லூரிகள் இருந்தன. ஆகவே, […]

ராகுல் பிரதமர். கார்கே ஜனாதிபதி. நிதின் கட்கரிக்கும் பிரதமர் வாய்ப்பு?

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டுள்ள 328 தொகுதிகளில் கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பதவியேற்கச் செய்வது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சியினர் அழுத்தம் கொடுத்தால், கார்கேவுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்படும் என்ற உறுதி கொடுக்கப்படும் என்கிறார்கள். […]

கன்னியாகுமரியில் மோடி. புதிய தியானம் படம் ரிலீஸ்

தேர்தல் பிரசாரம் ஓய்வடைந்த நிலையில், மோடி மெளனப் பிரசாரம் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதை உண்மையென்று நிரூபிப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழன இரவு தொடங்கி இரண்டாவது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்து வருகிறார். விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். தியானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. பிரதமர் தியானம் செய்கிறார் என்பதற்காக […]

பள்ளிக்கூடம் திறக்காதீங்க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பிள்ளைகளுக்கு விடுமுறை முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் ஸ்கூலில் விட்டுத் திரும்பினால் தான் நிம்மதி என்று பெற்றோர் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்பொது பள்ளியைத் திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில்  கோடை விடுமுறை முடிந்து  ஜூன் 6-ஆம் தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் […]

அண்ணாமலை சீடருக்கு நாம் தமிழர் மிரட்டல்.

–    சூடு பிடிக்கும் துரைமுருகன் விவகாரம்   அண்ணாமலையின் சீடராக கருதப்படும் திருச்சி சூர்யா இந்த தேர்தல் காலத்தில் அமைதியாக இருந்தார். சமீபத்தில் சீமானுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் தேர்தல் மோதல் ஆரம்பித்திருக்கும் நிலையில் அவரும் களத்தில் குதித்துவிட்டார். சாட்டை துரைமுருகன் மனைவி குறித்து ஒரு தகவலை பொதுவெளியில் வைத்தார். உடனே நாம் தமிழர் தம்பிகள் திருச்சி சூர்யா மீது பாய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் இதுகுறித்து, ‘என்னைப் பற்றியும் அண்ணன் சீமான் அவர்களைப் பற்றியும் […]