News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காந்தகார் விமான கடத்தல் சீரிஸ்க்கு தடை..? வாஜ்பாயைக் காப்பாற்றும் மோடி

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஐ.சி. 818 காந்தகார் ஹைஜாக் தொடரை முடக்குவதற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த நேரத்தில் நடந்த இந்த மாபெரும் அவமானத்தை மூடி மறைப்பதற்கு மோடி அரசு முயற்சி செய்வதாக கண்டனம் எழுந்திருக்கிறது. இந்திய தேசத்தின் பிரதமராக பா.ஜ.க.வின் வாஜ்பாய் இருந்த நேரத்தில் கந்தகார் விமான ஹைஜாக் நடைபெற்றது. அந்த முயற்சியை முறியடிக்க முடியாமல் மேளதாளத்துடன் தீவிரவாதிகளை அனுப்பிவைத்தது […]

வானதி சீனிவாசனுக்கு இம்புட்டுக் கோபமா..? அண்ணாமலை பாணியில் அதிரடி

சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு விமர்சனம் முன்வைத்தார். இதற்கு உடனடியாக மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.யான சு.வெங்கடேசன், ‘’மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு… என்று கிண்டல் செய்திருந்தார். மேலும் தி.மு.க. […]

உதயநிதியை பாராட்டி தள்ளிய பா.ஜ.க. நிர்வாகி! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது என்று பா.ஜ.க. பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகழ்ந்து தள்ளியிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்து பார்முலா4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயமானது புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்பந்தயத்திற்கான அனைத்து ஏற்பாடுளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையம் செய்திருந்தநிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.     இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்ட […]

நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு! சஞ்சய் ராய் சொல்வது என்ன?

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் தற்போது நிரபராதி என்று நிரூபிக்கும் வகையில் அவரது வழக்கறிஞர் சில விவரங்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காள மாநிலம் அரசு மருத்துவமனையில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் செமினார் அறையில் அரை நிர்வாணமாக உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது […]

நிரந்தரத் தலைவர் ஆகிறாரா ஹெச்.ராஜா..? அண்ணாமலை திட்டமிட்டு புறக்கணிப்பு

சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துத் திரும்பிய ஹெச்.ராஜா, தமிழக பா.ஜ.க.வின் நிரந்தரத் தலைவராகத் தொடர்வதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிந்து, அண்ணாமலை ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறார்கள். பா.ஜ.க. மேலிடத்தின் மூலம் ஹெச்.ராஜா நியமனம் செய்யப்பட்டார் என்றாலும், அண்ணாமலை கை காட்டியதாலே இந்த பதவி கிடைத்தது. இது அண்ணாமலை போட்ட பிச்சை என்றெல்லாம் அண்ணாமலையின் ஐ.டி. விங் ஆட்கள் செய்தி பரப்பிவருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுப்பது போன்று அடுத்தடுத்து ஹெச்.ராஜா நடத்திவரும் சந்திப்பு மற்றும் […]

தள்ளிப் போகும் விஜய் மாநாட்டு..? தி.மு.க. உள்குத்து

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு வந்துவிட்டால் உதயநிதிக்கு சவாலாக இருப்பார் என்பதால் தி.மு.க.வினர் சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் விஜய் மாநாட்டை நடத்திவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு இடைஞ்சல் செய்துவருவதாக அவரது ரசிகர்கள் கொதிக்கிறார்கள். விஜய் ஜாதகப்படி வட தமிழ்நாட்டில் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் […]

உறக்கத்திலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவி! உயிரை பறித்தது ஆன்லைன் நூடுல்சா?

ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து வாங்கி சமைத்து சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவி உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வீட்டிற்குள் இருந்தபடியே ஆன்லைனில் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்யும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விற்பனையாளர்களும் கண்களை கவரும் வகையில் வண்ண மயமாக விளம்பரங்களை உலாவர செய்கின்றனர். அதிலும் தள்ளுபடி, சலுகை இருந்தால் […]

சீமானுக்கு தமிழரசன் உடும்புக்கறி..? திருமுருகன் காந்தி தமிழ்த்தேச மோதல்

  ‘’நான் முழுத் தேங்காய்க்கு போராடியவன் தோழர் தமிழரசன் தேங்காய் சில்லுக்காக போராடியவர்’’ என்று சீமான் பேசியிருப்பது தமிழ் உணர்வாளர்க்ளிடம் மிகப்பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.    இது வரை சீமானுக்கும் மே 17 இயக்கம் திருமுருகன் காந்திக்கும் இடையில் உள்ளூர நடந்துகொண்டிருந்த மோதல் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக வெடித்திருக்கிறது. சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திருமுருகன் காந்தி, ‘’இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்களாக இருந்தபோதிலும், மேதகு பிரபாகரன் தமிழர்களின் தாயகமாக வடக்கு-கிழக்கை இணைத்த தமிழீழத்தையே தமிழ்த்தேசமென அறிவித்து, போர் […]

அப்பாவும், மகனும் போட்டோஷூட்… நாய் ரேஸ்..?  ரேஸ் முடிஞ்சாலும் விரட்டும் எடப்பாடி

தமிழகத்தில் போதை விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில் முதலீடு என்று ஸ்டாலினும் கார் ரேஸ் என்று உதயநிதியும் போட்டோஷூட் நடத்தினால் போதுமா என்று கடும் கண்டனம் எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன. வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் […]

ஜெகத்ரட்சகன் தில்லுமுல்லுக்கு தி.மு.க.வில் செம மரியாதை. கலைஞர் விருது தர்றாங்கப்பா

ஜெகத்ரட்சகன் தில்லுமுல்லுக்கு தி.மு.க.வில் செம மரியாதை. கலைஞர் விருது தர்றாங்கப்பா   கருணாநிதி என்றாலே ஊழல் என்றொரு கருத்தை விதைப்பதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இயங்கிவருகிறார்கள். எதிர்க் கட்சியின் கருத்துக்கு அங்கீகாரம் கொடுப்பது போன்று சமீபத்தில் 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது கொடுத்து தி.மு.க. அங்கீகாரம் செய்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர், 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு […]