ராஜாவுக்கு கூஜா எதுக்கு..? டபுள் ஆக்ட் வேண்டாம் விஜய்

சினிமாவில் விஜய் டபுள் ஆக்ட் செய்தால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதற்காகவே அவ்வப்போது டபுள் ஆக்ட் படம் கொடுப்பார். ஆனால், சமீபத்தில் அப்படி டபுள் ஆக்ட் கொடுத்த கோட் தோல்வியைத் தழுவியிருக்கிறது. சினிமாவைப் போலவே அரசியலிலும் டபுள் ஆக்ட் போடுகிறார் விஜய் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கிறார்கள். திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் மாடலும் தமிழ்த்தேசியத்தைத் தூக்கிப் பிடிக்கும் மாடலும் தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆக போய்க்கொண்டு இருக்கிறது. […]
அண்ணன் சீமான் ஆசையில் மண்ணைப் போட்ட தம்பி விஜய்

என்னுடைய தம்பி என்று விஜய் மீது பாச மழை பொழிந்துவந்தார் நாம் தமிழர் சீமான். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தம்பிக்கு நான் பக்கபலமாக நிற்பேன், கூட்டணிக்கும் வாய்ப்பு உண்டு என்றெல்லாம் கூறிவந்தார். அதோடு விஜய் கட்சி குறித்து வெளிட்ட ஒவ்வொரு கடிதத்துக்கும் வாழ்த்து சொன்னது சீமான் மட்டுமே. விஜய் மாநாட்டுக்குக் கிளம்பிய காலை நேரத்தில் கூட, தம்பி விஜய்யின் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு ஏதாவது பேசுவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தார். […]
விஜய் கையில் பெரியாரின் கைத்தடி. ஸ்டாலினுக்கு அடி நிச்சயம்..?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட கட்சி தொடங்கிய நேரத்தில் பெரியாரை கையில் எடுப்பதற்குப் பயந்தார். அதனால் தான், ‘அண்ணா என் வழிகாட்டி, காமராஜர் என் தலைவர்’ என்று மட்டும் கூறினார். பெரியாரை கையில் எடுத்தால் ஆன்மிக மக்களைக் கவர முடியாது என்றும் பெரியார் கொள்கை பேசும் தி.மு.க.வுடன் தேவையின்றி மோதவேண்டாம் என்றும் நினைத்தார். ஆனால், விஜய் தன்னுடைய முதல் வழிகாட்டி என்றே பெரியாரை கூட்டி வந்திருக்கிறார். ஒரு வகையில் தந்தை பெரியாரை இன்றைய இளம் தலைமுறையிடம் கொண்டுசென்று சேர்க்கும் […]
விஜய்க்கு பாசிசத்தை விட பாயாசமே முக்கியமா..?

விஜய் தன்னுடைய மாநாட்டில் இரண்டு எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்தார். ஒன்று வர்ணாசிரமத்துக்கு எதிராகப் பேசும் கட்சி. இரண்டாவது குடும்ப ஊழல் கட்சி என்று தெளிவாகக் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர், ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா ?’ என்ற கேள்வி கேட்டு ரசிகர்களை புல்லரிக்க வைத்தார். இதன் மூலம் அவரது நேரடி எதிரி ஸ்டாலின், உதயநிதி என்று அடையாளம் காட்டியதாக சிலிர்த்துக்கொள்கிறார்கள். திராவிடமும் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள் என்று கூறிய விஜய் அடுத்தடுத்து […]
தலையாட்டி பொம்மையான மானஸ்தன் திருமாவளவன்..!

அரசியல் களத்தில் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று தெளிவாகப் பேசுபவர், மீடியாக்களிடம் எந்த விஷயம் குறித்தும் பேசுவதற்குத் தயங்காதவர், யாருக்கும் ஜால்ரா போடாதவர் என்று திருமாவளவன் மீது இருந்த அத்தனை மரியாதையையும், மதுவிலக்கு மாநாடு நடத்தி தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளார் திருமாவளவன். தி.மு.க. கூட்டணியில் அடுத்து கமல்ஹாசனும் இணைய இருப்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 6 சீட் வாங்குவதற்கே பெரும் போராட்டம் இருக்கும் என்பதாலே மதுவிலக்கு விவகாரத்தையும் ஆட்சியில் பங்கு என்ற […]
திருமாவளவன் அட்மினின் தேர்தல் கூத்து

தேர்தலில் ஜெயிக்கிற கூட்டணியில் இருக்க வேண்டும் அதேநேரம், கூடுதல் தொகுதிகளும் வாங்கவேண்டும் என்ற ஆசை எல்லா கட்சியினருக்கும் இருக்கவே செய்யும். இதை சாதித்துக்கொள்ள ஒவ்வொரு கட்சியினரும் ஒரு வழியைக் கையாள்வார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் டாக்டர் ராமதாஸ்க்கு வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தைக் கையில் எடுப்பார். வன்னியர்களால் இந்தியாவே திணறும் அளவுக்கு போராட்டம் நடக்கும் என்று எச்சரிக்கை கொடுப்பார். பேரம் முடிந்ததும் அடங்கிவிடுவார். அந்த வழியில் திருமாவளவன் முதலில் மதுவிலக்கு போராட்டத்தைக் கையில் எடுத்தார். ‘தி.மு.க.வும் […]
மக்களுக்கு மட்டும் மரண சாலைகளா உதயநிதி..?!

கடுமையான எதிர்ப்புகளை வென்று ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தி உதயநிதி சாதனை நிகழ்த்திவிட்டார் என்று உடன்பிறப்புகள் வெற்றிக் கொடி கட்டுகிறார்கள். ஃபார்முலா ரேஸ் நடத்துவதன் மூலம் உலகமே சென்னையைத் திரும்பிப் பார்த்திருக்கிறது என்றும் தி.மு.க.வினர் முட்டுக் கொடுக்கிறார்கள். கார் ரேஸ் நடத்தும் அளவுக்கு தரமான சாலைகள் போடுவதை சாதனையாகச் சொல்லும் உதயநிதிக்கு, தமிழகம் முழுக்க நல்ல சாலைகள் போட வேண்டும் என்ற சிந்தனை ஏன் தோன்றவில்லை. ஒவ்வொரு ஊரிலும் மேடு பள்ளங்களில் விழுந்து காயம் அடைபவர்களும் […]
குஜராத்தை அமித் ஷா எச்சரிக்கவில்லையா? வீடு தேடி வரும் மோடியின் முதலை

அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல் காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த கனமழைக்கு இதுவரை 49 பேர் பலியானதாகவும் 1,200 பேர் மீட்கப்பட்டதாகவும் சொல்லப்படும் நிலையில், இடி, மின்னல் தாக்கியும் சுவர் இடிந்து விழுந்தும் இன்னமும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதை விட மோசமாக இந்த வெள்ளத்தில் முதலை, பாம்பு […]
அமெரிக்காவில் சைக்கிளில் பயணித்த மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவில் வசித்துவரும் தமிழர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று வருகின்றனர். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.1,300 கோடிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகாகோ நகருக்கு சென்ற மாலை நேரத்தில் சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிளை ஓட்டி மகிழ்ந்த வீடியோவில் பதிவிட்ட […]
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையில் மம்தாவும் குற்றவாளி..?

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கு இப்போது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்திவருகிறது. கொலை செய்யப்பட்ட ஐந்தாவது நாளில் தான் நாங்கள் விசாரணைக்கு சென்றோம். அதற்குள் அங்கு தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கொல்கத்தா காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தா மருத்துவமனையில் இதே பாணியில் கடந்த 2021ம் ஆண்டு சௌமித்ரா பிஸ்வாஷ் என்ற டாக்டர் கொலை செய்யப்பட்டதாகவும் அந்த கொலை தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது […]

