News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மீடியாக்கள் மீண்டும் மோடி ஆட்சியில் அமர்வார் என்பதையே எக்ஸிட் போல் முடிவுகளாகக் காட்டியிருக்கின்றன. இந்த நிலையில் சட்டா பஜார் முடிவுகளோ முற்றிலும் வேறு மாதிரி அமைந்திருக்கின்றன.

சட்டா பஜார் கணிப்பு என்பது மீடியா எக்ஸ்ட் போல் கணிப்பை விட துல்லியமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இது பணம் போட்டி பெட்டிங் கட்டுகிறார்கள். ஆகவே, அவரவர் ஏரியாவைச் சேர்ந்த சின்னச்சின்ன மார்க்கெட் கணிப்பு படி தேர்தல் முடிவுகள் அமைகிறது. எக்ஸிட் போல் முடிவுகளை விட சட்டா பஜார் முடிவுகள் பெரும்பாலும் சரியாக அமைந்திருக்கின்றன.

இந்தியாவின் முக்கியமான சில சட்டா பஜார் முடிவுகளைப் பார்க்கலாம்.

1.   ஃபலோடி சட்டா பஜார்:

209 இடங்களில் பாஜக தனித்து வெல்லும். கூட்டணிகளுடன் இணைந்து 253 இடங்களில் NDA கூட்டணி வெல்லும். 117 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 246 இடங்களில் INDIA கூட்டணி வெல்லும்

2.   ஃபலோடி சட்டா பஜார்:

209 இடங்களில் பாஜக வெல்லும். 253 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும். 117 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 246 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்

3.   கர்னல் சட்டா பஜார்:

235 இடங்களில் பாஜக தனித்தும் 263 இடங்களில் என்டிஏ கூட்டணியும் வெல்லும். 108 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 231 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

4.   போஹரி சட்டா பஜார்:

227 இடங்களில் பாஜகவும் 255 இடங்களில் என்டிஏ கூட்டணியும் வெல்லும். 115 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 212 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

5.   பெல்காம் சட்டா பஜார்:

223 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெறும் 265 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும். 120 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 230 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

6.   கொல்கத்தா சட்டா பஜார்:

   218 இடங்களில் பாஜக வெல்லும். 261 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும். 128 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 228 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

7.   விஜயவாடா சட்டா பஜார்:

224 இடங்களில் பாஜக வெல்லும். 251 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும். 121 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 237 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

8.   அஹமதாபாத் சோகா பஜார் :

241 இடங்களில் பாஜக வெல்லும். 270 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும். 104 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 193 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

9.   சூரத் மகோபி சட்டா பஜார் :

247 இடங்களில் பாஜக வெல்லும். 282 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும். 96 இடங்களில் காங்கிரஸ் வெல்லும். 186 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

சட்டா பஜார் கணிப்புகள் படி பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஜனாதிபதி பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைப்பார் எனவும் குதிரை பேரம் நடக்கும் என்றும் பெட்டிங் நடந்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link