News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

போருக்கு வா நைனா….

வரலாறுகளில் மன்னராக ஆட்சியில் இருந்த அப்பா, சகோதரர்களைக் கொலை செய்துவிட்டு மன்னராக முடி சூட்டிக்கொண்ட அரசர்கள் பற்றி நிறையவே படித்திருக்கிறோம். அந்த மன்னர் ஆட்சி அதிகாரத்துக்கு கொஞ்சம் குறையாத அதிகாரம் கொண்டவையாக இன்று கட்சிகள் இருக்கின்றன.கட்சித் தலைமை என்பது அதிகாரம். அந்த போதையிலிருந்து அத்தனை சீக்கிரம் யாரும் விடுபட முடியாது. அதனாலே தள்ளுவண்டியில் செல்லும் நிலை வந்த பிறகும் கருணாநிதி முதல்வர் பதவியை தன்னுடைய மகன் ஸ்டாலினிடம் கொடுக்க முன்வரவில்லை. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகே ஸ்டாலினால் கட்சியையும் […]

ரத்தக் குளியலில் கிரிக்கெட் ரசிகர்கள்

கிரிக்கெட் விளையாட்டை முட்டாள்களின் விளையாட்டு என்று சொல்வார்கள். அந்த விளையாட்டு இப்போது ரத்தம் கேட்கும் வெறித்தனமாக மாறியிருக்கிறது. பெங்களூரு அணி சாம்பியன் கோப்பையை வென்றதும் விராட் கோலியை வானளவுக்குப் புகழ்ந்தவர்கள் இப்போது, அவரை கொலைகாரன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்ததன் மூலம் ஆர்சிபி ஐபிஎல் சாம்பியனாக மாறியது. இதையடுத்து நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம் உற்சாகம் பொழிந்தது. இதையடுத்து பெங்களூருவில் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விதான் சௌதா முதல் சின்னசாமி […]

ஜெய் ஸ்ரீராம் ஆளுநருக்கு கருப்புக்கொடி..? அவமானத்திலும் அவமானம்

எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநரைத் தூண்டிவிட்டு அதிகார மோதல் நடப்பது வழக்கமாக நடப்பது தான். பதவிக் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுடன் மோதுவதை முழு நேரத் தொழிலாக வைத்துக்கொண்டு இருக்கிறார். உச்சநீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் பதவியில் ஒட்டிக்கொண்டு தமிழக அரசுடன் மோதும் ஆளுநருக்கு அவமானம் என்றால் என்னவென்று தெரியுமா என்ற கெள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட வைத்து […]

எடப்பாடி பழனிசாமி முதலையிடமிருந்து தப்புவாரா..?

மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, அந்த கட்சியை உடைப்பது, அதன் பிறகு மாநிலக் கட்சியின் அதிருப்தியாளர்களைக் கொண்டு ஆட்சி அமைப்பது, கடைசியில் அந்த மாநிலக் கட்சியை உருத் தெரியாமல் அழிப்பது என்பது தான் பா.ஜ.க.வின் நீண்ட கால செயல்திட்டமாக இருந்து வருகிறது.கர்நாடகம், மகாராஷ்டிரா, பீகார் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. இந்த வித்தையைக் காட்டி ஜெயித்திருக்கிறது. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். அதனாலே தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி என்று கூறினார். ஆனால், […]

டெல்லிக்கு அடிமை ஆவாரா எடப்பாடி பழனிசாமி..?

ஜெயலலிதா வீட்டு வாசலில் நின்று கூட்டணிக்கு பிச்சை எடுத்த பா.ஜ.க. இப்போது டெல்லிக்கு அதுவும் அமித் ஷா வீட்டுக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அப்படி ஒரு வேளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்ல என்றால், என்ன நடக்கும் என்பதையும் அவர் கண் முன்னே நடத்திக் காட்டுகிறார்கள். அண்ணா தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சித் தலைமையின் அனுமதியும் பெறாமல் மத்திய அமைச்சர்களை டெல்லிக்குப் போய் சந்தித்துப் பேசுகிறார். அதை கேள்வி கேட்க முடியாமல், […]

பெரியார் சாயத்தை வெளுக்கும் சீமான்..?

ஈரோட்டில் வந்து பெரியாரை விமர்சனம் செய்து பார் என்று சவால் விட்ட திராவிட ஆதரவாளர்களை, அங்கேயே போய் நின்று பெரியார் என்பது போலி பிம்பம் என்பதை உடைத்துக் காட்டி, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் சீமான். நடந்துமுடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன.இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்குகள் எல்லாம் சீமானுக்குக் கிடைத்திருக்கின்றன என்று இப்போது திராவிட ஆதரவாளர்கள் […]

சீமானை மிரட்டும் அட்டைக் கத்தி ராஜாக்கள்

ஈரோடு இடைத்தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் ஆளும் தி.மு.க.வினரும் அவரது கூட்டணிக் கட்சியினரும் எப்படிப்பட்ட கோழைகள், அட்டைக் கத்தி ராஜாக்கள் என்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அராஜகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதால் ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் தொகுதியை தலை முழுகிவிட்டன. ஆனாலும், விடாப்பிடியாக எதிர்த்து நின்றவர் நாம் தமிழர் சீமான் மட்டும் தான். அதுவும், பெரியாரை எதிர்த்து நின்றார் என்றே சொல்ல வேண்டும்.பெரியார் விவகாரத்தில் அத்தனை கட்சிகளும் வடிவேலு மாதிரி காமெடி […]

தி.மு.கவுக்கு நான் அடிமை… திருமாவளவனின் இமேஜ் டமால்

தி.மு.க. மீது மன்னராட்சி என்று கடுமையாக விமர்சனம் வைத்த ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’திருமாவளவனின் மனசாட்சியே ஆதவ் அர்ஜூனா என்பதும் திருமா பேச நினைப்பதை ஆதவ் பேசுகிறார். அதனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்’’ என்று நம்பிக்கொண்டு இருந்தனர்.  அம்பேத்கர் புத்தக வெளியீட்டு பேசிய விஜய், ‘இன்று கூட்டணி அழுத்தம் காரணமாக திருமாவளவன் இங்கு இல்லை என்றாலும் அவரது மனம் இங்குதான் இருக்கிறது’’ […]

விஜய் நல்லா அரசியல் காமெடி பண்றாரு… இனி, பிணத்தை பனையூருக்கு தூக்கிட்டுப் போங்க.

காமெடி நடிகர்கள் எல்லாம் நாயகனாக உருமாறும் நேரத்தில் சூப்பர்ஹிட் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், வடிவேலு டைப் காமெடியனாக மாறி அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களை பனையூர் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கி ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.  நலத்திட்ட உதவிகள் செய்த பிறகு, ‘’உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து நான் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம் ஆனால் உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் […]

திருமாவளவனின் விசுவாசத்துக்கும் தன்மானத்துக்கும் செம போட்டி

கொள்கை வீரர், லட்சியப் போராளி என்றெல்லாம் அரசியல் ஆசான் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் மேடைக்கு மேடை போற்றிப் புகழப்படும் திருமாவளவனின் கூட்டணிக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அவரது ஸ்டாலின் விசுவாசத்திற்கும் தன்மானத்திற்கும் இடையில் கட்சியின் மானமும் மதிப்பும் ஊஞ்சலாடுகிறது.  நேற்று முளைத்த காளான் விஜய் கூட, நான் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் ஆட்சியில் பங்கு கொடுப்பேன் என்று அறிவித்து திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், ‘நல்லவர்கள் பக்கம் திருமாவளவன் நிற்பார்’ என்று அவருக்காக […]