News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

குஜராத்தை அமித் ஷா எச்சரிக்கவில்லையா? வீடு தேடி வரும் மோடியின் முதலை

அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல் காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த கனமழைக்கு இதுவரை 49 பேர் பலியானதாகவும் 1,200 பேர் மீட்கப்பட்டதாகவும் சொல்லப்படும் நிலையில், இடி, மின்னல் தாக்கியும் சுவர் இடிந்து விழுந்தும் இன்னமும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதை விட மோசமாக இந்த வெள்ளத்தில் முதலை, பாம்பு […]

அமெரிக்காவில் சைக்கிளில் பயணித்த மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவில் வசித்துவரும் தமிழர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று வருகின்றனர். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.1,300 கோடிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகாகோ நகருக்கு சென்ற மாலை நேரத்தில் சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிளை ஓட்டி மகிழ்ந்த வீடியோவில் பதிவிட்ட […]

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையில் மம்தாவும் குற்றவாளி..?

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கு இப்போது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்திவருகிறது. கொலை செய்யப்பட்ட ஐந்தாவது நாளில் தான் நாங்கள் விசாரணைக்கு சென்றோம். அதற்குள் அங்கு தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கொல்கத்தா காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.  கொல்கத்தா மருத்துவமனையில் இதே பாணியில் கடந்த 2021ம் ஆண்டு சௌமித்ரா பிஸ்வாஷ் என்ற டாக்டர் கொலை செய்யப்பட்டதாகவும் அந்த கொலை தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது […]

மோடி எனும் வாய்ச்சொல் வீரர்… கார்ப்பரேட் ஆட்சியே நடக்குதுங்க.

பிரதமர் மோடி மேடைகளில் பேசும்போது, ‘ஒரே ஒரு ஊழலைக் கூட அனுமதிக்க மாட்டேன். நாட்டின் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களின் அத்தனை சொத்துக்களையும் அரசு கஜானாவிற்குக் கொண்டு வருவேன். வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் அத்தனை பணத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து அத்தனை மக்களுக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுப்பேன்’ என்று பேசினார். மோடியின் பேச்சில் மயங்கியே மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டார்கள். நேரு நாட்டையே கெடுத்து வைத்திருக்கிறார். அதனால், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். அத்தனை ஊழல்வாதிகளையும் பிடித்துக் […]

வரலாற்றில் முதல் முறை… தோல்வியடைந்த வினேஷ் போகத்தை கொண்டாடும் இந்தியா.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று நாடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பும், பாராட்டும் கிடைப்பது வழக்கம். வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் ஒரு பரிசும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பிய வினேஷ் போகத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறது.  பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் வினேஷ் போகத். இதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் நிச்சயம் கிடைப்பது உறுதீயாகியிருந்தது. ஆனால், திடீரென 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி […]

நாடாளுமன்றத்தில் மழை நீருக்கு ஹிண்டன்பர்க் அறிக்கை?

பிரதமர் மோடி என்ன செய்தாலும் பிரமாண்டமாகவே இருக்கும். குஜராத்தில் மிகப்பெரிய ஸ்டேடியம், உ.பி.யில் மிகப்பெரிய நெடுஞ்சாலை, அதிவேகத்தில் வந்தேபாரத் என்ற வரிசையில் மிகப்பெரும் நாடாளுமன்றம் கட்டினார். அதேநேரம் எதுவுமே தரமாக இருக்காது.  பாலங்களும், சாலைகளும் அதற்குள் பல்லைக் காட்டிவிட்டன. அதேபோல் நாடாளுமன்றத்திலும் மழை பெய்து அதன் தரத்தைக் காட்டிவிட்டது. இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு எந்தப் பதிலும் இல்லை. அதற்குப் பதிலாக நேருவே குற்றம் சாட்டப்பட்டார். அதாவது, பழைய நாடாளுமன்றத்தை அவர் […]

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு வீழ்ந்த அதானி பங்குகள்!

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தற்போது ரூ.3,100ல் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி இந்த பங்குகள் இன்று (ஆகஸ்ட்.12) 2.75 சதவீதமாக அதாவது ரூ.87.55 ஆக சரிவை சந்தித்துள்ளது.   அதன்படி அதானி போர்ட்ஸ் பங்குகள் இன்று 3.20% அல்லது கிட்டத்தட்ட 49 சதவீத சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரூ.1,484ஆக வர்த்தமாகி வருகிறது.   மேலும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 4.33 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட ரூ.77 ஆக சரிவை சந்தித்துள்ள நிலையில் தற்போது ரூ.1,703 […]

தங்க மகளுக்குத் துரோகம். இந்தியாவுக்கு தலைக்குனிவு

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.  எப்படியும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அதைவிட, அத்தனை கோடி இந்தியர்களின் கனவும் சுக்கு நூறாகிவிட்டது. ஒரே நாளில் 4 […]

மோடியின் பாடி ஸ்ட்ராங்க், பேஸ்மென்ட் வீக். கூட்டணிகளிடம் விலை போன பிரதமர்.

விஸ்வகுரு, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் புகழப்பட்ட பாரதப்பிரதமர் மோடி, தன்னுடைய ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இரண்டு மாநிலக் கட்சிகளிடம் விலை போயிருப்பது இந்த பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரியவந்திருக்கிறது. ஏனென்றால், இதே பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அப்போதெல்லாம் ஆந்திரா, பீகாருக்கு பிரத்யேக நிதி ஒதுக்காத மோடி, இந்த முறை ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இரண்டு அரசுக்கும் மிகப்பெரிய நிதியை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.  மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குற்றமல்ல, அதே கண்ணோட்டத்தில் அனைத்து […]

மைக்ரோசாப்ட் அட்டாக். மனிதர்கள் அனைவரும் தொழில்நுட்ப அடிமைகளா?

இப்போது மனிதர்கள் அனைவருமே செல்போனுக்கும் தொழில்நுட்பத்திற்கும் முழு அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது, மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ஒரு அப்டேட்டில் ஏற்பட்ட குளறுபடி அந்த நிறுவனத்தின் சர்வர் திடீரென முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகளைப் பயன்படுத்தும் அத்தனை நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின.  பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, லேப்டாப் செயலிழந்துள்ளது. உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. […]