News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திமுகவின் ரவுடித்தனம் திருமாவளவனுக்கும் வந்திடுச்சா..? நடுரோட்டில் வன்முறை களேபரம்

பிரியாணி கடை தொடங்கி திமுகவினர் செல்லும் இடமெல்லாம் வன்முறை தாண்டவமாடுவது வழக்கம். அதே வழியில் திருமாவளவனும் அடிதடியை ஆதரிக்கிறாரோ என்பது போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. சென்னை நந்தம்பாக்கம் 158வது வட்ட அதிமுக கழக செயலாளரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தியின் ஸ்கூட்டர் நேற்று விசிக தலைவர் கார் மீது லேசாக மோதியதாக சொல்லப்படுகிறது. இதற்கு திருமாவளவன் கண் முன்பு உயர்நீதிமன்ற வாசலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறு விபத்தை பெரிதுபடுத்தி சட்டம் ஒழுங்கிற்கே நீதிமன்ற வாயிலிலேயே சவால் விட்டுள்ளனர். இதையெல்லாம் காருக்குள் […]

செங்கோட்டையனை அவுட் ஆக்கிய எடப்பாடி. அடுத்து யாரு அமித்ஷா..?

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையனுடைய பதவிகளை புடுங்கிப் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, டெல்லியில் போய் ஒப்பாரி வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியவர்களை எப்படியாவது மீண்டும் கட்சிக்குள் நுழைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். எல்லோருக்கும் எடப்பாடி பழனிசாமி டாட்டா காட்டிவிட்டார். இந்த தேர்தலுக்குள் கட்சிக்குள் நுழையவில்லை என்றால் தங்கள் அரசியலுக்கு எண்ட் கார்டு கிடைத்துவிடும் என்பதால் எல்லோரும் ஒன்று சேர்ந்து செங்கோட்டையனை […]

தர்மயுத்தம் பன்னீர் இப்போது கோமாளி பன்னீராக மாறிட்டாருங்க…

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய நேரத்தில், ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியாகப் பார்க்கப்பட்டார். நியாயத்துக்கும் நீதிக்கும் பன்னீர் போராடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது போராட்டம் எல்லாமே ஒரு துணை முதல்வர் பதவியிலேயே முடிந்து போனது.அதன்பிறகு அவர் எடுத்த எல்லா முடிவுகளுமே அவருக்கு எதிராக அமைந்தது. தலைமைக் கழகத்தை கைப்பற்றப் போவதாகச் சொல்லி, கதவை உடைத்து கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டார். எடப்பாடியுடன் பொதுச்செயலாளர் போட்டி போட முடியாமல் தோற்றுப் போனார். அதன்பிறகு மோடியின் கைப்பாவையாக […]

பன்னீருக்கு காலில் விழுவதெல்லாம் சகஜமப்பா… அடுத்தது விஜய் கால்கள்..?

அரசியல் என்று வந்துவிட்டாலே அவமானம், ரோஷம், மதிப்பு, மரியாதை என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்பதற்கு வாழும் சாட்சியாக மாறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா காலில் விழுந்தார். அடுத்து சசிகலா காலில் விழுந்தார். அதன்பிறகு தினகரன் காலில் விழுந்தார். அதன்பிறகு குருமூர்த்தி பேச்சைக் கேட்டு அவர் காலில் விழுந்தார். அவர் சொன்னதைக் கேட்டு மோடியின் காலில் விழுந்தார். மோடியின் உத்தரவுப்படி எடப்பாடியின் காலில் விழுந்தார். துணை முதலமைச்சராக காலத்தை ஓட்டினார். ஆட்சி போனதும் எடப்பாடியின் கால்களுக்குப் பதிலாக மீண்டும் மோடியின் காலில் […]

பேய்க்கும் பிசாசுக்கும் சண்டை… பா.ம.க. பரிதாபம்

பதவிக்காக ராஜ குடும்பத்தினர் ஒருவரையொருவர் கொலை செய்தார்கள், காலை வாரினார்கள், குடும்பத்தை அழித்தாகள் என்றெல்லாம் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். அப்படியொரு சம்பவத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. அதாவது, பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் அதிகார சண்டை அது.சைக்கிளில் போய் வன்னியர் சங்கத்துக்கு ஆதரவு திரட்டி பாமகவை பிரமாண்ட கட்சியாக வளர்த்தவர் டாக்டர் ராமதாஸ். சைக்கிளில் போன ராமதாஸ்க்கு இப்போது ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் வந்திருக்கிறது. வன்னியர் சங்கத்தின் பெயரில் இருக்கும் […]

அழுகையை நிறுத்துங்க வைகோ… அரசியல் துரோகி நீங்கதான்

மு.க.முத்துவை திமுகவில் வாரிசாக கருணாநிதி முன்னிறுத்திய நேரத்தில் எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். அந்த ஒரு காரணத்தால் 10 ஆண்டுகள் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுமாறினார்.  அதன் பிறகு மு.க.ஸ்டாலினை கட்சிக்குள் திணித்து முக்கியப் பதவிக்குக் கொண்டுவர நினைத்தார். இதற்கு வைகோ இடையூறாக இருப்பது தெரியவந்ததும், அவருக்குத் துரோகி பட்டம் கட்டி வெளியே அனுப்பினார். என்னை துரோகி என்று சொல்லி முதுகில் குத்திவிட்டதாக ஒவ்வொரு ஊராகச் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் வைகோ. இப்போது […]

அனகோண்டா பிடியில் எடப்பாடி பழனிசாமி… காப்பாற்றுவாரா விஜய்?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவே காரணம் என்று சொல்லி கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இல்லாமல் தேர்தலில் நின்று வாஷ் அவுட் ஆனார். அதன் பிறகு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்தார். இந்நிலையில் திடீரென டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிசாமி மூன்று கார் மாறிச்சென்று அமித்ஷாவை சந்தித்தார். எடப்பாடியை அருகில் வைத்துக்கொண்டு அமித்ஷா கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது எடப்பாடி […]

கமல்ஹாசனுக்கு கட்டப் பஞ்சாயத்து..?

அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள், வாய் கிழியப் பேசுகிறார்கள். அவற்றை எல்லாம் பேச்சுரிமை என்று கண்டுகொள்ளாத நீதிமன்றம் கமல்ஹாசனின் கன்னட பேச்சை மட்டும் வில்லங்கமாக எடுத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கச் சொல்வது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது” என்று போகிற போக்கில் ஒரு கருத்து கூறியதை அடுத்து கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. கன்னட இலக்கிய பரிசத் இந்த கருத்தை நீதிமன்றத்தில் எதிர்த்தது. இதையடுத்து கர்நாடக […]

போருக்கு வா நைனா….

வரலாறுகளில் மன்னராக ஆட்சியில் இருந்த அப்பா, சகோதரர்களைக் கொலை செய்துவிட்டு மன்னராக முடி சூட்டிக்கொண்ட அரசர்கள் பற்றி நிறையவே படித்திருக்கிறோம். அந்த மன்னர் ஆட்சி அதிகாரத்துக்கு கொஞ்சம் குறையாத அதிகாரம் கொண்டவையாக இன்று கட்சிகள் இருக்கின்றன.கட்சித் தலைமை என்பது அதிகாரம். அந்த போதையிலிருந்து அத்தனை சீக்கிரம் யாரும் விடுபட முடியாது. அதனாலே தள்ளுவண்டியில் செல்லும் நிலை வந்த பிறகும் கருணாநிதி முதல்வர் பதவியை தன்னுடைய மகன் ஸ்டாலினிடம் கொடுக்க முன்வரவில்லை. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகே ஸ்டாலினால் கட்சியையும் […]

ரத்தக் குளியலில் கிரிக்கெட் ரசிகர்கள்

கிரிக்கெட் விளையாட்டை முட்டாள்களின் விளையாட்டு என்று சொல்வார்கள். அந்த விளையாட்டு இப்போது ரத்தம் கேட்கும் வெறித்தனமாக மாறியிருக்கிறது. பெங்களூரு அணி சாம்பியன் கோப்பையை வென்றதும் விராட் கோலியை வானளவுக்குப் புகழ்ந்தவர்கள் இப்போது, அவரை கொலைகாரன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்ததன் மூலம் ஆர்சிபி ஐபிஎல் சாம்பியனாக மாறியது. இதையடுத்து நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம் உற்சாகம் பொழிந்தது. இதையடுத்து பெங்களூருவில் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விதான் சௌதா முதல் சின்னசாமி […]