ராகுலுக்குப் பயந்து மோடி ஆப்சென்ட்? நிர்மலா சீதாராமனுக்கு செம சூடு

மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று ஆவேசமாக உரை நிகழ்த்தினார். எதிர்க் கட்சிகளின் சார்பில் ராகுல் பேச இருப்பது தெரிந்ததும் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. இதைக் குறிப்பிட்ட ராகுல், ‘நான் பேசுவது தெரிந்தாலே இனி மோடி வரவே மாட்டார்’ என்று வெளிப்படையாகப் பேசினார். அதோடு, ’’இந்தியாவில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் […]
வயநாட்டில் மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள். ஆற்றில் மிதக்கும் உடல்கள். நெஞ்சை பிழியும் சோகம்.

கேரள நாட்டின் வயநாட்டில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 300 மி.மீ. மழை பதிவானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா அருகே உள்ள மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணியளவில் தொடங்கி 3 மணி வரையில் அடுத்தடுத்து நான்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றாலும் மழையின் காரணமாக […]
2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெண்கலம் வென்ற மனுபாக்கர்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிசில் கடந்த 26ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று (29ம்தேதி) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 3வது இடத்தை பிடித்தார். அதன்படி 2024ம் ஆண்டு ஒலிம்பிக் […]
நீட் தேர்வு எழுதிய மாணவி! பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை நீட் தேர்வு முறையால் நடைபெறுவதால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூட பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடைசியில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது நேர்மையாக நீட் தேர்வை எழுதிய தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நீட் தேர்வில் […]
பிரதமர் மோடியை கேடி என்று விமர்சனம்! தயாநிதி மாறனுக்கு வரும் சிக்கல்!

பிரதமர் மோடியை கேடி என்று பகிரங்கமாக விமர்சித்த தி.மு.க. எம்.பி. மீது கைது நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024& 2025 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது. ஆந்திரா, பீகாருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாட்டுக்காக எந்த அறிவிப்பும், சலுகையும் வெளியாகாதது அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்கள எழச்செய்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் […]
அண்ணாமலையை மாத்தினால் அம்புட்டுத் தான். மோடிக்கு ஐ.டி. விங் வார்னிங்

ஆகஸ்ட் மாதம் அண்ணாமலையை அரசியல் படிக்க அனுப்பிவிட்டு, தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், அண்ணாமலையை மாற்றினால் தமிழகத்தில் பா.ஜ.க. அழிந்தே போகும் என்று அவரது ஐ.டி. விங் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் நிறைய பதிவுகள் வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்த பதிவுகளில், ‘அண்ணாமலை இல்லையென்றால் ஒருசில தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் நிலை உருவாகிவிடும். அதன் பிறகு […]
புதிய அரசியல் கட்சி தொடங்கும் பிரஷாந்த் கிஷோர். அ.தி.மு.க.வுக்கு வேலை செய்வாரா..?

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைப்பதற்காக பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் அ.தி.மு.க. தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அவர் தொடங்கி நடத்திவரும், ‘ஜன சுராஜ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பிரஷாந்த் கிஷோர் நேரடியாக அடுத்த ஆண்டு பீகார் தேர்தலை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஐபேக் எனும் அமைப்பு மூலம் இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு அடிக்கல் போட்டவர் பிரசாந்த் கிஷோர். பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், […]
9 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள். ஆர்.என்.ரவிக்கு என்னாச்சு?

பலரும் எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர்கள் நியமனம் நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 9 மாநிலங்களில் ஆளுநர் மாற்றத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு சி.பி.ராதாகிருஷ்ணன் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். மேலும் ஓய்விற்கு பின்னரும் 11 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இவரது நியமனம் பலத்த […]
மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றிய பெண்! கைதானது எப்படி?

மேட்ரிமோனியலில் மணமகன் மற்றும் மணமகள் தேவை என்று மணம் முடிப்பவர்கள் ஏராளம். சொந்தத்தில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளை எடுப்பது அரிதாகிவிட்டது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு பெண் தன்வலையில் போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட பல்வேறு ஆண்களை தன் காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் ரூபாய் பணம் நகைகளை சுருட்டிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பொய்னாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 35 வயதான ஸ்ருதி என்ற பெண்ணை சமீபத்தில் […]
இளங்கோவனை திருப்பியடிக்கும் கார்த்தி சிதம்பரம். மீண்டும் காங்கிரஸ் கோஷ்டி மோதல்

காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்ச நாட்களாக எட்டிப்பார்க்காமல் இருந்த கோஷ்டி மோதல் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது ஒரு பெரும் பிரச்னையாக உருமாறியது. எனவே தி.மு.க. மேலிடத்திடம் சமாதானம் செய்யவேண்டிய நிலைமை உருவானது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுக்கு எதிராக இவிகேஎஸ். இளங்கோவன் கடுமையான சூடு போட்டுள்ளார். ‘’தி.மு.க. இல்லை என்றால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான காங்கிரஸ் வேட்பாளர் காத்தி […]

