கவர்னர் மாளிகைக்கு பேரை மாத்தியாச்சு… இதுதான் அரசியல் கோமாளித்தனம்

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்’ பெயர் “மக்கள் பவன்” என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை அரசியல் விளையாட்டு மட்டுமே என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் […]
செங்கோட்டையனை பொளந்து கட்டிய எடப்பாடி. கோபியில் ஸ்டாலினுக்கு சவால்

செங்கோட்டையனுக்கு கோவை விமானநிலையத்தில் கிடைத்த வரவேற்புக்கு பதிலடி கொடுப்பது போன்று கோபி சட்டமன்றத் தொகுதியில் பிரமாண்டமான கூட்டத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை அம்பலப்படுத்தியதும், ஸ்டாலினுக்கு சவால் விட்டதும் பரபரப்பாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ‘’எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்! 2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும். இந்த தொகுதியில் […]
அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்… பாஜ விளையாட்டைத் தொடங்குமா..?

’அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்திருக்கும் விவகாரம் பாமகவினரை அதிர வைத்திருக்கிறது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் […]
அண்ணாமலை புதுக்கட்சி..? ஆதரவாளருக்கு கட்டம் கட்டிய நயினார்

அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளரான ஜானிராஜாவை பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் கட்டம் கட்டியிருக்கும் விவகாரம் கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. இதனாலே கும்பகோணம் மீட்டிங்கில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் பாஜ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான மாநாட்டில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. புயல் பாதிப்பு காரணமாக விமானம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும், உண்மையில் அவரது ஆதரவாளரை நீக்கிய நயினாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. நேற்றைய தினம் திருவள்ளூர் மேற்கு […]
டாக்டர் ராமதாஸ்க்கு பாஜக கொடுத்த அல்வா. திமுக கூட்டணிக்கு ரெடி?

டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டிப்பிடித்துள்ளது. கட்சியின் தலைவர் நானே தான் என்று இருவரும் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கட்சியும் சின்னமும் அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பது டாக்டர் ராமதாஸை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. பா.மக.வில் அதிகாரப் போட்டி நடப்பதற்கு முக்கிய காரணமே அண்ணாமலைதான். கடந்த தேர்தலில் அன்புமணி பாஜகவை தேர்வு செய்தார் அன்புமணி. அதற்கு நன்றிக் கடன் போன்று பாமக கட்சியும், சின்னமும் அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் […]
செம குஷியில் செங்கோட்டையன்… ஆப்பு வைக்கும் எடப்பாடி

தவெகவில் சேர்ந்த கையோடு கோவைக்கு வந்த செங்கோட்டையனுக்கு விமான நிலையத்தில் செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை எதிர்பார்க்காத செங்கோட்டையன் குஷியாகியிருக்கிறார். இந்நிலையில் நாளை கோபிசெட்டிப்பாளையத்தில் இபிஎஸ் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதில் செங்கோட்டையனுக்கு செம ரெய்டு விழும் என்கிறார்கள். இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’கோவையில் செங்கோட்டையன் ஆண்டவர்களே மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரே தொகுதியில மீண்டும் மீண்டும் 9 முறை எம் எல் ஏ வாகவும், அமைச்சராவும் இருந்த ஒருவர் […]
தொழிலாளர் சட்டத்துக்கு வெண்குடை வேந்தர் ஸ்டாலின் கப்சிப். கண்சிவக்கும் கம்யூனிஸ்ட்கள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த வாரம் 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை வெளியிட்டது. 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பல்வேறு அம்சங்கள் தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாக இருப்பதாக கூறி இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை அமைதி காப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டம் அறிவிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. பாஜக அரசின் புதிய தொழிலாளர் […]
செங்கோட்டையன் பாணியில் பன்னீர்..? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

செங்கோட்டையன் கட்சியில் சேர்க்கப்பட்டதும் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அடுத்து ஓ.பன்னீர்செல்வமும் கே.பி.முனுசாமியும் வருகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ந்து நிற்கிறார்கள். விஜய் கட்சியில் ஊழல் பெருச்சாலிகள் இருந்தால் எப்படி ஓட்டு கேட்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற செங்கோட்டையனின் ஒருங்கிணைப்புக் குரல் அதிமுகவில் எடுபடவில்லை. எனவே, கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் தலைமையில் செயல்பட்டு […]
உதயநிதி பிறந்த நாளை காலி செய்த விஜய்.. ஜனநாயகன் Vs நிஜநாயகன்

இன்று உதயநிதியின் பிறந்த நாள். இதை கொண்டாட திமுகவினர் தீயாக வேலை செய்துவந்தனர். திமுக ஐடி விங் சார்பில், ‘கழகத் தலைவரின் திராவிட மாடல் அரசுக்குத் தூணாய் துணை நிற்கும் துணை முதலமைச்சர், அறிவுத் திருவிழா நடத்திய ஆற்றல்மிக்க இளம் தலைவர், கருத்தியல் களங்களில் கொள்கை வீரர்களைத் தயார் செய்யும் கழக இளைஞர் அணிச்செயலாளர், உதயநிதிக்கு 49-வது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்…’’ என்று கொண்டாட்ட அறிவிப்பு வெளியிட்டார்கள். தமிழகமெங்கும் ஜனநாயகனுக்கும் நிஜநாயகனுக்கும் போட்டி என்று […]
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செங்கோட்டையா..? விஜய் ரசிகர்களுக்கு குஷி

விஜய் கட்சிக்கு செங்கோட்டையன் வந்தே சேர்ந்துவிட்டார். செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களும் வணக்கம் தெரிவித்திருக்கிறார். அதோடு செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மஞ்சள் சிகப்பு துண்டை அணிவித்து வரவேற்றார். விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி உறுப்பினர் அட்டையை தனது கை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுகிறது. அத்துடன் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படுகிறது. […]

