2017ம் ஆண்டு கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 8 வருடங்கள் கழித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டி தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பதையும் தாண்டி யார் தலைமையில் எந்த கூட்டணி என்ற வாதமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகமும் தமிழக திராவிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் […]
ஓபிஎஸ், டிடிவிக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி… டெல்லியில் என்னாகும்..?

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்றைய சென்னை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தெளிவாகப் பேசிவிட்டார். அதாவது தலைமைக் கழகத்தை உடைத்தவர்களை சேர்க்க மாட்டோம். 18 எம்.எல்.ஏ.க்களை இழுத்துச்சென்றவர்களை சேர்க்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டெல்லிக்குப் போயிருக்கும் இபிஎஸ், அங்கேயும் இதே கெத்தோடு நடந்துகொள்வாரா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது. நேற்றைய இபிஎஸ் பேச்சு குறித்து அவாது ஆதரவாளர்கள், ‘’இபிஎஸ் பேசியதில் ஒன்று தெளிவாக தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் என யாருக்காகவும், அதிமுக சமரசம் […]
அமித்ஷாவை சந்திக்கப் போகும் எடப்பாடி… டெல்லியில் மிரட்டல்..?

ஹரித்துவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துத் திரும்பினார் செங்கோட்டையன். அதேபாணியில் துணை குடியரசுத் தலைவரை வாழ்த்தப்போகிறேன் என்று டெல்லி கிளம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. எழுச்சிப்பயணம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமி அதனை ரத்து செய்துவிட்டு நாளை டெல்லிக்குச் செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு சிக்கல்களை இந்த கூட்டணி தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த நிலையில் […]
சனிக்கிழமைக்கு விஜய் ரெடி… ரசிகர்கள் என்ன செய்யப்போறாங்களோ..?

நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கப்போகிறது என்று இப்போதே போஸ்டர்கள் தமிழகம் முழுக்க கலக்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் கூடும் இடங்களில் பேசுவதற்கு விஜய் அனுமதி கேட்ட காரணத்தால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு நாளை விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது, விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், […]
ஏழை அண்ணாமலைக்கு 80 கோடி ரூபாய் பஞ்சாயத்து… கப்சிப் பாஜக

நேர்மையின் சிகரம் என்று கருதப்படும் அண்ணாமலையின் குடும்பத்தார் மீது ரெய்டு நடந்தபோதே பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. இந்நிலையில் மாரிதாஸ் ஆதாரத்துடன் அண்ணாமலை சொத்து வாங்கிய தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக பாஜகவை அலற விட்டுள்ளது. அண்ணாமலை ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள். இந்நிலையில், அண்ணாமலை சொத்து வாங்கியதாக கூறிய புகாரை மாரிதாஸ் வாபஸ் செய்துவிட்டார் என்று கூறப்பட்டது. இதற்கு மீண்டும் வெகுண்டெழுந்து அண்ணாமலையை அடித்திருக்கிறார் மாரிதாஸ். இது குறித்து மாரிதாஸ் […]
அன்புமணி பல்பை உடைச்சுட்டார் ராமதாஸ்… மன்னிப்பும் கிடையாதாம்

பாமகவின் ஒழுங்கு குழு அறிக்கையின்படி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். இனி அன்புமணியுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்று ராமதாஸ் கொடுத்துள்ள அறிவிப்பு தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால […]
பாஜக கட்டுப்பாட்டில் நான்கு கறுப்பு ஆடுகள்… எடப்பாடி என்ன செய்யப்போகிறார்..?

பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையனை அத்தனை பொறுப்புகளில் இருந்து எடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் செங்கோட்டையன். இதையடுத்து அதிமுகவில் இருந்து வெளியே இருக்கும் சசிகலா, பன்னீர், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதியாகிவிட்டது. அதிமுகவை விட எதிர்க்கட்சிகளே பாஜகவின் ஸ்கெட்ச் குறித்து ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். இதுகுறித்து பேசும் திருமாவளவன், ‘’அதிமுக ஒன்றிணைய வேண்டும் என […]
வீக் எண்ட் விஜய்… புது ஸ்டைலில் வாரம் ஒரு நாள் வேலை 6 நாள் லீவு

பனையூர் பங்களாவில் இருந்து அரசியல் செய்துவரும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் செய்தால் அரசியல் நிலவரமே மாறிவிடும். முதலமைச்சராக வந்து விஜய் வந்து உட்காருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் வீக் எண்ட் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் விஜய். அதன்படி வரும் செப்டம்பர் 13 சனிக்கிழமை ,திருச்சி மரக்கடை பகுதியில் 2026 அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார். நாலு மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மனதில் பேச […]
மல்லை சத்யாவுக்கு அதிமுகவில் அழைப்பு..? 15ம் தேதி முடிவு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவிற்கு மாமல்லபுரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். “ஆரம்பிக்கலாமா ” என்று எழுதப்பட்ட கேக்கினை குடும்பத்தாருடனும் ஆதரவாளர்களுடனும் இணைந்து வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றே மதிமுகவின் அத்தனை தலைவர்களும் கருதுகிறார்கள். மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது. […]
அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு செய்தியை பரப்புகிறதா திமுக..? பாஜக கப்சிப்

மன அமைதிக்காக ஹரித்துவார் சென்று ராமரை சந்திக்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு இரவு அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இது ஒரு ரகசிய சந்திப்பு என்றும் இது குறித்து தகவல்கள் வெளியே வரக்கூடாது என்று பாஜக மேலிடம் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் தரப்பில் செய்திகள் கசிய விடப்பட்டன. இந்த விவகாரம் அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷா சந்திப்பு நடக்கவே இல்லை என்று மூத்த தலைவர்கள் சிலர் உறுதி […]

