அயோத்தியாகும் திருப்பரங்குன்றத்தால் தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து..? அலறும் சேகர் பாபு.

இந்திய அரசியலை அயோத்தி மாற்றியது போல் தமிழக அரசியலை திருப்பரங்குன்றம் மாற்றும். அங்கே ஸ்ரீராமன் இங்கே திருமுருகன். அங்கே பாபர், இங்கு சிகந்தர். மிகப்பெரும் எழுச்சி உருவாகி வருகிறது. கந்தன் மலையை கை வைத்தவர், அரசியலில் இனி கந்தல் ஆவது உறுதி என்று தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போர்க்குரல் எழுப்புகிறார்கள். இதற்கு அமைச்சர் சேகர்பாபு இன்று திருப்பரங்குன்றம் போராட்டம் குறித்து, ‘’தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் மதுரையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். […]
ஸ்டாலின் தேர்தல் தாராளம்… மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதுப்புது திட்டங்கள்

திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே இல்லை என்ற சரித்திரத்தை மாற்றி எழுதவேண்டும் என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். மாணவர்கள், பெண்கள் ஆகியோருக்கு புதுப்புது திட்டம் போட்டுவரும் நேரத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் மொத்தமாக 6 சதவீதம். இந்த கடன்களை […]
இந்தியர்களை நாடு கடத்தத் தொடங்கியது அமெரிக்கா..? டிரம்ப்பை நேரில் மிரட்டுவாரா மோடி..?

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை எழுப்பியே டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரம் செய்து, அதனால் வெற்றியும் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில், பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மோடியும் அமெரிக்க அதிபர் டிரெம்பும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்தியர்களுக்குப் பிரச்னை வராது என்றே பலரும் நம்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், […]
அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி உறுதி..? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

வரயிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., சட்டமன்ற எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புதிதாக அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் ஆகிய மூவரும் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் மூவரும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதே அரசியல் பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவை விஜய்க்கு வழங்கப்படுவதாக எடப்பாடி […]
திருப்பரங்குன்றத்தில் தீ…? மதக் கலவரம் தூண்டும் போஸ்டர்கள்

வடக்கு மாநிலங்கள் போன்று தமிழகத்தில் மதக் கலவரங்கள் நடந்தது இல்லை. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் மலை மீது இருக்கும் தர்காவை வைத்து தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி உள்பட பல இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமின்றி, முன்னெச்சரிக்கையாக பலரையும் கைது செய்திருப்பது ஏரியாவை களேபரமாக்கி வருகிறது. இந்த விவகாரம் குறித்துப் பேசும் இந்து முன்னணி […]
ஸ்டாலின் ஆட்சியில் பெண் போலீஸ் அதிகாரிக்கு கொடூரம்… கொதிக்கும் எடப்பாடி

போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாக, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கல்பனா நாயக், குற்றம்சாட்டி இருப்பது ஸ்டாலின் தி.மு.க. அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொண்டுவந்துள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சற்று […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபைனல் நிலவரம். சீமானுக்கு எவ்வளவு ஓட்டு..?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பரிமாற்றத்தை தி.மு.க. ஆரம்பித்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கிறார்கள். வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் சீமான் ஆட்கள் இறங்கிவிட்டதாக தி.மு.க.வினர் ஆவேசம் காட்டுகிறார்கள். இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. விஜய் கட்சியும் களம் இறங்கவில்லை. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி. […]
தேர்தலுக்குத் தயாராகும் தி.மு.க. அரசு..? 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

தமிழ்நாடு அரசு நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவது போல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். விரைவில் வரயிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கணக்கிட்டே இந்த மாற்றம் நடந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதே பாணியில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் நடக்கும் என்று […]
அல்வா பட்ஜெட்… நிர்மலா சீதாராமனை மிரட்டிய ராகுல் காந்தி

தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் சமூகநீதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் பேசி நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடியிருக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘பட்ஜெட் அல்வா’ தயாரிப்பு படத்தைக் காட்டி பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பட்ஜெட் தயாரிப்பதில் 20 அதிகாரிகள் பணியாற்றினர். அவர்களில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். மற்ற […]
இளையராஜாவுக்கு காப்பிரைட் இல்லை… அதிரவைத்த நீதிமன்றம்

தான் இசை அமைத்த பாடல்களை மேடைக் கச்சேரியில் பாடினாலும் காப்பிரைட் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கறார் காட்டியதும், அதனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதும் உண்டு. ஆனாலும், இளையராஜா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்துவருகிறார். இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் உடனே அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். சமீபத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்”, தமிழில் வெளியான “96”, “மெய்யழகன்” உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. “மஞ்சும்மல் […]