News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

செந்தில்பாலாஜியை துவைத்து தொங்கப்போட்ட எடப்பாடி பழனிசாமி… என்னாச்சு..?

கொங்கு வட்டாரத்தில் இபிஎஸ்க்கு இருக்கும் எக்கச்சக்க ஆதரவை குறைக்கும் வியூகத்தை எடுத்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதிமுகவுக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் திமுகவுக்கு இழுப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏமாற்றி இழுத்துவருகிறார். இந்த நிலையில் கரூர் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவுக்கு செந்தில்பாலாஜியை வைத்து செய்துவிட்டார். செந்தில்பாலாஜி பற்றி எல்லாமே இபிஎஸ்க்குத் தெரியும் என்பதால் புட்டுப்பட்டு வைத்திருக்கிறார். அவர், ‘’செந்தில் பாலாஜி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏமாற்று வேலையும் கற்றுத் தேர்ந்தவர். மக்களை ஏமாற்ற ஒவ்வொரு […]

கரூரை கலக்கப்போகும் விஜய்… சீமான் இப்படியொரு முடிவா..?

விஜய் நாளை கரூரில் மக்களை சந்திக்க இருக்கிறார். வழக்கம்போல் பெருந்திரளான கூட்டம் கூடும் என்பதால் அவருடைய மக்கள் சந்திப்பு இடத்தை முடிவு செய்வதில் எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன. இதுவரை விஜய் பரப்புரை செய்த திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களில் காவல்துறை முறையான பாதுகாப்பை வழங்கவில்லை. எனவே, முன்கூட்டியே இடத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதையும் விஜயின் பரப்புரை நடைபெறும் இடங்களில் போதிய காவர்களை கொண்டு முறையான பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று […]

அண்ணாவும் எம்.ஜி.ஆரும் சனியனா..? சீமானை விரட்டி விரட்டி வெளுக்குறாங்க…

விஜய்யை திட்டுவதாக நினைத்து அண்ணா, எம்.ஜி.ஆரை சனியன் என்ற ரீதியில் சீமான் பேசிய விவகாரத்துக்கு அத்தனை கட்சிகளும் விரட்டி விரட்டி திட்டுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்து சீமான், ‘’அவர் மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவருக்கு பதிலா நீங்க ஏன் பேசறீங்க? மாற்றம்னா எதுல மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவரு என்ன செஞ்சிருக்காரு […]

திமுக தொடங்கிய மகளிர் விடுதிகளில் மதமாற்றம் நடக்கிறதா? கொந்தளிக்கும் பாஜக

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றன, இதுதான் திமுகவின் சமூகநீதியா? அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? […]

திமுகவை ஜெயிக்க வைக்கிறாரா விஜய்.? சீமானுக்கு கெட் அவுட்

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறுவது சீமானை கடுப்பேற்றுவதற்கும் அந்த புதிய வாக்காளர்களை சென்றடைவதற்கும்தான். திமுக எதிர்ப்பு ஓட்டுகளை விஜய் அறுவடை செய்துவிட்டால் அதிமுக கூட்டணியும் வலு இழந்துபோகும். இதனால் திமுக வெற்றி உறுதியாகிவிடும் என்கிறார்கள். அதோடு விஜய் பேச்சில் எக்கச்சக்க பொய் என்று திமுகவினர் எகிறியடிக்கிறார்கள். திமுகவின் முப்பெரும் விழாவில் விஜய்யை ஜாடை மாடையாக விமர்சித்தார் முதல்வர். நாகையில் விஜய் பேசியதும் வெளிநாட்டு முதலீடு குறித்து முதல்வர் பேசும் வீடியோவை வெளியிடுகிறது திமுக. செய்தியாளர்களைச் […]

ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் கம்யூனிஸ்ட். இப்படி தீர்மானம் போட்டுட்டாங்களே

தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் வாங்கினாலும் அவ்வப்போது திமுகவுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டு போட்டுவருகிறார்கள். இப்போது சிபிஎம் மாநிலக்குழு நிறைவேற்றியுள்ள 3 முக்கிய தீர்மானங்கள் திமுகவை திணற வைத்துள்ளது. குறிப்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிலும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.  இந்த நிலையில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும் பொதுத்துறை […]

லெட்டர் பேடு கட்சிகளை விழுங்கும் திமுக..? ஆப்பு வைக்கும் தேர்தல் கமிஷன்…

திமுகவுக்கு ஆதரவாக கட்சி நடத்திவந்த சில கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்திருக்கிறது. குறிப்பாக மனிதநேய ஜனநாயக் கட்சி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ஆப்பு வைத்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் திமுகவில் சேர்வார்களா அல்லது இதேபோன்று சில்லறை இயக்கமாகத் தொடர்வதாகக் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ’தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக […]

எடப்பாடி முகத்தை மறைத்தது ஏன்..? அவரே சொன்ன பதில்

அமித்ஷாவை சந்தித்துவிட்டு தனி காரில் வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக இரண்டு நாட்களாக ஊடகங்களில் எக்கச்சக்க செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்திற்கு இன்று எடப்பாடி விளக்கம் அளித்திருக்கிறார். நான் முகத்தை மறைத்ததாக முதல்வர் சொல்கிறார். முகத்தை மறைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையை கிழித்துக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் சட்டையை கிழித்துக்கொண்டு வருவார்கள்? மனநிலை பாதித்தவர்கள்தான் சட்டையைக் கிழிப்பார்கள். அந்த […]

அன்புமணி மீது கிரிமினல் வழக்கு…? ராமதாஸ் அதிரடி மூவ்

பாமக-வில் அன்புமணியின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 1, 2026 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. எனவே, கட்சி, சின்னம் எல்லாமே அன்புமணிக்கே சொந்தம் என்று அவரது ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறிய விவகாரத்துக்கு ராமதாஸ் தரப்பில் ஜிகே மணி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் […]

அமித்ஷாவுடன் எடப்பாடி இரவு நேர சந்திப்பு. வைரலாகும் முகமூடி

எங்களுக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம் என்று சென்னை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். அதன் பிறகு டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இரவு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதேநேரம், வெள்ளை காரில் உள்ளே போன எடப்பாடி வேறு ஒரு காரில் வெளியேறியதாகவும், பத்திரிகையாளர்களுக்கு முகம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக்கொண்டு […]